பிரிவுகள்

அழகு குறிப்புகள்

ஆன்மீகம்

உடல் ஆரோக்கியம்

உறவுகள்

கதை

கவிதைகள்

சமையல் குறிப்புகள்

ஜோதிடம்

தத்துவம்

தாய்-குழந்தை

பொது அறிவு

வாழ்த்துக்கள்

வீடு பராமரிப்பு

Cinema

Tamil SMS

வடிகட்டி -  அழகு குறிப்புகள் , கூந்தல் அழகு

கூந்தல் பராமரிப்பு - முடி மிருதுவாக இருக்க

எழுதியவர்-   Funway
19:55:01 2014-02-25 கூந்தல் அழகு

*முடி மிருதுவாக இருக்க சீத்தாப்பழ விதைகளைப் காயவைத்து பொடியாக்கி,அதை  சீயக்காயுடன் சேர்த்து அரைத்து கொள்ள வேண்டும்.இதை வாரம் இரு முறை  தலைக்கு தேய்த்து குளித்து வந்தால் முடி பட்டு போல் மிருதுவாக மாறும்.  
*பெண்களுக்குப் உள்ள மிக பெரிய பிரச்னை பேன்தான். இதை ஒழிக்க இரவில் தலையணைக்கு அடியில் செம்பருத்திப் பூ இலைகளை வைத்துப் படுத்து வந்தால் பேன்கள் ஒழியும்.
அதேசமயம், இந்த செம்பருத்திப் பூக்களையும் கற்பூரப் பொடி இரண்டையும் தேங்காய் எண்ணெயுடன் சேர்த்து தலைக்குத் தடவிக் கொண்டால் பேன்கள் ஓடிவிடும்.

மேலும் »

ஆரோக்கியமான கூந்தலுக்கு

எழுதியவர்-   Funway
19:53:52 2014-02-25 கூந்தல் அழகு

*தலை முடியின்  வறட்டுத் தன்மையைப் போக்கி, ஜொலி ஜொலிக்க வைக்கும் சக்தி  ஆரஞ்சு தோல் தோலுக்கு உண்டு.  உலர்ந்த ஆரஞ்சு தோலுன், துண்டுகளாக்கிய வெட்டிவேர், சம்பங்கி விதை, பூலான் கிழங்கு, கடலை பருப்பு, பயந்தம் பருப்பு, கசகசா இவை ஒவ்வொன்றும் தலா  250  ௦கிராம் எடுத்து, மெஷினில் கொடுத்து அரைத்துக் கொள்ளுங்கள்.  
இந்தப் பவுடரை வாரம் ஒரு முறை தலைக்குத் தேய்த்து குளித்து வந்தால்.   முடி பளபளப்பாகவும், வாசனையாகவும் இருக்கும்.   இந்த பவுடரை உடம்புக்கும் தேய்த்து குளிக்கலாம்,வாசனை பவுடராகவும்  இதை பயன்படுத்தலாம்.       

*கூந்தலுக்கு எப்பொழுதும் இறுக்கமாக "க்ளிப்" போடக்கூடாது.இவ்வாறு செய்தால் முடி உடைந்து போகும்.    
*வாரம் ஒரு முறை கண்டிப்பாக ஆயில் மசாஜ் செய்து கொள்ள வேண்டும்.அப்பொழுது தான் உதிராமல் நன்கு வளரும்.ஆலிவ் ஆயில் பயன்படுத்தி முறையாக மசாஜ் செய்தால், அது கூந்தலை வலுப்படுத்துவதுடன், கூந்தல் உதிர்வு மற்றும் முடி நரைத்தல் போன்றவை ஏற்படாமல் தடுக்கும்.

மேலும் »

பொடுகை விரட்ட வேப்பம்பூ

எழுதியவர்-   Funway
19:46:31 2014-02-25 கூந்தல் அழகு

காய்ந்த வேப்பம்பூவில் [உப்பு கலக்காத வேப்பம்பூ] 50 கிராம் -  அதை 100 கிராம் தேங்காய் எண்ணெயில் போட்டு நன்கு காய்ச்ச வேண்டும். இளம் சூடு பதத்திற்கு ஆறியதும், வேப்பம் பூவுடன் சேர்த்து எண்ணெயை தலையில் நன்றாகத் தேய்த்து அரை மணிநேரம் ஊறிக் குளித்தால், பொடுகு பிரச்னை தீரும்.


அதிகம் பொடுகு உள்ளவர்கள், வாரத்திற்கு ஒரு முறையோ, இரண்டு முறையோ, மூன்று வாரங்கள் குளித்தால் பொடுகு சுத்தமாக நீங்கி விடும்.

மேலும் »

அடர்த்தியான தலைமுடிக்கு

எழுதியவர்-   Funway
19:45:34 2014-02-25 கூந்தல் அழகு

1. வாரம் ஒருமுரை தலைக்கு குளிக்கும் ஒரு மணி நேரத்திற்க்கு முன்பாக,தலையில் வேர் முதல் நுனி வரை சுத்தமான வெண்ணையை தடவி,massage செய்யவும் .பின்பு சீயக்காய் தேய்த்து குளிக்கவும்.

2 .தலையில் முட்டையின் வெள்ளையை மட்டும் தனியாக எடுத்து,

அதனை தலைக்கு தடவி பின் 30நிமிடம் கழித்து அதேபோல் கழுவவும்.

3 .ஒவ்வொரு வாரமும்,தலைக்கு குளிக்கும் முதல் நாள் இரவே தலையில் தேங்காய் எண்ணையையும் ஆலிவ் எண்ணையையும் தடவி massage செய்து கொள்ளவும்.

கண்டிப்பாக ஒரு மாதமாவது தொடர்ந்து செய்யவெண்டும். பலன் கிடைக்கும்.

மேலும் »

தேடல்

Copyrights © 2014. All rights reserved. Ablywall