பிரிவுகள்

அழகு குறிப்புகள்

ஆன்மீகம்

உடல் ஆரோக்கியம்

உறவுகள்

கதை

கவிதைகள்

சமையல் குறிப்புகள்

ஜோதிடம்

தத்துவம்

தாய்-குழந்தை

பொது அறிவு

வாழ்த்துக்கள்

வீடு பராமரிப்பு

Cinema

Tamil SMS

அண்ணன் தங்கை பாசமலர் கவிதைகள்

Funway
18:47:11 2017-08-22 குழந்தைகள் கவிதைகள்

தோள் கொடுப்பாள்
தோழி அல்ல ,
மெய் அன்பு தந்தாள்
தாயும் அல்ல .

உரிமையாய் உறவாடும்
என் உயிரின் வரவு நீ ,
என் உடன்பிறவாத
உன்னத உறவும் நீ !

தங்கையும் இன்றி ,
தமக்கையும் இன்றி
தன்னந்தனியாய்
தரணியில் நின்றேன் ,

உடன் பிறப்பென்று
ஆண் ஒன்று உண்டு .
உன் போல் உறவாய்
ஒருவரும் இல்லை.

(தெத்துப்பல்) சிரிப்பழகி
திகட்டாமல் பேசிடுவாள் .
முத்துப்பல் புன்னகையால்
முழு அன்பினையும் காட்டிடுவாள் .

சின்ன சின்ன தீம் சொற்கள்
தென்றலாய் வீசிடுவாள் ,
(அரிசிமூட்டை )என்றே எனை
ஆவலாக கூப்பிடுவாள் ...

கள்ளமில்லா அன்பு என்றால்
என்னவென்று நான் அறிந்தேன் .
கள்ளி அவள் அன்பினிலே
கற்கண்டாய் நான் கரைநேதேன் !

அக்கா என நான் அழைக்க
அழைப்புகண்டு மகிழ்ந்திடுவாள் ,
போடி என்றோ சொல்லிவிட்டால்
கொஞ்சும் கோபத்தில் சினந்திடுவாள் .

தவறுகள் நான் செய்தாலும்
தண்டனைகள் தரமாட்டாள் ,
தரமான போதனையால்
என் தவறினையும் திருத்திடுவாள் ...

உயர உயர நான் செல்ல
உளமார வாழ்திடுவாள் ,
என்னில் ஊரு ஏதும் நேர்ந்துவிட்டால்
அவள் உள்ளத்தால் உருகிடுவாள் ...

நிலவொளியின் நிறம்கூட
நிமிடத்தில் மாறிடலாம் ,
நிஜமான நின் அன்பு
நீளும் என்றும் குறையாதே ..

தன்னம்பிக்கை தந்திடுவாள்
தங்கமான தமக்கை அவள் ,
என் கவிதைக்கு முதல் வாழ்த்து
மூத்தவளே உன் வாழ்த்து .........

உனை ஒப்பிட்டு கவிதை சொல்ல
இப்பூவுலகில் எவரும் இல்லை ,
என் வரிகளுக்கு வலிமை தரும்
கலைமகளே நீ என்பேன் !

( சுமதி ) என்ற சுந்தரியே - தமிழ்
தாயின் செல்ல புத்திரியே ,
உன் இல்வாழ்வு இனிதாக
இந்த இளையவனின் பிரார்த்தனைகள் ...

மறுஜென்மம் ஒன்றிருந்தால்
உன் உடன்பிறப்பாய் வரவேண்டும்
இல்லை உந்தன் மடிதவழும்
மகனாகும் வரம் வேண்டும்.............

உங்கள் கருத்தைத் தெரிவிக்க

Comments

தேடல்

Copyrights © 2014. All rights reserved. Ablywall