பிரிவுகள்

அழகு குறிப்புகள்

ஆன்மீகம்

உடல் ஆரோக்கியம்

உறவுகள்

கதை

கவிதைகள்

சமையல் குறிப்புகள்

ஜோதிடம்

தத்துவம்

தாய்-குழந்தை

பொது அறிவு

வாழ்த்துக்கள்

வீடு பராமரிப்பு

Cinema

Tamil SMS

வடிகட்டி -  கவிதைகள் , ஹைக்கூ கவிதைகள்

ஹைக்கூ கவிதை

எழுதியவர்-   INIYAVAN
20:17:17 2019-01-24 ஹைக்கூ கவிதைகள்

காலைக் கடிக்கமுன்
கையைபலமாகக்கடித்தது
புதுச்செருப்பு
@
ஹைக்கூ கவிதை
கவிப்புயல் இனியவன்

@
நித்தம் போனபோதும்
முகம் சுழிக்கவில்லை
மணிமுள்
@
ஹைக்கூ கவிதை
கவிப்புயல் இனியவன்

மேலும் »

மகளிர் தின நல்வாழ்த்துக்கள்

எழுதியவர்-   Funway
08:45:51 2015-12-02 ஹைக்கூ கவிதைகள்

தாயும் பெண்ணாய்,
தாரமும் பெண்ணாய்,
தங்கையும் பெண்ணாய்,
தமக்கையும் பெண்ணாய்,
தோழியும் பெண்ணாய்,
நதியும் பெண்ணாய்
நாடும் பெண்ணாய்,
நிலவும் பெண்ணாய்,
நீல்கடலும் பெண்ணாய்
தமிழ் மொழியும் பெண்ணாய்,
முப்பெரும் தேவியும் பெண்ணாய்,
பூக்களும் பெண்ணாய்,
பூமியும் பெண்ணாய்,
மகளிர் தினம் மட்டுமல்ல
மானுடம் உள்ளமட்டும்
வாழ்த்துகின்றோம் பெண்ணே...!

இனிய மகளிர் தின நல்வாழ்த்துக்கள்...

மேலும் »

மனிதஉறுப்புக்கள் ஹைக்கூக்கள் (இதயம் )

எழுதியவர்-   INIYAVAN
10:23:22 2015-07-22 ஹைக்கூ கவிதைகள்

மனிதஉறுப்புக்கள் ஹைக்கூக்கள் (இதயம் )
---

முழுநேர உழைப்பாளி 
மறைமுக தொழிலாளி 
" இதயம் "

---

காதல் மன்னன் 
காதலின் சின்னம் 
" இதயம் "

---

நல்லவன் மனசாட்சி 
கெட்டவன் மனசாட்சி 
" இதயம் "

---

நன்னீர் வாய்க்கால் 
கெட்டநீர் வாய்க்கால் 
" இதயம் "

---

அறுவை சிகிச்சை 
மரணம் தப்பியது 
" இதயம் "

மேலும் »

மனிதஉறுப்புக்கள் ஹைக்கூக்கள்

எழுதியவர்-   INIYAVAN
09:48:10 2015-07-22 ஹைக்கூ கவிதைகள்

மனிதஉறுப்புக்கள்  ஹைக்கூக்கள் (விரல்கள் )
------
வலது கை விரல்கள் 
மெருமை காட்டியது 
" மோதிரவிரல் "
-----
கும்பிடுகிறேன் 
பெருமை படுகிறது 
"சின்ன விரல்கள் "
----
கோபத்தின் தொடக்கி 
சண்டையில் தொடக்கி 
"சுட்டுவிரல் "
----
குட்டை கவலையில்லை 
அம்பு எய்வேன் 
"கட்டை விரல் "
---
நான் தான் வீமன் 
உயரமானவனும் 
"நடுவிரல் "


மேலும் »

ஹைக்கூ கவிதைகள்

எழுதியவர்-   Funway
12:14:33 2014-08-23 ஹைக்கூ கவிதைகள்

மழைக்கு ஒதுங்கியதில்லை
எங்கள் பள்ளியில்
கூரை இல்லை


மழையில் நிற்கிறாய்
பொறாமை
மழைத்துளி மேல்


முதலீட்டைத் தின்றால்தான்
விற்பனை தொடரும்
இட்லிக் கடை


மெளசுக்கு மவுசு கணிணியில்
மெளசால் ரவுசு
கழனியில்


மின்னல் கண்டதும் இடிப்பது
வானத்தில் மட்டுமா
பஸ்ஸிலும்தான்


வயிறு காயுது
வேலைக்குப் போகக் காயவில்லை
சேலை


வாள்கொம்புடன் குதிக்கிறாள்
காய் பறிக்க ஆசை
அவளுக்கும்


வாளியைக் காலி செய்ததும்
வானத்துக்குப் போனது
நிலவு


ஆளின்றி ஆடும் ஊஞ்சல்
பூந்தொட்டிக்குப் பின்னால்
பூனை


தலைப்பைக் காணோம்
காற்றின் கவர்ச்சிக் கவிதை
சேலையில்


எல்லாருக்கும் தெரிந்த மொழி
எதுவென்று யாரைக் கேட்டாலும்
மெளனம்.


மெளனமாயிருந்தால் முட்டாளென்று சந்தேகித்தார்கள்
பேச ஆரம்பித்தேன் – இப்போது
யாருக்கும் சந்தேகமில்லை

மெளனமும் ஒரு மொழிதானாமே?
அதிலும் உண்டா
இலக்கணப் பிழைகள்?


வருத்தம் தருவது வார்த்தைகள்தான்
வருத்தமே இதுவரை இல்லை – என்
மெளனங்களால்

பேசக் கிடைத்த வாய்ப்புகளை
விட்டதில் – கிடைத்தவை
மெளனத்தின் வெற்றிகள்


பேசினால் திரித்துக் கூறுவார்கள்
மொழிபெயர்ப்பில் தவறே வராதது
மெளனம்


காதலில் மட்டும் சொற்களை விட
தப்பர்த்தம் அதிகமாக வருவது
மெளனங்களில்தான்


பெண்களுக்கு உங்களைப் பிடிக்கும்
நீங்கள் கவனிப்பதாய்க் காட்டும்
மெளனம்


இதயத் துடிப்பென்ற தாளத்தில்
இனிய சங்கீதம்
மெளனம்


வாதங்களை ஜெயித்து விடுகிறார்கள்
எப்போதுமே எனக்குத்தான் வெற்றி
மெளனத்தில்


கடவுளே, எனக்கு நரகமே கொடு
என்னால் தாங்க முடியாதது
தனிமை


என் பின்னால் வரும் சோம்பேறிகள்
என்னைக் கடந்து விட்டால்
அவசரக்காரர்கள்


ஜிப்பைப் போட மறப்பது
மறதி-திறக்கவே மறப்பது
முதுமை


ஒரே சமயம் ஓராயிரம் கழுத்தை
அறுக்க வல்லது
பேனா


மனதைத்தேற்ற மருத்துவர் சொன்னது
நிச்சயம் பரம்பரை நோயல்ல
மலட்டுத்தன்மை


வெற்றி பெற்ற ஆணுக்குப் பின்
ஒரு பெண் – அவளுக்குப் பின்னால்
மனைவி


உயிர் போனாலும் பிரியேன்
மயிர் கலைகிறது
கையை எடு.


ஆயிரம் கை மறைத்தாலும்
ஆதவன் மறையாது
நகர்ந்து கொள் நயன்தாரா தெரியலை


ஆறிலும் சாவு நூறிலும் சாவு
ஆனது ஆகட்டும் அஞ்சாது போ
அரசாங்க ஆஸ்பத்திரிக்கு


மரணம்தான் நம்மைப் பிரிக்கும்
மனைவி பார்த்து விட்டாள்
மறைந்து கொள்


கற்பின் சிறப்பைக் கூற
காண்டம் காண்டமாக எழுதினீர்கள்
காக்க ஒரு காண்டம் போதும்!

மேலும் »

ஹைக்கூ கவிதைகள் ( இரண்டு வரி மொக்கை கவிதைகள் )

எழுதியவர்-   Funway
10:06:02 2014-06-13 ஹைக்கூ கவிதைகள்

கவிதை.1

அன்பே என்னை லேசாக திரும்பிபார்
அய்யோ அன்பே உன் முன்னால வேகமா வருது கார்

கவிதை.2

அன்பே உனது மூக்கை நல்லா சிந்து.
அதுக்கு பிறகு என் மடிமீது நீயும் வந்து குந்து

கவிதை.3

அன்பே உனக்கு அழகிய நோஸ்சு..
இனி என் பர்ஸ்சுல இல்லையே காசு

கவிதை.4

உன் வீட்டில் உள்ளது அல்சிசியன் டாக்கு.
இன்றாவது என்னுடன் நீயும் போனில் டாக்கு(பேசு)


கவிதை.5.

உனக்கு வாங்கி தரேன்டி நல்ல காதனி.
என் தமையனுக்கு இனி நீதான்டி மதனி

கவிதை.6.

உன் வீட்ல சுட்டாங்க பூரி.
அந்த கடையில நானும் சுட்டு தரேன் உனக்கு பட்டு சாரி


கவிதை.7.

அன்பே அன்பே ரப்பப்பரி.
உனக்கு நான் வாங்கி தாரேன் சோன்பப்பரி.


கவிதை.8

என் வீட்டில் உள்ளது எருமை.
உங்கப்பன பத்தி எங்கிட்ட பேசாதடி பெருமை


கவிதை.9.

ரயிலுக்கு தேவை தண்டவாளம்.
நான் சொல்லவா உங்கப்பன் வண்டவாளம்


கவிதை.10

தண்ணி மோக்க வேணும் குடம்.
என்ன கல்யாணம் பண்ண நீயும் பிடிக்காதே அடம்


கவிதை..11

உனக்கு நான்தான்டி மச்சி(மச்சான்).
இப்போ எனக்கு சுட்டுதா ஒரு பஜ்ஜி


கவிதை.12.

என் தலையில் விழுந்தது காக்கா பீ.
இனி நீதான் எனக்கு வுட்பீ


கவிதை.13

அன்பே இப்போ நான் உன்னை நினைத்தேன்.
அதன் பின்புதான் இந்த பிஸ்கட்டை டீயில் நனைத்தேன்


கவிதை.14.

மியாவ் மியாவ்னு கத்துதே பூனை.
என்னை பார்த்ததும் உன் முகம் ஆகுதே கோனை


கவதை 15

மெதுவா போகும் வண்டி புல்டோசர்.
நான் என்றும் போடமாட்டேன் முக்கா டவுசர்


கவிதை.16.

திருடனய் பிடிப்பாங்க போலிஸ்சு.
தீஞ்சு போன உன் முகத்தை எப்பாடி ஆக்கினாய் நீயும் பாலிஸ்சு


கவிதை.17.

நீ கொறிக்க நான் வாங்கி தரேன்டி ஸ்நேக்ஸ்சு.
பிறகு நாம கடல போட போலாமா இன்பாக்ஸ்சு


கவிதை.18

புதுவுட்டுக்கு போடுவாங்க ஹோமம்.
என்னை புடிக்கலைனு நீ போடமாட்டியே நாமம்


கவிதை 19

காக்கா பாட்டிக்கிட்ட திருடியது ஒரு வடை..
உன் நினைப்பாலே குறைந்தது எந்தன் எடை.


கவிதை.20.

இரவானா குறட்டை விட்டு தூங்கிறேன்
பகல்ல உன்னை கோட்டை விட்டதற்க்கு ஏங்கிறேன்


கவிதை.21

சண்டை வந்தால் நானே பண்ணுவேன் சமாதானம்...
இன்னைக்கு கோயில்ல போடுறாங்களாம் அன்னதானம்
<போலாமா அன்பே>


கவிதை.22.

நீ திங்க வாங்கிதாரேன் பேரிக்கா..
அப்பிறமா கூட்டிட்டு போறேன் உன்னை ஆப்பிரிக்கா.


கவிதை.23.

போண்டா சுட தேவை எண்னை.
என் பொண்டாட்டி ஆக்குவேனடி உன்னை.


கவிதை 24.

அன்பே வாட் யூ மீன்..!
என்னை காதலிக்க மாட்டாயா ஏன்?!


கவிதை.25.

காய்கறி நறுக்க தேவை நைஃப்பு..
இப்போ நீயும் வர்றீயா ஸ்கைப்பு.


கவிதை. 26.

அஞ்சு ரூபாய்க்கு தாடி சேஞ்சு.
கிட்ட வராதேடி பயமா இருக்கு உன் மூஞ்சு.


கவிதை.27.

வீட்டுக்கு தேவை வாசப்படி.
இப்போ நீயும் வாட்சப்வாடி.


கவிதை.28.

வண்டிக்கு தேவை வீலு.
இப்போ பண்னுவியா எனக்கும் காலு.


கவிதை.29.

அன்பே உனக்கு அழகிய பாதம்
சோற்றை சிந்தி ஆக்காதே சேதம்


கவிதை.30

அன்பே அன்பே ஒடியா ஒடியா.
நம்ள துறத்துராங்க நாலஞ்சு தடியா தடியா


கவிதை.31.

அன்பே உனக்கு நான்தான்டி இனி ஐய்தான்..
உங்கப்பன்தான் நம் காதலுக்கு சைத்தான்
...

கவிதை.32.

ரசத்துக்கு போடனுமே மிளகு.
உன்னை விட உங்கம்மாதான்டி அழகு.


கவிதை.33.

அன்பே அன்பே ப்ளிஷ் டோன்ட் வொரி.
ஞாயித்துக்கிழமை நிச்சயம் எடுத்து தரேன் அரைகிலோ ஆட்டு கறி.


கவிதை.34.

அன்பே அன்பே இங்கே ஒரே உப்புசம்.
எனக்கு இப்போ வாங்கிதருவியா நாலு,ஐந்து, அதிரசம்.


கவிதை.35.

யானைய கட்டுபடுத்த அதன் மேல் உட்காந்து சொல்லனுமே
பார்கே.பார்கே.
உன்னை பார்க்க நானும் ஓடிவந்தனே வேர்க்க வேர்க்க


கவிதை.36.

பாம்பு போடும் சத்தம் புஷ்சு புஷ்சு.
பதமாய் நீயும் தாடி எனக்கு கிஸ்சு கிஸ்சு


கவிதை.37.

சைக்கிள்ல இருக்குமே பெல்லு.
உன்ன பார்க்காம நான் ஆனேனெ டல்லு.


கவிதை.38.

சென்னைல இருக்கும் மெரினா.
நீயும் குடிக்க நானும் வாங்கி தருவா டொரினா

கவிதை.39.

மாடும் போடுமே சாணி.
நான் உன்னை என்றும் காப்பேனே பேணி

கவிதை.40

உனக்காக நான் பலநாளாய் கிடந்தேன் னக்கு(மெனக்கெட்டு)
நிச்சியம் ஒரு நாள் உன்னை பண்வேன் கணக்கு

கவிதை. 41.

என் டி.வி.எஸ்ஸில் வருமே அதிக புகை.
இதனாலயே எனக்கும் சார்ஸன்டுக்கும் அடிக்கடி பகை.

கவிதை.42.

அன்பே லாலக்கு டோல்டப்பிமா..
உன்னை பார்த்ததும் நான் ஹேப்பிமா.

கவிதை.43.

நான் மனதளவில் பலசாலி.
உன் வீட்டுக்குள்ளே போகுதே பார் பெருச்சாளி.

கவிதை.44.

இரும்பை இழுக்குமே காந்தம். காந்தம்......
அய்யோ அன்பே அந்த விளக்குமாறை கீழே போட்டுவிட்டு நீயும் ஆகனுமே சாந்தம் சாந்தம்........

கவிதை. 45.

குரங்கு வைத்து காட்டலாம் வித்தை..
சத்தியமா உங்கம்மா எனக்கு அத்தை.

கவிதை 46.

வாயை திறந்தால் வருமே கொட்டாவி.
வாயை திறந்தாவே உங்கப்பன் புழுகிறான் படுபாவி.

கவிதை 47.

அன்பே நான் ஆடுவேன் நல்லா   தை.தை.தை.
என் அம்மாதான் உனக்கு ஐய்த்தை..

கவிதை.48.

என் மடிமீது நீயும் விழுந்தியா.
உன் தங்கைதான் எனக்கு இனி கொளுந்தியா.

கவிதை.49.

வெறிநாய் கடிச்சா போடனுமே ஊசி..
வெறித்தனமா நீயும் என்னை நேசி.

கவிதை 50.

அன்பே டிங் டிங் டஹானா..
உன் மனசில இருப்பது உண்மையா நானா?

ஹைக்கூ கவிஞர் : மிராக்கள் வெங்கி

மேலும் »

முச்சக்கர வண்டி

எழுதியவர்-   Funway
23:54:41 2014-06-11 ஹைக்கூ கவிதைகள்

பட்டணம் தொட்டு
பட்டிதொட்டி வரை
பம்பரமாய்ச் சுற்றும்
மூன்றுகால் குதிரை

கவிஞர்:கயல்வேந்தன்

மேலும் »

ஹைக்கூ நட்பு கவிதைகள்

எழுதியவர்-   Kathir
09:41:37 2014-03-17 ஹைக்கூ கவிதைகள்

வருவது தெரியாது
வந்தால் போகாது
நட்பு

****************

பள்ளி பருவம் தொடங்கி
பல் விழுந்த பருவம் வரை
நட்பு

******************

கண்டவுடன் கொண்டாலும்
கண்டமற்றது
நட்பு

******************

தடக்கி விழுந்தால் தூக்கும்
தூக்கிவிடுவதே தொழில்
நட்பு

*******************

காடு செல்லும் போது
முதல் கட்டை பிடிப்பது
நட்பு

மேலும் »

ஹைக்கூ காதல் கவிதைகள்

எழுதியவர்-   Kathir
09:36:44 2014-03-17 ஹைக்கூ கவிதைகள்

காகித கல்லில்- மன
உளியால் செதுக்கப்பட்ட
சிற்பங்கள்...

மேலும் »

தத்துவ கவிதை

எழுதியவர்-   Funway
22:02:31 2014-02-28 ஹைக்கூ கவிதைகள்

இளமை தவறான பாதையை
நம்புகிறது...!

அனுபவம் சரியான பாதையையும்
சந்தேகப்படுகிறது ....!

மேலும் »

தேடல்

Copyrights © 2014. All rights reserved. Ablywall