பிரிவுகள்

அழகு குறிப்புகள்

ஆன்மீகம்

உடல் ஆரோக்கியம்

உறவுகள்

கதை

கவிதைகள்

சமையல் குறிப்புகள்

ஜோதிடம்

தத்துவம்

தாய்-குழந்தை

பொது அறிவு

வாழ்த்துக்கள்

வீடு பராமரிப்பு

Cinema

Tamil SMS

வடிகட்டி -  உறவுகள் , திருமணத்திற்கு பிறகு

நீங்கள் பிரம்மச்சாரிகளே ! இத அவசியம் தெரிஞ்சிக்கோங்க

எழுதியவர்-   Funway
18:35:04 2014-02-26 திருமணத்திற்கு பிறகு

கல்யாணத்திற்குப் பிறகு ஏற்படக்கூடிய மாற்றங்களை அதனால் செய்ய வேண்டிய தியாகங்களை இந்திய ஆண்கள் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். நாம் குறைந்த அளவே விரும்பக்கூடிய விஷயமான ஒரு குடும்பத்தினை அமைத்துக் கொள்வதற்கு மேல் நம் தூக்கத்தைத் தொலைக்கக்கூடிய அளவிற்கு பின்வரும் விஷயங்கள் மனைவிக்குத் தலைவலியாக அமையலாம். இங்கு இந்திய ஆண்கள் திருமணத்திற்குப் பிறகு இழக்க நேரிடும் சிலவற்றைப் பற்றிப் பார்ப்போமா?

பணம்
ஒரு சூப்பர் மொபைல் ஃபோனைப் பார்த்துவிட்டு உடனே அதை நீங்கள் வாங்கியது நினைவிருக்கிறதா? இனிமேல் அது நடக்காது.. எப்போதுமே! தாலி கட்டி முடிந்தவுடனே, உங்கள் வருமானமும் இருப்பும், மனைவியுடன் சேர்ந்து வாழத் தேவையான வழிகளில் செலவிட வேண்டியிருக்கும்.

நிம்மதி
 உங்களைப் புரிந்து கொள்ளக்கூடிய மனைவி உங்களுக்கு இருந்தால் நீங்கள் அதிர்ஷ்டசாலி என நினைத்துக் கொள்ளுங்கள். ஆனாலும், நாள் பூராவும் உழைப்பது, மேலதிகாரியிடம் மண்டியிடுவது மற்றும் தனக்குக் கீழுள்ள லாயக்கில்லாத பணியாட்களிடம் போராடி வேலை வாங்குவது பற்றியெல்லாம் உங்கள் குழந்தைக்குத் தெரிய வாயிப்பில்லை. இரவிலும் நிம்மதியில்லாமல், குழந்தை டயபரை மாற்றும் வேலைகளையும், நடு இரவில் பிடித்த ஸ்போர்ட்ஸ் சானலைப் பார்க்காமல், மனைவியைத் திருப்திப்படுத்தும் வேலைகளையும் செய்ய வேண்டியிருக்கும்.

அதிகாரம்
வருவது வரட்டும் என ஆண்களாகிய நாம் மக்களை விரட்டி வேலை வாங்குவதற்குத் தயாராக இருப்போம். ஆனால், கல்யாணம் செய்து கொள்வது என்பது நாம் விரும்பி நம்மை ஒருவர் வாழ்க்கை முழுவதும் மேய்க்க அனுமதிப்பதாகும். உடையணியும் விதம், பிடித்தமான படங்கள் முதல் மனைவின் தோழிகளின் முன் எப்படிப் பேச வேண்டும் என்பது வரை ஒவ்வொரு சிறிய விஷயமும் கவனிக்கப்படும்.

பெருமை
கல்யாணத்திற்குப் பிறகு நீங்கள் பாராட்டப்படும் ஒரே மிருகத்தனமான விஷயம் நீங்க எவ்வளவு நல்லா அவங்களைப் கவனிச்சுக்குவீங்க என்பதைப் பொறுத்தது. உங்களால் உங்களின் குடும்பத்தை போற்றிப் பாதுகாக்க முடிந்தால் சந்தோஷம் தான். இல்லையென்றால், உங்கள் கவுரவம் வீட்டிலும் வெளியிலும் காற்றிலும் பறப்பதைப் பார்க்கத் தயாராக இருங்கள். அது உங்கள் தவறு இல்லை, உங்களை மட்டம் தட்டுவதே தாங்கள் வேண்டியதைப் பெற ஒரே வழி என அவர்களுக்கு நன்கு தெரியும். உங்களால் ஒரு தங்க மோதிரம் வாங்கித்தர முடியாவிட்டாலும் கூட இதே கதி தான்.

நண்பர்கள்
கல்யாணத்திற்குப் பிறகு பெண்களால் ஏற்படும் மிகப்பெரிய இழப்பு நம்முடைய நெடுநாளைய நண்பர்கள். கட்டாயமாகவோ அல்லது கட்டாயமில்லாமலோ வேலையையும் வீட்டையும் கவனிப்பதில் நம்மை சிறிது ஆசுவாசப்படுத்திக் கொள்ள நமக்கு நேரம் கிடைப்பதில்லை. உங்கள் நண்பர் திருமணமாகாதவராக அல்லது உங்கள் மனைவிக்குப் பிடிக்காத சிகரெட் போன்ற பழக்கமுடையவராக இருந்தால், வீட்டில் நிம்மதியை தொடர அந்த நட்பை மறந்து விடத் தயாராகுங்கள்.


மேலும் »

தேடல்

Copyrights © 2014. All rights reserved. Ablywall