பிரிவுகள்

அழகு குறிப்புகள்

ஆன்மீகம்

உடல் ஆரோக்கியம்

உறவுகள்

கதை

கவிதைகள்

சமையல் குறிப்புகள்

ஜோதிடம்

தத்துவம்

தாய்-குழந்தை

பொது அறிவு

வாழ்த்துக்கள்

வீடு பராமரிப்பு

Cinema

Tamil SMS

வடிகட்டி -  கவிதைகள் , ஆன்மிக கவிதைகள்

கடல் வழிக்கால்வாய் - இருட்டு தான் அழகு

எழுதியவர்-   INIYAVAN
16:36:29 2016-06-29 ஆன்மிக கவிதைகள்

--------------------------------
கடல் வழிக்கால்வாய் 
--------------------------------
.........இருட்டு தான் அழகு  .......

^^^^^^^^^^^^^^^^^
எல்லோரும் வெளிசத்தை ....
பார்த்தே மகிழ்ச்சி அடைகிறோம் ......
காலையில் சூரிய ஒளி அழகு ....
மதிய சூரிய ஒளி இன்னுமொரு அழகு .....
அந்திவான சூரிய ஒளி அழகிலும் அழகு .....
இரவு நேர நட்ஷத்திரங்கள் அழகு ....!!!

ஆலயங்களில் தீப ஒளி அழகு ....
வீடுகளில் குத்து விளக்கு அழகு .....
திரை அரங்கில் வெள்ளி திரை அழகு ....
ஆளுக்காள் போட்டிபோடும் ....
அலங்கார விளக்குகளும் அழகு ...
செயற்கை மின் குமிழ்களும் அழகு .....!!!

வெளிசத்தில் அழகுதான் அதிகம் .....
இருளில் அழகும் அதிகம் .....
இருளில்தான் அறிவும் உதயம் .....
நாம் பிறக்கமுன் கருவறை இருள் ....
விதை முளைக்கமுன் விதை இருள் .....
கருவறையில் சாமி  இடமும் இருள் ....
கல்லறையும் இருள் தான் .....!!!

வெளிசத்தில் தான் வேறுபாடுகள் .....
வெளிசத்தில் பார்க்கும்போதே ....
குட்டை  நெட்டை வேறுபாடு .....
அழகு  அசிங்கம் வேறுபாடு ....
இத்தனை ஏற்றத்தாழ்வுகள் ....
இருளுக்கு எல்லாம் சமத்துவம்.....!
இருளில் மனிதனும் ஒன்றுதான் ....
இருளில்கதிரையும் ஒன்றுதான் ...
பறவையும்  மிருகமும் ஒன்றே.....
இருள் என்பதே சமத்துவம் தான் ....!!!

இருள் .........
இருப்பதாலேயே வெளிச்சம் ...
அழகு பெறுகிறது .....
அழகாக இருப்பதை விட ....
அழகாக்குபவையே  அழகு ....
ஆதலால் தான் இருள் அழகு ......!!!

&
கடல் வழிக்கால்வாய் 
ஆன்மீக கவிதை 
கவிப்புயல் இனியவன்


 


மேலும் »

நாக தோஷம்

எழுதியவர்-   INIYAVAN
09:36:12 2015-04-17 ஆன்மிக கவிதைகள்

அழகான குக் கிராமம் ....
கூப்பிடு தூரத்தில் ஆங்காங்கே ....
குடிசைவீடுகள் இடையிடையே ...
வேற்று காணிகள் ,முற்பற்றைகள் ....
முற்பற்றைகள் நடுவே மண் புற்றுகள் ...
எந்தபுற்றில் பாம்பு வசிக்கிறதோ ....
அந்த புற்று கோயிலாக மாறும் ...!!!

வீடுகள் என்னவோ குடிசைகள் ...
பாம்பு புற்றுகள் செங்கல் மாடங்கள் ...
பல கால நித்திய பூசை , பால் அபிஷேகம்...
ஏட்டிக்கு போட்டியாக புற்றுக்கள் ....
கோயிலாக மாறும் போட்டியாக ...
விதம் விதமான பூசைகள் ....
பக்தர்களுக்கு திண்டாட்டம் .....!!!

ஊரில் குறி சொல்பவரே நீதிபதி ....
ஊரின் நீதிபதி சொன்னால் இறுதி ...
யாரும் திருப்பி பேசமாட்டார்கள் ...
பேசினால் நாகதோஷம் பற்றிவிடும் ....
அவருக்கு வரும் கனவுகள் ...
காலபோக்கில் கோயிலாய் மாறிவிடும் ....
அயல் கிராமத்தவரும் வந்துசெல்வர் ...!!!

திருமணமாக விட்டால் நாகதோஷம் ....
குழந்தைகள் படிக்காவிட்டால் நாகதோஷம் ....
குடும்ப சண்டைக்கு நாகதோஷம் ....
ஊரில் மழைபெய்யாவிட்டால் நாகதோஷம் ....
நித்திய பூசைகள் ,அபிஷேகம் பல செய்தும் ...
ஊரின் நாக தோஷம் தீரவில்லை ....
ஊராரின் தோஷங்களும் தீரவில்லை ....!!!

நள்ளிரவில் தூங்கிய குழந்தையை ...
தீண்டியது நாகம் ,இறந்தது குழந்தை....
பொழுது விடிந்து ஊரெல்லாம் பேச்சு ...
அந்த வீட்டாருக்கு உச்சகட்ட தோஷமாம் ....
புற்றுகள் எல்லாம் கோயிலாக மாறின் ...
வீடுகள் தானே பாம்புக்கு புற்றுக்கள் ...
புற்றில்லாத பாம்புகளுக்கு தோஷமே ....!!!

இறை நம்பிக்கை நிச்சயம் தேவை ....
இறையில்லாமல் இயக்கமும் இல்லை ...
இரக்கத்தை காட்டுங்கள் என்றுதான் ...
இறைவன் ஒவ்வொரு உயிரினத்தையும் ...
இறைவாகனமாய் வைத்திருக்கிறான் ....
இதை உணரும் விழிப்புணர்வு வந்தால் ....
இவ்வுலகில் எந்த தோசமும் இல்லை ....!!!

மேலும் »

கடவுளும் கவிதையும் ....!!!

எழுதியவர்-   INIYAVAN
21:03:19 2015-04-16 ஆன்மிக கவிதைகள்

கடவுளும் கவிதையும் ....!!!

உணர்வதே கடவுள் என்கிறார்கள் ....
உருவமே கடவுள் என்கிறார்கள் ....
உணர்ந்து பார்த்தால் உருவமில்லை ...
உருவமாக பார்த்தால் உணர்வில்லை ....
கவிதையும் இப்படிதான் ....
யதார்த்தமாக பார்த்தால் கவிதையில்லை... 
கவிதையாக பார்த்தால் யதார்த்தமில்லை ......
கடவுளும் கவிதையும் அருவுருவமே ....!!!

கடவுள் என்றால் என்ன ....?
உணர்ந்த ஞானிகள் மத்தியில் ...
ஏராளமான பல்வேறு விளக்கம் ...
உணர்வுக்கேற்ப அவரவர் விளக்கம் .....!!!
கவிதை என்றால் என்ன ....?
விளக்கம் தர உலகில் கவிஞர் இல்லை ....
உணர்வுகளின் வெளிப்பாட்டை யார் ....
விளங்கபடுத்த முடியும் ....?

ஆத்மா திருப்திக்காக அவரவர் கடவுள் .....
ஆத்மா வெளிப்பாடாக அவரவர் கவிதை ....
கற்றறிந்தவனும் கவிதை எழுதுவான் ...
கல்லாதவனும் கவிதை எழுதுவான் ....
உயிர்களுக்கும் எல்லாம் கடவுள் பொது ...
சிந்தனையாளனுக்கு கவிதை பொது ...
கடவுளில் பெரிய சிறியகடவுள் இல்லை .....
கவிஞர்களில் பெரியவன் சிறியவன் இல்லை ....

இறையிருப்பை நம்புகிறான் ஆர்தீகன்.... 
இறையிருப்பை நம்பவில்லை நார்தீகன் ....
இருவருமே விரும்புவது கவிதை ...
எழுத்தின் கற்பனை வடிவம் கவிதை ...
செயலின் சிந்தனை வடிவம் கவிதை ....
பொருளின் உவமை வடிவம் கவிதை ....
எழுத்து, செயல் ,பொருளின் தோற்றமே .....
கடவுளும் கவிதையும் .........!!!

மேலும் »

ஆன்மிக கவிதைகள்

எழுதியவர்-   Funway
13:16:13 2014-08-23 ஆன்மிக கவிதைகள்

  திக்குகளற்ற வெளியில்
நினைவுகளற்ற சுகத்தில்
விரவிக்கிடக்கும் ஆசைகளை
கர்ண கொடூரமாய் தகர்க்கின்றன
நிகழ்கால முரண்பாடுகள்...!

உறவுக்குள் சிக்கியதில்
பாசங்கள் என்ற பாசாங்கு
விளங்கியதின் பின்னணியில்
பறந்து குவியும் காகிதங்களின்
பெயர்கள் பணமென்றறிந்தேன்...!

சத்தியங்கள் பொசுக்கப்படும்
ஒரு உலகத்தில்..
தர்மங்களின் நாயகனாய்
என்னை வரித்துக் கொண்டதில்
காயங்களுக்குள் அகப்பட்டு
ஆழ்ந்து கிடக்கிறது என் ஆன்மா!

எப்போதும் மேய்ப்பது போல
இன்றும் மேய்த்து மேய்த்து
களைத்துப் போயிருக்கிறேன்..
அடங்கா மனமென்னும்...
மாயப் பிசாசை..!

அடங்கும் பொழுதுகளில்
ஆர்ப்பரிக்கும் மனிதக் கூட்டம்
ஆழ்ந்துறங்கும் அர்த்த ராத்திரிகளில்
சுடலையில் அமர்ந்த சிவனாய்...
என்னை எரிக்கும் நித்திரைகள்
எரித்து...எங்கோ ஒரு ஏகாந்தத்தில்
இல்லாமல் இருக்கிறேன் நான்..

மேலும் »

பிரார்த்தனை

எழுதியவர்-   Kathir
09:30:07 2014-03-17 ஆன்மிக கவிதைகள்

 

இறையே எனக்கு பலம் தா

எதையும் தாங்கும் உளம் தா

கறைகள் இல்லா மனம் தா

கவலையகற்றும் அருள் தா

 கோபம் நெருங்கா குணம் தா

குறுநகைப் பூக்கும் முகம் தா

மேலும் »

சொர்க்கம் அருகிலே

எழுதியவர்-   Kathir
09:29:10 2014-03-17 ஆன்மிக கவிதைகள்

 

உள்ளமதைக் கோவிலாக்க

உலகமது சொர்க்கமாகும்

நல்ல பண்பைப் பெறுவதுவே

நமது வாழ்வின் நோக்கமாகும்.

என்னதான் கற்றாலும்

எப்பதவி பெற்றாலும்

மேலும் »

இறைவன் வருவான்!

எழுதியவர்-   Kathir
09:27:11 2014-03-17 ஆன்மிக கவிதைகள்

இறைவன் ஒருநாள் வருவான்
இறையருள் நம்மீது பொழிவான்
இறைஞ்சியே என்றும் நீ பாடு!
இல்லையேல் இவ்விடம் விட்டு நீ ஓடு!
இருப்பதோ சில காலம்
இருக்கும் வரை அவனையே நீ நினை!

மேலும் »

தேடல்

Copyrights © 2014. All rights reserved. Ablywall