பிரிவுகள்

அழகு குறிப்புகள்

ஆன்மீகம்

உடல் ஆரோக்கியம்

உறவுகள்

கதை

கவிதைகள்

சமையல் குறிப்புகள்

ஜோதிடம்

தத்துவம்

தாய்-குழந்தை

பொது அறிவு

வாழ்த்துக்கள்

வீடு பராமரிப்பு

Cinema

Tamil SMS

வடிகட்டி -  வாழ்த்துக்கள் , பொங்கல் வாழ்த்து

பொங்கல் வாழ்த்து கவிதை

எழுதியவர்-   Funway
21:04:29 2017-01-04 பொங்கல் வாழ்த்து

பொங்கல் திருநாள் வாழ்த்து கவிதை


மஞ்சள் கொத்தோடு
மாமரத்து இலையோடு
இஞ்சித் தண்டோடு
எறும்பூரும் கரும்போடு
வட்டப் புதுப்பானை
வாயெல்லாம் பால்பொங்க
பட்டுப் புதுச்சோறு
பொங்கிவரும் பொங்கலிது
பொங்கல் வாழ்த்துக்கள்

மேலும் »

சித்திரை திருநாள் வாழ்த்துக்கள்

எழுதியவர்-   Funway
20:54:42 2017-01-04 பொங்கல் வாழ்த்து

சித்திரை திருநாள்


அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார்
அன்பேசிவமாவது யாரும் அறிகிலார்
அன்பே சிவமாவது யாரும் அறிந்தபின்
அன்பேசிவமாய் அமர்ந்திருந்தாரே


ஒற்றுமையும் அன்பும் தழைத்து

கருணை, சகோரத்துவம் ஆகிய நற்பண்புகள் பெற்று

புத்துணர்வோடும் புதுப்பொலிவோடும் இனிதே வாழ

எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.

என் அன்பிற்கினிய வலைப்பூ நண்பர்களுக்கு இனிய

தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

மேலும் »

உழவர் திருநாள் வாழ்த்து கவிதை

எழுதியவர்-   Funway
20:51:16 2017-01-04 பொங்கல் வாழ்த்து

உழவர் திருநாள் வாழ்த்துக்கள்


உழவர் பெருமகன் உரிமையோடு
ஏற்றம் கொள்ள மாட்டுப்பொங்கல்

வாழ்வு தந்த உயிர்களுக்கு - இங்கே
வாழிப்பாக அலங்கரித்து - மின்னும்
சீவிய கொம்பில் பொன்னை சுற்றி
தமிழ் வீர திருமகனுக்கு தீரனாக
விடை சொல்லும் மாட்டுப்பொங்கல்

திறன் கொண்ட தோள் திமிர
சீறி வரும் காளை அடக்க
வீர தமிழன் விளையாட்டில்
கிராமங்களுக்கு ஒரு புது தெம்பு

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு
ஆண் மகனின் வீரம் தொட்டு
அடங்காத காளைகளையும்
அடக்கிடுவார் தம் வீரம் கொண்டு

தமிழன் சரித்திரத்தில் ஒரு நூறு
வருடம் தோறும் இந்த வரலாறு !!

மேலும் »

மாட்டுப்பொங்கல் நல்வாழ்த்துகள்

எழுதியவர்-   Funway
20:45:20 2017-01-04 பொங்கல் வாழ்த்து

மாட்டுப்பொங்கல் நல்வாழ்த்துக்கள் கவிதை


மறத்தமிழன் அனைவருக்கும்
என் இனிய தை மற்றும்
மாட்டுப்பொங்கல் நல்வாழ்த்துகள் ...

வீரம்விளைந்த மண்ணில்பிறந்தோம் - நம்
வீரியத்தை வீணாய்இழந்தோம் ...
சாதிசமயம் எனப்பிரிந்தே - நம்
பாதிவாழ்வை பாழாய்இழந்தோம் ...

வையத்து கவியெல்லாம் - என்
வள்ளுவனுக்கு ஈடாகுமோ ?...
அகத்தியன்தந்த அன்னைத்தமிழ் -இந்த
ஆங்கிலத்துக்கு கீழாகுமோ ? ...

அன்னைத்தமிழ் பொங்கலைக்கூட - நீ
ஆங்கிலத்தில் சொல்லலாமா ? ...
அமிர்தைவிட மேலான - நம்
அழகுத்தமிழை கொல்லலாமா ? ...

ஆங்கிலத்தில் வாழ்த்துச்சொன்னால் - அவனை
அங்கேயே அறைந்துவிடு ...
இன்பத்தமிழில் வாழ்த்துச்சொல்லி - அவன்
இறுமாப்பைக் களைந்துவிடு ...

மாட்டுப்பொங்கல் நல்வாழ்த்துகள் ..

மேலும் »

பொங்கல் நல்வாழ்த்துக்கள்

எழுதியவர்-   Funway
20:40:46 2017-01-04 பொங்கல் வாழ்த்து

பொங்கல் திருவிழா கவிதை


தைப்பெண்ணே
வருக வருக
உன் வரவால் …எம்
மக்கள் மனம்..
மகிழட்டும்..
துவண்டு கிடக்கும்
எம் …சம்முதாயம்..
துணிந்து எழட்டும்
வாடீக் கிடக்கும்..
வயல் வெளியெங்கும்..
வளங்கள்…பெருகட்டும்….
பொங்கும் மங்களம்
எங்கும் பொழிய
பொங்கலே நீ…
பொங்கி….வழிக…..
நிலாமுற்றத்து உறவுகள் அனைவர்க்கும்
எனது உள்ளம் கனிந்த பொங்கல் வாழ்த்துக்கள்

மேலும் »

தை பொங்கல் நல்வாழ்த்துகள்

எழுதியவர்-   Funway
20:38:54 2017-01-04 பொங்கல் வாழ்த்து

தை பொங்கலே


மனங்கள் பொங்கி வழியும் நாளில் ……………
பானைகள் மட்டும் சும்மா பொங்கி பயனேதும் உண்டா?
சிறகில் தீ பிடித்தாலும் …
அதன் ஒளியை கொடுத்து இனம் கொண்ட இருள் அகற்ற விளைகிறோம்!
வருக!! வருக!! தை பொங்கலே…!!

மேலும் »

தமிழர் திருநாள் வாழ்த்து கவிதை

எழுதியவர்-   Funway
20:36:05 2017-01-04 பொங்கல் வாழ்த்து

பொங்கல் கவிதை


தை பிறந்தால் வழி பிறக்கும்
தடைகள் தகரும்
தலைகள் நிமிரும்
நிலைகள் உயரும்
நினைவுகள் நிஜமாகும்
கதிரவன் விழிகள்
விடியலை கொடுக்கும்
அவலங்கள் அகலும்- என்ற
நம்பிக்கையில்
என் இதயம் கனிந்த
தமிழர் திருநாள் வாழ்த்துகள்…!

மேலும் »

பொங்கல் திருநாள் வாழ்த்து கவிதை

எழுதியவர்-   Funway
20:33:16 2017-01-04 பொங்கல் வாழ்த்து

பொங்கல் கவிதை


பழையன கழிதலும்
புதியன புகுதலும் நலமேயாம்
வாழையடி வாழையாய் வந்த
நல்லதோர் முதுமொழியாம்
தைமாதமதில் தைதிருநாள் பொங்கலதில்
விடியும் வேளை நாமெழுந்து நீராடி
நற்காலைப் பொழுதினிலே
பொங்கல் விழா தனிப்பெருந்
திருவிழாக்கோலம் பூணுகிறது.
தைப்பொங்கல் திருவிழா என்பது
ஒரு சமய விழா அல்ல!
தமிழரின் பண்பாட்டு விழா!
தமிழரின் தமிழ்ப் புத்தாண்டு
கொண்டாடும் நாள்!
அனைவருக்கும் இனிய
பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

மேலும் »

தேடல்

Copyrights © 2014. All rights reserved. Ablywall