பிரிவுகள்

அழகு குறிப்புகள்

ஆன்மீகம்

உடல் ஆரோக்கியம்

உறவுகள்

கதை

கவிதைகள்

சமையல் குறிப்புகள்

ஜோதிடம்

தத்துவம்

தாய்-குழந்தை

பொது அறிவு

வாழ்த்துக்கள்

வீடு பராமரிப்பு

Cinema

Tamil SMS

வடிகட்டி -  கவிதைகள் , குழந்தைகள் கவிதைகள்

அண்ணன் தங்கை பாசமலர் கவிதைகள்

எழுதியவர்-   Funway
18:47:11 2017-08-22 குழந்தைகள் கவிதைகள்

தோள் கொடுப்பாள்
தோழி அல்ல ,
மெய் அன்பு தந்தாள்
தாயும் அல்ல .

உரிமையாய் உறவாடும்
என் உயிரின் வரவு நீ ,
என் உடன்பிறவாத
உன்னத உறவும் நீ !

தங்கையும் இன்றி ,
தமக்கையும் இன்றி
தன்னந்தனியாய்
தரணியில் நின்றேன் ,

உடன் பிறப்பென்று
ஆண் ஒன்று உண்டு .
உன் போல் உறவாய்
ஒருவரும் இல்லை.

(தெத்துப்பல்) சிரிப்பழகி
திகட்டாமல் பேசிடுவாள் .
முத்துப்பல் புன்னகையால்
முழு அன்பினையும் காட்டிடுவாள் .

சின்ன சின்ன தீம் சொற்கள்
தென்றலாய் வீசிடுவாள் ,
(அரிசிமூட்டை )என்றே எனை
ஆவலாக கூப்பிடுவாள் ...

கள்ளமில்லா அன்பு என்றால்
என்னவென்று நான் அறிந்தேன் .
கள்ளி அவள் அன்பினிலே
கற்கண்டாய் நான் கரைநேதேன் !

அக்கா என நான் அழைக்க
அழைப்புகண்டு மகிழ்ந்திடுவாள் ,
போடி என்றோ சொல்லிவிட்டால்
கொஞ்சும் கோபத்தில் சினந்திடுவாள் .

தவறுகள் நான் செய்தாலும்
தண்டனைகள் தரமாட்டாள் ,
தரமான போதனையால்
என் தவறினையும் திருத்திடுவாள் ...

உயர உயர நான் செல்ல
உளமார வாழ்திடுவாள் ,
என்னில் ஊரு ஏதும் நேர்ந்துவிட்டால்
அவள் உள்ளத்தால் உருகிடுவாள் ...

நிலவொளியின் நிறம்கூட
நிமிடத்தில் மாறிடலாம் ,
நிஜமான நின் அன்பு
நீளும் என்றும் குறையாதே ..

தன்னம்பிக்கை தந்திடுவாள்
தங்கமான தமக்கை அவள் ,
என் கவிதைக்கு முதல் வாழ்த்து
மூத்தவளே உன் வாழ்த்து .........

உனை ஒப்பிட்டு கவிதை சொல்ல
இப்பூவுலகில் எவரும் இல்லை ,
என் வரிகளுக்கு வலிமை தரும்
கலைமகளே நீ என்பேன் !

( சுமதி ) என்ற சுந்தரியே - தமிழ்
தாயின் செல்ல புத்திரியே ,
உன் இல்வாழ்வு இனிதாக
இந்த இளையவனின் பிரார்த்தனைகள் ...

மறுஜென்மம் ஒன்றிருந்தால்
உன் உடன்பிறப்பாய் வரவேண்டும்
இல்லை உந்தன் மடிதவழும்
மகனாகும் வரம் வேண்டும்.............

மேலும் »

அண்ணன் தங்கை கவிதை

எழுதியவர்-   Funway
08:49:31 2015-12-02 குழந்தைகள் கவிதைகள்

அண்ணன் தங்கை கவிதைகள், பாசமலர் கவிதைகள்  

தங்கையே,
ஒரு முறையேனும் உன் பாதம் தொட்டு செல்லும் வரம் கிடைக்க வீதியெங்கும் தேங்கியிருக்கிறது "மழை நீர்".

===================================================

கண்டிப்பு காட்டி அப்பா அடித்து விடுகையில்,
"வா அண்ணா"
சாப்பிட என்று பாசம் காட்டி அழைக்கும் தங்கைகள் கிடைப்பது வாழ்க்கையின் வரம்...!

===================================================

அப்பாவின் அணைப்பிலும்,
அண்ணனின் மடியிலும்,
நான் உணர்ந்தேன்
பாதுகாப்பை...

===================================================

பெரும்பாலும் தங்கையின் திருமணத்தை பொறுத்தே அண்ணனின் திருமணம் தீர்மானிக்கப்படுகிறது..

===================================================

தங்கைக்கு
இன்னொரு
தாய் தந்தையாக
இருப்பது
அண்ணன்கள்
மட்டுமே.

==================================================

கர்ப்பம் தரிக்கவில்லை,
குழந்தையும் சுமக்கவில்லை,
ஆனாலும் தாயாக வாழ்கிறேன்
என் தங்கையை கையில்
சுமந்த காலம் முதல்...

==================================================

அண்ணனோடு பிறக்காத எல்லா பெண்களுக்கும் உண்டு எந்த ஆணாவது தங்கச்சி என்று அழைக்கமாட்டார்களா என்ற ஏக்கம்...

==================================================

தந்தையை இழந்த மகள்களுக்கு பெரும்பாலும் அண்ணன்களே தந்தையாக இருக்கின்றனர்....

==================================================

பத்து மாதம் சுமக்கவில்லை,
ஆனால்,
உன்னிடத்தில் பார்க்கிறேன்
தாயின் மறு உருவம்
தங்கச்சி...

==================================================

தங்கையே,
சிறுவயதில் நாம் சண்டையிட்ட தருணங்களை நினைக்கும் போதெல்லாம்,
முட்டாள் போல் சிரிக்கிறேன் மீண்டும் அந்நாள் வருமா?

==================================================

தங்கையே,
நீ என் மனைவியிடம் சண்டை போடும், பேரழகை ரசிப்பதற்காகவே ஒரு முறையேனும் திருமணம் செய்து கொள்ள ஆசை எனக்கு.

==================================================

அம்மாவிற்கும், மனைவிக்குமிடையே சண்டை வரும் போதெல்லாம், பெரும்பாலும் மனைவி பக்கம் இருக்கும் ஆண்கள்,

மனைவிக்கும், தங்கைக்குமிடையே சண்டை வரும் போதெல்லாம்,
முழுவதும் தங்கை பக்கமே இருக்கிறார்கள் ஆண்கள்

=================================================

ஒரு முறையேனும் காதலித்து தோற்கும் வரம் வேண்டும்,
தங்கை ஆறுதல் சொல்ல...

================================================

வாழ்க்கை பயணங்களில் தங்கைகளின் ஜன்னலோர இருக்கைகள்,
அண்ணன்களே.

================================================

அம்மா, அப்பாக்களிடம் மறைத்த
அண்ணன்களின் காதலை,
அறிந்தவர்கள் தங்கைகள்..மேலும் »

அண்ணன் தங்கை கவிதை

எழுதியவர்-   Kathir
09:53:51 2014-03-17 குழந்தைகள் கவிதைகள்

அண்ணன்களின்
ரகசியமறிந்தவர்களாக
தங்கைகளே இருக்கிறார்கள்...

மணல் வீடு கட்டவோ
கட்டியதை இடிக்கவோ
தங்கைகள் தேவைப்படுகிறார்கள்...

நடை பழகும் நாட்களில்
கைபிடித்து கொள்ள
அண்ணன்களையே தேர்ந்தெடுக்கிறார்கள்...

அடம் பிடித்தோ
அழுது புரண்டோ
பொட்டோ, பூவோ
முதல் முதலில் தங்கைக்கே
வாங்குகிறான் அண்ணன்...

'' அ" வில் தொடங்கி
சைக்கிள் பழக்கி
மகிழுந்து வரை அண்ணன்களே
ஆசிரியர் தங்கைகளுக்கு...

அண்ணனாக மட்டுமன்றி
நண்பனாகவும்
சில நேரங்களில் தந்தையாகவும்
மாற்றி விடுகிறார்கள் தங்கைகள்...

தங்கைகளின் எந்தவித
கோரிக்கையும்
அண்ணன்களிடமே வருகிறது


தங்கைகளுக்கான முதல்
சிபாரிசை அண்ணன்களே
முன்னெடுக்கிறார்கள்...

அக்காக்களிடம் மறைத்த
அண்ணன்களின் காதலை
அறிந்தே இருக்கிறார்கள் தங்கைகள்...

அண்ணன்களுக்காக
அப்பாக்களிடம்
கோபம் கொள்வதில்
தங்கைகளே முதலில் இருக்கிறார்கள்...

தங்கைகளில்லா வீடு
அமைதியாகவே இருக்கிறது
தீராத மௌனம் சுமந்து...

திருமணமாகிச் செல்கையில்
அப்பாக்கள் அழுகிறார்களோ இல்லையோ
அழாமல் நடிக்க அண்ணன்கள்
கற்றுக் கொள்கிறார்கள்..

மேலும் »

தேடல்

Copyrights © 2014. All rights reserved. Ablywall