பிரிவுகள்

அழகு குறிப்புகள்

ஆன்மீகம்

உடல் ஆரோக்கியம்

உறவுகள்

கதை

கவிதைகள்

சமையல் குறிப்புகள்

ஜோதிடம்

தத்துவம்

தாய்-குழந்தை

பொது அறிவு

வாழ்த்துக்கள்

வீடு பராமரிப்பு

Cinema

Tamil SMS

வடிகட்டி -  கவிதைகள் , புரட்சி கவிதைகள்

தேர்தல்

எழுதியவர்-   INIYAVAN
16:40:16 2016-05-04 புரட்சி கவிதைகள்

தேர்தல் 
-----------
மெய்யும் பொய்யும் ....
தேர்தலில் போட்டியிட்டன ....
மெய்யின் ஆதரவாளர்கள் ....
மிகக்குறைவு -பொய்யின் ...
ஆதரவாளர்களோ .....
குவிந்து செறிந்து பரந்து ...
காணப்பட்டன .....!!!

பொய்யின் தேர்தல் ...
பிரச்சாரத்தில் பேச்சுகள் ....
தூள் பறந்தது கைதட்டல் ....
வானை பிழந்து சென்றன ....
ஆதரவாளர்கள் உங்கள் ஆட்சியே ...
எங்களுக்கு வேண்டும் .....
நீங்கள் இல்லாத ஆட்சி .....
எங்களுக்கு வேண்டவே வேண்டாம் ....
என்று கோஷமிட்டனர்.....!
மெய்யின் பிரச்சாரத்தில்....
ஆங்காங்கே ஒருசிலர் ......!!!

தேர்தல் முடிவு வெளியானது .....
பொய் கட்சி அமோக வெற்றி ...
மெய் கட்சியினர் கட்டு பணத்தை ...
இழந்தனர் .எதிர் கட்சியே இல்லாமல் ....
பொய் கட்சியினர் அரசை அமைத்தனர் ....
மெய் கட்சி தலைவர் சிறையில் ....
அடைக்கப்பட்டார் ......!!!

பொய்களே அரச கொள்கையானது ....
லஞ்சமே தேசிய தொழிலானது ....
உண்மை பேசியோர் சிறையில் ....
அடைக்கப்பட்டனர் - லஞ்சம் ...
கொடுக்க மறுத்தோர் நாக்கு ....
அறுக்கப்பட்டது - மெய் பேசியோர் ...
பொய்பேசியோர் வீடுகளில் ....
உயிர் பிச்சை கேட்டு கெஞ்சினர் ......!!!

பொய் பேசாத தனியார் நிறுவனங்கள் ....
லஞ்சம் கொடுக்காத நிறுவனங்கள் ....
அரசை புகழ்ந்து பேசாத நிறுவனங்கள் ....
அரசுடமையாக்கப்பட்டன .......!
பொய் பேசும் அண்டைநாடுகளுடன் ....
வலுவான ஒப்பந்தம் போட்டனர் ....
தலைவர்கள் கை குலுக்கினர் ....
ஆட்டம் போட்டனர்  சென்றனர் .....!!!

அரசின் இலவசத்திட்டங்கள் .....
பொய் சொல்வோருக்கு அதிகரித்தது ....
மறந்து போய் மெய் சொன்னவர்களுக்கு .....
இலவச திட்டங்கள் நிறுத்தப்பட்டன ....
துரோகிகளாக தனிமைபடுத்தப்பட்டனர்....!
மெய் கட்சி தலைவரை சிறையில் ....
பொய்கட்சி பிரமுவர்கள் சந்தித்தனர் ....
ஒரே ஒரு பொய் சொல் உன்னை ....
விடுதலை செய்கிறோம் என்றனர் ....
என்றோ ஒருநாள் விடுதலை ...
கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் ....
மெய் கட்சி சிறையில் வாடியது ....!!!


 

மேலும் »

எங்கே இருக்கிறது சுதந்திர காற்று ....?

எழுதியவர்-   INIYAVAN
21:23:14 2015-09-09 புரட்சி கவிதைகள்

எங்கே இருக்கிறது சுதந்திர காற்று ....?

பேச்சு சுதந்திரம் காணாமல் .....
போய் காலாவதியாகி விட்டது .....
இப்போ மூச்சு சுதந்திரத்துக்கு .....
போராடுகிறோம் .....!!!

மூச்சை காப்பாற்ற ஒரு இனம் ....
மூச்சை கையில் பிடித்தபடி வாழ ....
மூச்சை பறிக்க ஒரு கும்பல் .....
வெறியோடு அலைந்து திரிய .....
மூச்சு சுதந்திரம் பேச்சுக்கு கூட ....
இல்லாமல் போகிறது....!!!

எழுத்து சுதந்திரம் இருக்கு.....!
இறுமாப்புடன் எழுதினான் ....
எழுத்தாளன் - இப்போ அவன் ....
எழுந்து நடக்க நாதியில்லாமல் ....
படுக்கையில் பட்டமரமானான் .....!!!

மூக்கு எனக்கு கட்டளையிட்டது ....!
+
உயிரிருக்கவேண்டுமென்றால் .....
காற்றை உள்ளே எடுத்து வெளியேவிடு ....
சுதந்திர காற்றை சுவாசிக்க விரும்பினால் ....
உன்னிலிருந்து வெளியே சென்றிடுவேன் ...
மீண்டும் உள்ளே வரமாட்டேன் .....!!!

சுதந்திர காற்றுக்காய் அலையாதே ....
தூசியும் குப்பையும் நிறைந்த ....
காற்றுத்தான் உலகில் வீசுகிறது ....
சுவாசி- நீ - வசி -மடிந்துபோ ...
எங்கே இருக்கிறது சுதந்திர காற்று ....?

+
கே இனிவனின் குமுறல் 

மேலும் »

வலிக்குதடா இப்போ இதயம் .....!!!

எழுதியவர்-   INIYAVAN
10:27:38 2015-05-20 புரட்சி கவிதைகள்

உரிமைக்காக போராடிய போராட்டம் ....
உலகறிய செய்த நம் போராட்டம் ....
உலகமே உற்று பார்க்கும் போராட்டம் .....
உயிரை தியாகம் செய்த போராட்டம் ....
உயிரை நீ துறக்கும் வரை மறவாதே ....!!!

தமிழனுக்கு சிறப்பு பண்புண்டு .....
தன்மானத்தை இழக்கமாட்டான் ....
தனிப்பட்ட விலைக்கு போகமாட்டான் ....
தன் உறவுகளை விற்கமாட்டான் ....
தலைவன் நாமத்தை மறக்கமாட்டான் ....!!!

வலிக்குதடா இப்போ இதயம் .....
கயவர்களின் கவர்ச்சிக்கு போதையாவதும் ....
பேதைகளை போதையாக பார்ப்பதும் ....
போக்குவரத்து பாதைக்காய் போராட்டத்தை ....
மறந்ததும் வலிக்குதடா இப்போ இதயம் .....!!!

+
வலிக்கும் கவிதைகள் 
ஈழ கவிதை +02

மேலும் »

வலிக்கும் கவிதைகள்

எழுதியவர்-   INIYAVAN
09:48:39 2015-05-20 புரட்சி கவிதைகள்

என்ன 
பாவம் செய்தமோ ...?
ஈழ தமிழார் என்றால்  ...
துன்பம் ஒரு தொடர் கதை ....!!!

அதோ 
தெரிகிறது வெளிச்சம் ....
இதோ வருகிறது விடிவு ....
என்று நினைக்கும் போது....
வெளிச்சத்துக்கு முடிவு ....
வந்துகொண்டே இருக்கிறது ...!!!

கொடியது  கொடியது ...
மனிதபிறவி கொடியது  ...
அதனிலும் கொடியது .....
தமிழனாய் பிறப்பது கொடியது ....
அதனிலும் கொடியது ....
ஈழத்தில் பிறந்தது கொடியது ...
அதனிலும் கொடியது ....
ஈழத்தில் பெண்ணாய் பிறந்தது ...
கொடியது .....!!!

+
வலிக்கும் கவிதைகள் 
ஈழ கவிதை 

மேலும் »

நான் சொல்லும் தீர்ப்பு ....!!!

எழுதியவர்-   INIYAVAN
08:49:04 2015-05-20 புரட்சி கவிதைகள்

கொடுமை கொடுமை .... 
காட்டுமிறான்டிகளின் 
உச்ச கட்ட கொடுமை .... 
ஈழத்தமிழிச்சிகள் தொடர்ந்து ... 
கொடூரமாய் கொல்லப்படும்... 
கொடூர கொடுமை ......!!! 

அந்நிய 
படையின் ஆதிக்கத்தில் ... 
கற்பிழந்த ஈழச்சிகள் .....! 
ஆக்கிரமிப்பு படையின் வெறியில் ... 
செம்மணி வெளியில் .... 
வேம்படி மாணவி ....!!! 
வெறி நாய்களிடம் அகப்பட்ட ... 
வெள்ளை முயல்போல் .... 
புங்குடுதீவில் வித்தியாவின் .... 
கொடூர கொலை ...!!! 

நான் சொல்லும் தீர்ப்பு ....!!! 

வெறிகொண்ட .... 
காட்டுமிறாண்டிகளை.... 
உடன் கொல்ல கூடாது .... 
அணுவணுவாய் அனுபவித்து .... 
சாகவேண்டும் .....!!! 

இவர்கள் பெற்றெடுத்த பெண் .... 
குழந்தைகளை இவர்களிடம் இருந்து ..... 
பாதுகாக்க வேண்டும் ....!!! 
இல்லாவிட்டால் பெற்ற பிள்ளைகளுக்கே .... 
இவர்களிடமிருந்து பாதுகாப்பில்லை .....!!! 

பெண் குழந்தை இருந்தால் ... 
இந்த காட்டு மிறாண்டிகளின் முகத்தில் ... 
காறி துப்பி நீ எனக்கு தந்தையே இல்லை ... 
என்று தந்தை உறவை பறிக்க வேண்டும் ....!!! 
சகோதரிகள் இருந்தால் சகோதர உறவை 
பறிக்க வேண்டும் ......!!! 
தாய் உயிருடன் இருந்தால் மகன் உறவை ... 
பறிக்க வேண்டும் ....!!! 

சட்டத்தால் இவர்களை தண்டிப்பதை விட ... 
உறவுகளால் இவர்கள் தண்டிக்க படவேண்டும் ... 
நடைபிணமாய் இவர்கள் அணுவணுவாய் ... 
சாக வேண்டும் .....!!! 

இவர்களை காப்பாற்ற முனையும் .... 
சட்டத்தரணிகளின் உரிமையை ... 
பறிக்கவேண்டும் .இல்லையேல் .... 
இவர்களையும் கயவரின் பட்டியலில் .... 
சேர்த்து அவர்களுக்கான தண்டனையை ... 
இவர்களுக்கும் கொடுக்க வேண்டும் ..... 
இவர்களை காப்பாற்ற நினைக்கும் ... 
ஒவ்வொருவனும் தமிழின துரோகி ....!!!

மேலும் »

தமிழன் ஆதிமனிதன் ...!!!

எழுதியவர்-   INIYAVAN
13:35:22 2015-05-07 புரட்சி கவிதைகள்

ஆதிமனிதன் ...
காட்டில் இருந்து ....
ஊர்ந்து ஊர்ந்து வந்தான் ....
அதுவே அவன் ஊரானது ....!!!

மீளளிப்பு நிலத்தை .....
ஊரிலிருந்து பார்க்க சென்றோம் ....
காடாய் இருக்கிறது ....!!!
இப்போதென்றாலும்....
ஏற்றுகொள்ளுங்கள் ...
தமிழன் ஆதிமனிதன் ...!!!

மேலும் »

தொடரும் ஏக்கங்கள்

எழுதியவர்-   INIYAVAN
13:12:18 2015-05-07 புரட்சி கவிதைகள்

ஆக்கிரமிப்பு நிலங்கள் ....
மீளளிப்பு செய்யப்படுகின்றன ....
ஆவலுடன் சென்ற மக்களின் ...
திகைப்பும் திண்டாட்டமும் ..!!!
எது என் குடியிருப்பு ...?
எது எங்கள் சுடுகாடு ...?

மேலும் »

தொழிலாளர் தினம் ......!!!

எழுதியவர்-   INIYAVAN
13:33:30 2015-05-01 புரட்சி கவிதைகள்

உழைத்து உழைத்து உடல் தேய்ந்தது ....
உழைத்து உழைத்து உளம் சோர்ந்தது ....
உழைப்புக்கு ஏற்ற ஊதியமில்லை ....
ஊதியத்தில் வாழ போதுமானதுமில்லை ....
உழைப்பாளர் உரிமைகள் இழந்தனர்....!!!

களைப்பில் உழைப்பின் முதுகு ....
கேள்விக்குறியாய் வளைந்தது ....
சளித்து ,வெறுத்து ,கொண்டனர் ....
அடக்கப்பட்டனர், ஒதுக்கபட்டனர் ....
திருத்தி கொண்டனர் உழைப்பாளர் .....!!!

தூங்கியவர்கள்  விழித்து கொண்டனர் ....
திரட்டி கொண்டனர் தம்பலத்தை .....
நுழைந்தது கேள்விகள் ஆயிரம் ஆயிரம் ....
நிமிர்ந்தன தோள்கள் எழுந்தன கைகள் ....
வெடித்தது தொழிலாளர் போராட்டம் .....!!!

நோக்கம் நிறைவேறும்வரை  ......
உக்கிரமானது சர்வதேசப் புரட்சி......
உழைப்புக்கேற்ற ஊதியம் வேண்டும் ....
உழைக்கும் நேரம் எட்டுமணியாக .....
உரிமையை போராடி வென்றனர்.....!!!

போராடி வென்ற தொழிலாளர் தினம் .....
பேச்சளவில் இன்று சட்டத்திலும் ...
சிகப்பு வர்ண கொடிகளிலும் வாழ்கிறது ...
மனத்தால் உழைப்பின் புனிதத்தை ...
உணரும் நாள் என்று உதயமாகிறதோ ....
அன்றே உண்மைதொழிலாளர் தினம் ......!!!

மேலும் »

தொழிலாளர் தின வாழ்த்துக்கள்

எழுதியவர்-   INIYAVAN
06:50:46 2015-05-01 புரட்சி கவிதைகள்

உலக இயக்கம் ....
இயற்கையால் நிகழ்கிறது ....
உண்மைதான் ......!!!

உலக பொருளாதாரம் ....
இயங்குவது எங்களால் தானே ....
எம் அயராத உழைப்பு ...
இவ் உலகை தினமும் ....
அலங்கரிதுகொண்டே இருக்கும் ....
+
தொழிலாளர் தின வாழ்த்துக்கள் 

மேலும் »

தேடல்

Copyrights © 2014. All rights reserved. Ablywall