பிரிவுகள்

அழகு குறிப்புகள்

ஆன்மீகம்

உடல் ஆரோக்கியம்

உறவுகள்

கதை

கவிதைகள்

சமையல் குறிப்புகள்

ஜோதிடம்

தத்துவம்

தாய்-குழந்தை

பொது அறிவு

வாழ்த்துக்கள்

வீடு பராமரிப்பு

Cinema

Tamil SMS

வடிகட்டி -  உடல் ஆரோக்கியம் , ஆரோக்கியம்

What are the symptoms of cancer?

எழுதியவர்-   Funway
18:09:30 2014-12-17 ஆரோக்கியம்

கேன்சரின் அறிகுறிகள் என்னென்ன?

கேன்சருக்கு குறிப்பிட்ட அறிகுறிகள் என்று எதுவும் கிடையாது. கேன்சர் ஏற்படும் உடல் பாகங்கள் பொருத்து அறிகுறிகள் வேறுபடும். கேன்சர் ஏற்படும் உடல்பாகங்களில் கோளாறு ஏற்பட்டு, அவை வழக்கம் போல செயல்படாமல் போகும். அவ்வாறு செயல்படாமல் போகும் போது, மருத்துவரும் மற்றவர்களும் அந்த உடல் பாகத்தில் பொதுவாக ஏற்படும் நோய் எனக்கருதி அதற்கான பரிசோதனைகளையும், மருந்துகளையும் அளிப்பார்கள். அந்த பரிசோதனைகள் சிலவற்றில், மருத்துவர் நினைத்த நோய்கள் இருப்பதாக முடிவுகளும் கிடைக்க வாய்ப்பு உண்டு. ஏனெனில் பல நேரங்களில் கேன்சர் வேறு சில நோய்களின் அறிகுறிகளையே காட்டும். எடுத்துக்காட்டாக நுரையீரல் புற்றுநோய், காசநோயின் அறிகுறிகளையே ஆரம்பத்தில் காட்டும்.

கொடுக்கப்பட்ட மருந்துகள் செயல்படாமல் போனவுடனேதான், மருத்துவர்களுக்கும் மற்றவர்களுக்கும் இது புற்றுநோயாக இருக்கலாம் என்ற சந்தேகம் வரும். அந்த சந்தேகம் வரும் வேளையில், கேன்சர் செல்கள் மற்ற உடல் பாகங்களுக்கு பரவி இருக்கலாம். இதனால்தான், கேன்சர் ஏற்பட்டு இருப்பதை உடனே கண்டுபிடிக்க முடியாமல் போகிறது. ஆகவே இந்த தாமத்திற்கு காரணம் கேன்சரின் தன்மையே தவிர மருத்துவர்களோ அல்லது மற்றவர்களோ கிடையாது!

மேலும் »

How can the existence of cancer?

எழுதியவர்-   Funway
18:08:36 2014-12-17 ஆரோக்கியம்

எந்த வகையில் கேன்சர் இருப்பதை அறியலாம்?
கேன்சர் இருப்பதை எவ்வாறு அறியலாம்?

கேன்சர் இருப்பதை வெறும் கண்களால் பார்த்து அறிய முடியாது.

1. பயாப்ஸி சோதனை - கட்டியின் ஒரு பகுதியை எடுத்து, அதன் செல்களை, நுண்ணோக்கி/மைக்ரோஸ்கோப்பில் வைத்து சாதாரண செல்களுடன் ஒப்பிட்டு பார்ப்பது

2. ஸ்கேன்/மேமொகிராம்/ஸ்கோப்பி - கட்டி உள்ள இடத்தை காட்சி படமெடுத்து, அதனை ஆராய்வது.

மேலும் »

What Causes Cancer?

எழுதியவர்-   Funway
18:06:13 2014-12-17 ஆரோக்கியம்

கேன்சர் ஏற்பட காரணங்கள் என்னென்ன?

செல்களில் உள்ள டி.என்.ஏ-வில் ஏற்படும் பாதிப்பே கேன்சர் ஏற்பட காரணமாகும். அந்த பாதிப்பை ஏற்படுத்துபவை எவை எவை என ஆராய்ச்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன. சில காரணங்கள் கண்டுபிடிக்கப்பட்டு இருக்கின்றன. மேலும் பல காரணங்கள் கண்டுபிடிக்கப்பட வேண்டும் . ஒரு மிக முக்கிய கேன்சரை உருவாக்கும் பொருளாக கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது புகையிலை! கிட்டத்தட்ட 45% புற்றுநோய்கள் புகையிலையால் ஏற்படுகிறது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதனால்தான், “புகையிலை கேன்சரை உருவாக்கும்” என்ற எச்சரிக்கை வாசகம் இப்போது பரவலாக்கப்பட்டிருக்கிறது

மேலும் புகையிலை என்பது கேன்சர் ஏற்படுவதற்கு இருக்கும் பல காரணங்களில் ஒன்று மட்டுமே. சில வகை கிருமிகள், டின்.என்.ஏ வில் பாதிப்பு ஏற்படுத்தி புற்றுநோய் ஏற்பட மறைமுக காரணமாய் இருக்கிறன.
ஹுமன் பாப்பிலோமா வைரஸ் - கருப்பை வாய் புற்றுநோய் ஏற்பட மறைமுக காரணமாக இருக்கிறது
எச்-பிலின் வைரஸ் - இரைப்பை புற்றுநோய் ஏற்பட மறைமுக காரணமாக இருக்கிறது.
கேன்சர் என்பது ஒரு பரம்பரை நோயல்ல. சில குறிப்பிட்ட வகை கேன்சர்கள் 5 முதல் 10 சதவீதம் மட்டுமே பரம்பரையாக ஏற்படுகின்றன. ஆகவே கேன்சரால் பாதிக்கப்பட்டவரின் குழந்தைகள் இது பற்றி பயப்பட வேண்டாம். வேண்டுமானால் அவ்வபோது உரிய பரிசோதனைகள் செய்து கொள்ளலாம்

மேலும் »

Medicinal properties of bitter gourd

எழுதியவர்-   Funway
12:19:27 2014-12-17 ஆரோக்கியம்

பாகற்காய் மருத்துவ குணங்கள்
 கசக்கும் காய் என்றாலும் பாகற்காயை சமையலில் சேர்த்துக் கொள்வதில் இருந்தே இதன் முக்கியத்துவம் புரியும். அதிலுள்ள சத்துக்களை பட்டியலிடுவோம்...

* பாகற்காயின் அறிவியல் பெயர் மொமோர்டிகா சாரன்டியா. தெற்கு ஆசியாவை தாயகமாகக் கொண்டவை. தற்போது ஆசியநாடுகள் முழுமையும் பரவலாக விளைகிறது. ஆண்டு முழுவதும் சந்தையில் விற்பனைக்கு கிடைக்கும்.

* குறைந்த ஆற்றல் வழங்குபவை பாகற்காய்கள். 100 கிராம் பாகற்காயில் 17 கலோரி ஆற்றலே உடலுக்கு கிடைக்கிறது.

* பாகற்காயின் விதைகள் எளிதில் ஜீரணமாகும் நார்ப்பொருட்கள், தாதுஉப்புக்கள், வைட்டமின்கள், நோய் எதிர்ப்பு பொருட்களைக் கொண்டது. * 'பாலிபெப்டைடு-பி' எனப்படும் குறிப்பிடத் தக்க சத்துப்பொருள் பாகற்காயில் காணப்படுகிறது. இதனை தாவரங்களின் 'இன்சுலின்' என்று கருதுகிறார்கள். ஏனெனில் தாவரங்களில் சர்க்கரை மிகுதியாகாமல் கட்டுப்படுத்துவது இதுதான்.

* உடற்செயலின் போது 'சாரான்டின்' எனும் பொருளை பாலிபெப்டைடு-பி உருவாக்குகிறது. சாரான்டினானது குளு கோசை அதிகம் கிரகித்து சர்ச்கரையின் அளவை உடலில் கட்டுக்குள் வைக்கிறது. எனவே நாம் பாகற்காயை உண்ணுவதால் 'டைப்-2' நீரிழிவில் இருந்து பாதுகாப்பு தருகிறது பாகற்காய்.

* பாகல் விதையில் சிறப்புமிக்க சத்துப்பொருளான போலேட் உள்ளது. 100 கிராம் பாகற்காயில் 72 மைக்ரோகிராம் போலேட் உள்ளது. இது கருவில் வளரும் குழந்தைக்கு நரம்பு பாதிப்புகள் உருவாகாமல் தடுப்பதில் முக்கியப் பங்கு வகிக்கும் தாதுவாகும்.

* சிறந்த நோய் எதிர்ப்பு பொருளான வைட்டமின்-சி, பாகற்காயில் மிகுதியாக உள்ளது. 100 கிராம் பாகல் விதையில் 84 மில்லிகிராம் வைட்டமின்-சி உள்ளது. இயற்கை நோய் எதிர்ப்பு பொருளான இது, தீங்கு விளைவிக்கும் பிரீ-ரேடிக்கல்களை விரட்டியடிக்கும்.

* பீட்டா கரோட்டின், ஆல்பா கரோட்டின், லுடின், ஸி-சாந்தின் போன்ற புளோவனாய்டுகள் உள்ளன. அத்துடன் வைட்டமின்-ஏ சிறந்த அளவில் உள்ளது. இவை புற்றுநோயை உருவாக்கும் பிரீ-ரேடிக்கல்களை விரட்டுவதோடு, வயது மூப்படைவதில் இருந்தும், வியாதிகள் தாக்காதவாறும் காக்கும்.

* ஜீரண சக்தியை அதிகரிக்கும் ஆற்றல் பாகற்காய்க்கு உண்டு. மலச்சிக்கல் மற்றும் அஜீரணத்தை போக்கும்.

* வைட்டமின்-பி3, வைட்ட மின் பி-5, வைட்டமின்-பி6 போன்ற அத்தியாவசிய வைட்டமின்களும், இரும்பு, துத்தநாகம், பொட்டாசியம், மாங்கனீசு மற்றும் மக்னீசியம் போன்ற முக்கியத் தாதுக்களும் பாகற்காயில் இருந்து உடலுக்கு கிடைக்கிறது.

* பாகற்காய், எச்.ஐ.வி.க்கு எதிரான நோய்த்தடுப்பு சக்தியை வழங்குவதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

மேலும் »

Benefits of Bitter Gourd

எழுதியவர்-   Funway
12:20:40 2014-12-17 ஆரோக்கியம்

உடலுக்கு உகந்த பாகற்காய் - பாகற்காய் பயன்கள்
பாகற்காய் பெரும்பாலும் உடலுக்கு நல்லது என்று எல்லோருக்கும் தெரியும். ஆனால் அதன் கசப்புச் சுவைக்காக பலர் அதனை விரும்புவதில்லை.

அவ்வாறு இல்லாமல், அறுசுவைகளில் நமது உடலுக்கு நல்லதைத் தரும் இந்த கசப்புச் சுவையிலான பாகற்காயை வாரத்தில் ஒரு முறையாவது உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.
பொதுவாக பாகற்காய் உடலுக்கு உஷ்ணத்தைக் கொடுக்கும். பாகற்காயில் இரண்டு வகைகள் உண்டு. பொடியாக இருக்கும் பாகற்காயை மிதி பாகற்காய் என்றும், நன்கு பெரிதாக நீளமாக இருப்பதை கொம்பு பாகற்காய் என்றும் அழைக்கிறார்கள்.
பாகற்காயை நாம் எப்படி வேண்டுமானாலும் சமைத்து சாப்பிடலாம். புளியுடன் சேர்த்து பாகற்காயை சமைப்பது சிறந்தது என்று சொல்லப்படுகிறது.
நீரிழிவு வியாதி உள்ளவர்கள் பாகற்காய் சாப்பிட்டால் மிகவும் நல்லது. அவர்கள் மட்டுமல்லாமல் ஜூரம், இருமல், இரைப்பு, மூலம், வயிற்றில் பூச்சித் தொல்லை இருப்பவர்களும் பாகற்காயை உண்ணலாம்.

மேலும் »

பேரிச்சம் பழம் சாப்பிடுங்க உடல் வலிமையை பெறுங்கள்

எழுதியவர்-   Funway
08:41:43 2014-08-24 ஆரோக்கியம்


ரத்த விருத்திக்கான இயற்கை மருந்து பேரீச்சை. பேரீச்சையில் இரும்புச்சத்து மட்டுமல்ல,விற்றமின் ஏ, சுண்ணாம்புச் சத்தும் நிறைந்துள்ளது. தசை வளர்ச்சியை அதிகரித்து, உடல் வலிமையைப் பெருக்கும் இந்தப் பழம், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் கண்டிப்பாக சாப்பிட வேண்டிய அருமையான பழம்.

தினமும் ஒரு பேரீச்சம்பழம் சாப்பிட்டு வந்தால் இதயம் வலுப்பெறும்.

தினமும் இரண்டு பேரீச்சம்பழத்துடன் ஒரு டம்ளர் பால் சாப்பிட்டு வந்தால் ரத்தம் விருத்தியடையும்.

இனிப்பு உணவுகளைத் தவிர்த்துத் தவிக்கும் சர்க்கரை நோயாளிகள் கூட தாராளமாக பேரீச்சம் பழம் சாப்பிடலாம். பேரீச்சம் பழத்தில் உள்ள இனிப்பால் அவர்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது.

ஒரு டம்ளர் பேரீச்சம் பழத்தை அரைத்துக் கலந்து சாப்பிட்டு வர எலும்பு வலுப்பெறுவதுடன், உடல் வலிமையும் கூடும்.

எங்கேனும் அடிபட்டதால் அதிக ரத்தப் போக்கு ஏற்பட்டவர்கள் தினமும் பேரீச்சம்பழம் சாப்பிட்டு வந்தால், இரத்த இழப்பை விரைவில் ஈடுகட்டலாம்.

வெண்குஷ்டம் இருப்பவர்கள் பேரீச்சம்பழ சாறு குடிக்கலாம். இது இரத்தத்தில் சிவப்பணுக்களை அதிகரிக்கச் செய்து, நோய் எதிர்ப்புச் சக்தியைக் கொடுக்கும்.

தினசரி இரவில் 3 பேரீச்சம்பழம் சாப்பிட்டு சுடுதண்ணீர் அருந்தினால் மலச்சிக்கலைத் தரும் மந்தமான மலக்குடல் சுறுசுறுப்பாகி மலம் சுலபமாக வெளியேறும்.

பேரீச்சம் பழத்தை பிற பழங்களுடன் கலந்து சாலட் ஆக செய்து சாப்பிட வாதம், பித்தம், முட்டி வீக்கம் குணமாகும்.

பேரீச்சம் கொட்டையை வறுத்து பொடி செய்து, “காபி” போல் பால் சர்க்கரை கலந்து பருகலாம். உடலுக்கு உரமளிக்கும் இதனை வாரம் ஓரிரு நாள் பருகுவது நல்லது.

பல் முளைக்கும் குழந்தைகள் வயிற்றுக் கடுப்பால் அவதியுறும்போது பேரீச்சம்பழத்தைச் சுடுநீரில் கலந்து குழைய வேக வைத்து வேளை ஒன்றுக்கு 1 கரண்டி வீதம் 3 வேளை பருக பேதி நிற்கும்.

தினசரி 4 பேரிச்சம்பழம் சாப்பிட்டு வருபவர்கட்கு வயிற்றுக்கடுப்பு, அஜீரணபேதி, மலச்சிக்கல், அ மிபியாசிஸ் போன்ற வயிற்றுக் கோளாறுகள் வருவதில்லை. குறிப்பாக குடலுக்குப் பாதுகாப்பு கவசமாக பேரீச்சம்பழம் விளங்குகிறது.

முடி பராமரிப்புக்கு பேரீச்சம்

1. 100 கிராம் உயர்ரக பேரீச்சம் பழத்தை எடுங்கள்.
2. இதைக் கொட்டையுடன் தட்டி, மூழ்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி, பத்து நிமிடம் கொதிக்க வைத்து இறக்குங்கள்.
3. ஒரு நாள் இதை அப்படியே விடுங்கள்.
4. ஊறிய பேரீச்சம் பழத்தை அரைத்து வடிகட்டுங்கள்.
5. இதனுடன் சம அளவு தேங்காய் எண்ணெயைக் கலந்து காய்ச்சுங்கள்

மேலும் »

பப்பாளியின் மருத்துவ குணங்கள்

எழுதியவர்-   Funway
17:42:03 2014-05-08 ஆரோக்கியம்

* நல்ல மலமிளக்கி. மலச்சிக்கல் வயிற்றுக் கடுப்பு, செரிமானமின்மை, அமிலத்தொல்லை போன்ற பிரச்சனைகளுக்குஅருமருந்து......!

* பித்தத்தைப் போக்கும்......!

* உடலுக்குத் தென்பூட்டும்......!

* இதயத்திற்கு நல்லது......!

* மனநோய்களைக் குணமாக்குவதில் உதவும்......!

* கல்லீரலுக்கும் ஏற்றது......!

* கணைய வீக்கத்தைக் கட்டுப்படுத்தும்......!

* சிறுநீர்க் கோளாறுகளைத் தீர்க்கும்.....!

* கல்லீரல் கோளாறுகளைத் தீர்க்கும்.....!

* முறையான மாதவிலக்கு ஒழுங்குக்கு உதவும்......!

*இரத்தச்சோகைக்குநிவாரணமளிக்கும்......!

* மண்ணீரல் வீக்க சிகிச்சையில் பப்பாளி பயன்படுகிறது......!

* பழுக்காத பச்சைப் பப்பாளித் துண்டுகள் அல்லது சாறை அருந்தினால், குடலிலுள்ள வட்டப்புழுக்கள்வெளியேறும்.....!

* பப்பாளியிலுள்ள ‘பப்பாயின்’ என்சைம்களில் ‘ஆர்ஜினைன்’ என்பது ஆண்களுக்கான உயிர் உற்பத்தித் திறனை மேம்படுத்தவும்,‘கார்பின்’ இருதயத்திற்கும், ஃபைப்ரின் இரத்தம் உறைதலுக்கும் உதவுகின்றது......!

* பப்பாளியிலுள்ள விதவிதமான என்சைம்களின் சேர்க்கை, புற்றுநோயைக் குணப்படுத்த வல்லது......!

* இளமைப் பொலிவைக் கூட்டி வயோதிகத்தைக் கட்டுப்படுத்துவதாக பப்பாளிகளை சிறப்பித்துக் கூறுவர்......!

* உடலிலுள்ள நச்சு முழுக்க பப்பாளியால் சுத்திகரிக்கப்படுகிறது......!

* இயற்கை மருத்துவச் சிகிச்சையின் கீழ் ‘பட்டினிச் சிகிச்சை’ மேற்கொள்கையில் பப்பாளிச் சாறும், வெள்ளரிச் சாறும் மாற்றி மாற்றிக் குடித்தால் உடல் கழிவுகள் நீக்கத்தில் பெரும்பயன் விளையும்......!

* ‘ஆண்டிபயாடிக்’ மருந்துகளில் சிகிச்சை பெற்றபின் ஒருவர், பப்பாளி நிறையச் சாப்பிட வேண்டும். ஏனெனில் குடல் தசைகளில் அழிக்கப்பட்டிருக்கும் நல்ல பாக்டீரியாக்களைமீண்டும் உற்பத்தி செய்வதற்கு பப்பாளி உதவும்......!

* நன்றாகப் பழுத்த பப்பாளிப் பழத்தின் விதைகள், குடல் புழுக்களை வெளியேற்ற உதவும். கூடவே தாகம் போக்குவதில் நல்ல பயன் தரும்.
பப்பாளி இலைகளின் பொடி யானைக்கால் வியாதிக்கும், நரம்பு வலிகளுக்கும் மருந்தாக விளங்குகிறது......!

வருடம் முழுவதும் கிடைக்கக்கூடிய பழம் இது. இதிலும் வைட்ட மின் ஏ உயிர் சத்து நிறைய இருக்கிறது. பல் சம்மந்தமான குறை பாட்டிற்கும், சிறு நீர்ப்பையில் உண்டாகும் கல்லை கரைக்கவும் பப்பாளி சாப்பிட்டால் போதும். மேலும்- நரம்புகள் பலப் படவும், ஆண்மை தன்மை பலப்படவும், ரத்த விருத்தி உண்டாகவும், ஞாபக சக்தியை உண்டு பண்ணவும் பப்பாளி சாப்பிடுங்கள்......!

மாதவிடாய் சரியான அளவில் இன்றி கஷ்டப்பட்டு கொண்டி ருக்கும் பெண்மணிகள் தினமும் பப்பாளிப்பழம் உண்டு வந்தால் மாதவிடாய் குறைபாடு சீராகும்......!

அடிக்கடி பப்பாளி பழத்தினை உண்டு வருபவர்கள் எவ்வகை நோய்க்கும் ஆளாக நேரிடாது. எந்த வகையான தொற்று நோய் பரவினாலும், அது இவர்களை தாக்காது. பப்பாளி பழத்தில் இயற்கையாகவே விஷக்கிருமிகளை கொல்லும் ஒரு வகை சத்து இருப்பதால் பப்பாளி பழத்தை சாப்பிடுபவர்களின் ரத்தத்தில் நோய் கிருமிகள் தங்கி நோயை உண்டு பண்ண வாய்ப்பில்லை...

மேலும் »

மரணத்தை தள்ளிப்போடும் நெல்லிக்கனி

எழுதியவர்-   Funway
20:33:57 2014-05-04 ஆரோக்கியம்

இதயத்திற்கு வலிமையை வழங்கும் நெல்லிக்கனியை உண்டு தண்ணீரை குடித்தால் அது எப்பேர்பட்ட தண்ணீராக இருந்தாலும் இனிக்கும்.

* தினம் ஒரு நெல்லிக்காயை உண்டால் அது தேகத்திற்கு புத்துணர்ச்சியைக் கொடுத்து நாம் இளமையாக இருக்க உதவும் டானிக்காக இருக்கும். தொற்று நோய்கள் எதவும் தொற்றாது. இருதயம், சிறுநீரகம் பலப்படும்.

* ஒரு டேபிள் ஸ்பூன் நெல்லி சாறையும், அரை ஸ்பூன் தேனையும் கலந்து தினமும் காலையில் சாப்பிட்டு வந்தால் கண் நோய் வராது.

* நெல்லிச்சாறுடன் பாகற்காய் சாறைச் சேர்த்துச் சாப்பிட்டால் கணையத்தைத் தூண்டி இன்சுலின் சுரப்பை அதிகப்படுத்தி சர்க்கரை வியாதியைத் தடுக்கும்.

* ஒரு ஸ்பூன் நெல்லிக்காய் பொடி, ஒரு ஸ்பூன் நாவல்பழப் பொடி, ஒரு ஸ்பூன் பாகற்காய் தூள் சேர்த்து சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய் வரவே வராது.

* அழகு சாதனப் பொருள்கள் தயாரிப்பதிலும், நெல்லிக்காய்க்கு ஒரு பிரதான இடம் உண்டு. நெல்லியின் உள்ளிருக்கும் கொட்டைகளை நன்கு பொடி செய்து அதை தேங்காய் எண்ணெயில் கலந்து, நன்றாக கொதிக்க வைத்து, பின் குளிர வைத்து தலைக்குத் தடவி வந்தாலும், தலை பளபளப்பாகவும், கருமையாகவும், அடர்த்தியாகவும் இருக்க உதவும்.

* நெல்லிக்காயின் சாறு இருக்கிறதே அதையும் தேனையும் சேர்த்துக் கலந்து தினமும் சாப்பிட்டு வந்தால் உடலுக்கும் பலம் கிடைக்கும், குடலுக்கும் பலம் கிடைக்கும். மூளை இருதயம் கல்லீரல் முதலிய உறுப்புகளுக்கும் பலம் கிடைக்கும்.

இவ்வாறான வழிகளில் நெல்லிக்கனியை சாப்பிட்டு வந்தால், மரணத்தை கூட தள்ளிப்போடலாம்......!

மேலும் »

தேடல்

Copyrights © 2014. All rights reserved. Ablywall