பிரிவுகள்

அழகு குறிப்புகள்

ஆன்மீகம்

உடல் ஆரோக்கியம்

உறவுகள்

கதை

கவிதைகள்

சமையல் குறிப்புகள்

ஜோதிடம்

தத்துவம்

தாய்-குழந்தை

பொது அறிவு

வாழ்த்துக்கள்

வீடு பராமரிப்பு

Cinema

Tamil SMS

வடிகட்டி -  Cinema , சினிமா விமர்சனங்கள்

Vedhalam (Vedalam ) Movie Review

எழுதியவர்-   Funway
14:21:15 2015-11-10 சினிமா விமர்சனங்கள்

 வேதாளம் சினிமா விமர்சனம்Vedhalam  Ably Tube Video Sharing

வேதாளம்- விமர்சனம்!!
சென்னையில் இருந்து தங்கை லட்சுமி மேனனை கல்லூரியில் சேர்க்க கொல்கத்தா செல்கிறார் அஜித். அங்கு கால்டாக்சி டிரைவராக இருக்கும் மயில்சாமி உதவியுடன் வீடு எடுத்து தங்குகிறார். மேலும் அவர் பணி புரியும் கால்டாக்சியின் ஓனரான சூரியுடன் பேசி அஜித்துக்கு கால்டாக்சி டிரைவர் வேலையை வாங்கித் தருகிறார்.
வக்கீலான ஸ்ருதிஹாசன் ஒரு நாள் அஜித்தின் கால்டாக்சியில் ஏறுகிறார். அப்போது அஜித்தின் வெகுளி தனத்தை பார்த்து கோர்ட்டில் பொய் சாட்சி சொல்ல வைக்கிறார். ஆனால், எதிர்பாராத விதமாக இவர் பொய் சாட்சி என்று கோர்ட்டில் தெரியவர, ஸ்ருதிஹாசனுக்கு வேலை போகிறது. இதனால் ஸ்ருதிஹாசன் அஜித் மீது கோபமடைகிறார்.
இந்நிலையில் ஸ்ருதிஹாசனின் அண்ணனான அஸ்வின், அஜித்தின் கால்டாக்சியில் பயணம் செய்கிறார். அப்போது லட்சுமிமேனனை சந்திக்கும் சூழ்நிலை ஏற்படுகிறது. அவரை சந்திக்கும் அஸ்வின், லட்சுமிமேனன் மீது காதல் வயப்படுகிறார். இதற்கு அஜித்தும் சம்மதிக்க இருவருக்கும் திருமண ஏற்பாடுகள் நடக்கிறது.
பாசக்கார அண்ணனாக இருக்கும் அஜித் மறுபக்கம், கொல்கத்தாவில் போதை மருந்து கடத்தல் கும்பலை அழித்து வருகிறார். கடத்தல் கும்பலின் தலைவனான ராகுல் தேவ்வின் தம்பிகள் இரண்டு பேரை அஜித் கொலை செய்யும் போது ஸ்ருதிஹாசன் பார்த்து விடுகிறார்.
கொலைகார குடும்பத்துடன் சம்மதம் வைத்திருப்பதாக நினைத்து ஸ்ருதிஹாசன் வருந்துகிறார். இதையறியும் அஜித், லட்சுமிமேனன் என் தங்கை இல்லை என்று கூற, மேலும் தன்னுடைய கடந்தகால வாழ்க்கையை ஸ்ருதிஹாசனிடம் கூறுகிறார்.
லட்சுமிமேனன் அஜித்தின் தங்கை இல்லையென்றால், அப்போ லட்சுமி மேனன் யார்? எதற்காக போதை கடத்தல் கும்பலை அஜித் அழிக்கிறார்? என்பதை விறுவிறுப்பாகவும் சுவாரஸ்யமாகவும் படமாக்கியிருக்கிறார்கள்.
படத்தின் நாயகனாக அஜித், மாறுபட்ட நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். இதுவரை பார்க்காத அஜித்தை இப்படத்தில் பார்க்க முடிகிறது. முற்பகுதியில் இவருடைய வெகுளித்தனமும், தங்கை மீதுள்ள பாசமும் ரசிக்க வைக்கிறது. பிற்பகுதியில் இவருடைய அதிரடியான நடிப்பு ரசிகர்களை சந்தோஷப்படுத்தியிருக்கிறது. ஒவ்வொரு காட்சியிலும் கைத்தட்டல் பெறுகிறார். தன்னுடைய கடின உழைப்பை கொடுத்து கதாபாத்திரத்துக்கு உயிர் கொடுத்திருக்கிறார் அஜித். பாடல் காட்சிகளில் சிறப்பான நடனத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்.
பாசமிகு தங்கையாக நடித்திருக்கிறார் லட்சுமி மேனன். மற்ற படங்களில் நடித்ததை விட இப்படத்தில் நடித்து அதிக ரசிகர்களை கவர்ந்திருக்கிறார். வக்கீலான ஸ்ருதிஹாசன் சிறப்பாக நடித்திருக்கிறார். அஜித்தின் வெகுளித்தனத்தை கிண்டல் செய்வது ரசிக்க வைக்கிறது.
வில்லனாக நடித்திருக்கும் ராகுல் தேவ் மற்றும் கபீர் சிங், வில்லத்தனத்தில் மிரட்டியிருக்கிறார்கள். கண் தெரியாமல் நடித்திருக்கும் தம்பிராமையா, கால்டாக்சி டிரைவர் மயில்சாமி, கால்டாக்சி ஓனர் சூரி, கோவை சரளா ஆகியோரின் நடிப்பு படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.
வீரம் படத்தில் ரசிகர்களை வியக்க வைத்த இயக்குனர் சிவா, இப்படத்திலும் இரட்டிப்பான வியப்பை கொடுத்திருக்கிறார். இடைவேளை காட்சியும் படத்தின் கிளைமாக்ஸ் காட்சியும் ரசிகர்களை அடுத்த கட்டத்திற்கு இழுத்து செல்கிறது. அஜித்திடம் திறமையாக வேலை வாங்கியிருக்கிறார். ரசிகர்களுக்கு எப்படி படத்தை கொடுக்க வேண்டும் என்பதை நன்கு அறிந்திருக்கிறார். அஜித்தை வைத்து முழுமையான சென்டிமென்ட் படத்தை கொடுத்திருக்கிறார். மேலும் பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து படத்தை இயக்கியிருக்கிறார்.
அனிருத் இசையில் பாடல்கள் ஏற்கனவே ஹிட்டாகியுள்ளது. அதை திரையில் பார்க்கும் போது, மேலும் ரசிக்க வைத்திருக்கிறது. குறிப்பாக ‘ஆலுமா....’ பாடல் ரசிகர்களை ஆட்டம் போட வைத்திருக்கிறது. அஜித்தின் அறிமுக காட்சி, வில்லனுக்கு பின்னணி இசை என அனைத்திலும் தன்னுடைய திறமையை வெளிப்படுத்தியிருக்கிறார் அனிருத். வெற்றியின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம்.
மொத்தத்தில் ‘வேதாளம்’ மிரட்டல்

Vedalam Movie Rating : 3.5 /5 

மேலும் »

Vasuvum Saravananum Onna Padichavanga Review

எழுதியவர்-   Funway
13:15:49 2015-08-16 சினிமா விமர்சனங்கள்

வாசுவும் சரவணனும் ஒண்ணாபடிச்சவங்க - சினிமா விமர்சனம்

நடிகர் : ஆர்யா

நடிகை :தமன்னா

இயக்குனர் :எம்.ராஜேஷ்

இசை :இமான்

ஓளிப்பதிவு :நீரவ்ஷா
ஆர்யாவும், சந்தானமும் சிறு வயதிலிருந்தே நகையும் சதையுமாய் இணை பிரியாத நண்பர்களாய் இருந்து வருகிறார்கள். இந்நிலையில், சந்தானத்துக்கு பானுவுக்கும் திருமணம் செய்ய ஏற்பாடுகள் நடக்கிறது. அவளை பெண் பார்ப்பது முதல், கல்யாணம், முதல் இரவு வரை ஆர்யா கலாட்ட செய்து கலாய்க்கிறார்.

இவருடைய கலாட்டாவை நண்பன் சந்தானம் ரசித்தாலும், பானுவுக்கு சுத்தமாக பிடிப்பதில்லை. அதனால், ஆர்யாவுடனான நட்பை கைவிடுமாறு சந்தானத்திடம் கூறுகிறாள். அப்படி ஆர்யாவுடன் நட்பை கைவிடாவிட்டால் விவாகரத்து செய்துவிடுவதாக மிரட்டி விட்டு அதற்கு 6 மாத காலம் அவகாசம் தருகிறாள்.

மனைவிக்காக ஆர்யாவுடனான நட்பை கைகழுவ சந்தானம் முடிவெடுக்கிறார். தன்னுடைய வாழ்க்கையில் ஒரு பெண் நுழைந்து தங்களுடைய நட்பை கழட்டிவிட நினைப்பதுபோல், ஆர்யாவுக்கு அவனது வாழ்க்கையில் ஒரு பெண் வந்துவிட்டால் தன்னுடனான நட்பை கழட்டிவிட்டு விடுவான் என்று நினைத்து அவனுக்கு பெண் தேட முடிவெடுக்கிறார்.

திருமணத்தின் மீது ஆசையில்லாத ஆர்யா, சந்தானத்தின் முடிவுக்கு முதலில் மறுப்பு தெரிவித்தாலும், பின்பு சம்மதம் தெரிவிக்கிறார். நயன்தாரா போன்று பெண் கேட்பதால், ஒரு திருமண தகவல் மையத்திற்கு சென்று பெண் பார்க்க போகின்றனர்.

அங்கு வேலை செய்யும் தமன்னா பார்த்ததும், நயன்தாரா மாதிரியான பெண் வேண்டும் என்ற கனவை விட்டுவிட்டு தமன்னா மீது காதல் கொள்கிறார். ஆனால், தமன்னாவோ ஆர்யாவின் காதலை ஏற்றுக் கொள்வதாயில்லை.

அவளை காதல் செய்ய ஒத்துக்கொள்ள வைக்க சந்தானமும், ஆர்யாவும் பல்வேறு முயற்சிகளை செய்கிறார்கள். ஆனால், தமன்னாவோ எதற்கும் மனமிறங்கவில்லை. இறுதியில், ஆர்யா தற்கொலை முயற்சிக்கும் துணிய, அதற்கும் தமன்னா எந்தவித ரியாக்சனும் காட்டாதது ஆர்யாவுக்குள் தமன்னா மீது வெறுப்பு வருகிறது.

இறுதியில் அவளை தனது மனதில் இருந்து தூக்கி எறிந்துவிட்டு, அவளைவிட வேறு ஒரு அழகான பெண்ணை காதலிக்கப் போவதாக சபதம் போட்டுவிட்டு செல்கிறார். கடைசியில், ஆர்யாவின் காதலை தமன்னா புரிந்துகொண்டாரா? சந்தானம்-ஆர்யாவின் நட்பு பிரிந்ததா? இல்லையா? என்பதே மீதிக்கதை.

நாயகன் ஆர்யாவுக்கு இந்த படத்தில் மிகவும் அப்பாவித்தனமான கதாபாத்திரம். நண்பனுடன் சேர்ந்து அரட்டையடிப்பது, அப்பாவித்தனமாக முகத்தை வைத்துக் கொள்வது என்பது இவருக்கு கைவந்த கலை. அதை இந்த படத்தில் ஆர்யா செவ்வனே செய்திருக்கிறார்.

ஆனால், தமன்னாவிடம் காதல் சொல்லும் காட்சிகளில் எல்லாம் இவர் பல்லை இழித்துக் கொண்டு நடித்ததுதான் ரசிக்கவும் முடியவில்லை. சிரிக்கவும் முடியவில்லை.

ஆர்யாவுக்கு இணையான கதாபாத்திரத்தில் சந்தானம் வருகிறார். இப்படத்தில் இவருக்கும் ஒரு ஜோடி. கலாய்ப்பது என்றாலே சந்தானதுக்கு அல்வா சாப்பிட்ட மாதிரிதான். அதுவும் இந்த படத்தில் எல்லை மீறி எல்லோரையும் கலாய்த்திருக்கிறார். ஒருசில காமெடிகள் ரசிக்க வைத்தாலும், நிறைய காமெடிகள் சலிப்பைத்தான் கொடுக்கின்றன.

தமன்னா, ஏதோ பொம்மைபோல் படத்தில் வந்து போயிருக்கிறார் என்றுதான் சொல்லவேண்டும். காமெடி இவருக்கு சுத்தமாக எடுபடவில்லை. அதுவும் ராஜேஷ் மாதிரியான முழுநீள காமெடி படம் இயக்குனர்கள் படங்களில் நடிக்க இவர் இன்னும் பயிற்சி எடுக்க வேண்டும்.

சந்தானத்தின் மனைவியாக வரும் பானு, நீண்ட இடைவெளிக்கு பிறகு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். நடிப்பு ஓகேதான் என்றாலும், அவருடைய முகத்தில் முந்தைய படங்களில் பார்த்த பொலிவு இல்லை என்பது வருத்தமே.

தமன்னாவின் தோழியாக வரும் வித்யூலேகாவை சந்தானம் கலாய்க்கும் காட்சிகளில் எல்லாம் விதவிதமாக முகத்தோற்றங்களை காட்டி ரசிக்க வைத்திருக்கிறார். கருணாகரன் ஒருசில காட்சிகள்தான் வருகிறார். அவருக்கு வாய்ப்புகள் குறைவுதான். சிறப்புத் தோற்றத்தில் வரும் விஷாலை காமெடி போலீசாக மாற்றியிருக்கிறார்கள். இவர் வந்தாலாவது ஏதாவது சண்டைக் காட்சிகள் இருக்கும் என்று எதிர்பார்த்தால், ஏமாற்றமே மிஞ்சியிருக்கிறது.

ஆண்கள் பாதுகாப்பு சங்கத்தின் தலைவியாக வரும் ஷகிலா வரும் காட்சிகளில் தியேட்டர்களில் விசில் பறக்கிறது. ஒரேயொரு காட்சி மட்டும் வந்துவிட்டு ரசிகர்களை குஷிப்படுத்திவிட்டு சென்றுவிடுகிறார். நிறைய காட்சிகளை ஆர்யா-சந்தானமே படத்தில் ஆக்கிரமித்துக் கொண்டதால் மற்ற கதாபாத்திரங்களுக்கு இயக்குனர் முக்கியத்துவம் கொடுக்காமல் விட்டுவிட்டார்.

இயக்குனர் ராஜேஷ், தனது முந்தைய படங்களின் சாயலிலேயே இந்த படத்தையும் எடுத்திருக்கிறார். பார்ட் 1, பார்ட் 2 என்று சொல்லும் அளவுக்கு ஒரேமாதிரியான கதையை எடுத்து ரசிகர்களை போரடிக்க வைத்திருக்கிறார். அதிலும், இந்த படத்தில் கலாய்க்கிறேன் என்று படத்தில் உள்ள மொத்த கதாபாத்திரங்களையும் எந்த நேரமும் கலாய்த்துக் கொண்டேயிருப்பது சிரிப்பை வரவழைப்பதற்கு பதிலாக வெறுப்பைத்தான் கொடுக்கின்றன.

குடி, குடியை கெடுக்கும் என்று டைட்டில் கார்டில் போட்டுவிட்டு, நண்பர்கள் சந்தோஷமாக இருந்தாலும் குடி, சோகத்தில் இருந்தாலும் குடி, மற்றவர்களிடம் பேசும்போதும் குடியை பற்றியே பேச்சு என படம் முழுக்க குடியை சம்பந்தப்படுத்தியே காட்சிகளை எடுத்திருப்பது நெருடலை கொடுக்கிறது.

டி.இமான் இசையில் ‘லக்கா மாட்டிக்கிச்சு’, ‘வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க’, ‘நான் ரொம்ப பிஸி’ ஆகிய பாடல்கள் ரசிக்க வைப்பதோடு, ஆட்டம் போடவும் வைக்கின்றன. பின்னணி இசையிலும் டி.இமான் களைகட்டியிருக்கிறார். நீரவ்ஷா ஒளிப்பதிவில் காட்சிகள் ஒவ்வொன்றும் கலர்புல்லாக இருக்கிறது. இவரது ஒளிப்பதிவு படத்திற்கு மிகப்பெரிய பலமாய் அமைந்துள்ளது.


மொத்தத்தில் ‘வாசுவும் சரவணனும்’ மொக்க நண்பர்கள்

மேலும் »

Bahubali Movie Review (Tamil)

எழுதியவர்-   Funway
14:39:42 2015-07-11 சினிமா விமர்சனங்கள்

பாகுபலி - சினிமா விமர்சனம்


சரித்திர கால திரைப்படங்கள் எடுப்பதற்கு ஒரு அசாத்திய தைரியம் தேவை. அதற்கான செலவும், தேவைகளும் ஒருபுறம் இருக்க சலிப்பு ஏற்படாமல் ரசிகர்களை மகிழ்விக்க வேண்டிய பொறுப்பும் இயக்குனருக்கு இருக்கிறது. அந்த விதத்தில் மகதீராவில் இருந்த பொறுப்புணர்வுடனும், நான் ஈ திரைப்படத்தில் இருந்த தைரியத்துடனும் பாகுபலி திரைப்படத்தை எடுத்து வெற்றி பெற்றிருக்கிறார் இயக்குனர் ராஜமௌலி.
 
மலை மீதிருந்து குழந்தையுடன் உயிருக்கு போராடிய நிலையில் அடிவாரத்தை வந்தடையும் ரம்யாகிருஷ்ணன், தன் உயிரைக் கொடுத்து குழந்தையை காப்பாற்றுகிறார். மலைவாழ் இனத்தை சேர்ந்த ரோகினி அந்தக் குழந்தையை வளர்த்து வர, சாகச வீரனாக வளர்கிறார் பிரபாஸ். அருவியின் அடிவாரத்தில் வசித்து வரும் பிரபாஸ், மலைக்கு மேலே என்ன இருக்கும் என்ற கேள்வியால் மலை மீது ஏற பல முறை முயற்சி செய்யும் போது தமன்னா உதவி கிடைக்கிறது.
 
 ஒரு வழியாக மேலே ஏறியபின்பு தான் தமன்னா ஒரு போராளி என்பதும் தங்களது ராணியான அனுஷ்காவை மீட்டெடுக்க சபதம் செய்திருப்பதும் தெரியவருகிறது. ’உன் லட்சியம் என் லட்சியம்’ என்று சபதம் எடுத்து மதிமகிழ் நாட்டை நோக்கி பயணமாகிறார்.
 
முதல் முறையாக அந்த நாட்டிற்கு பிரபாஸ் சென்றாலும், இவரை பார்ப்பவர்களெல்லாம் பாகுபலி என்றழைக்க, சிறிது நேரத்தில் பாகுபலி என்ற மந்திரம் நாடு முழுக்க பரவவும் யார் அந்த பாகுபலி என்ற ஆச்சர்யத்துடன் ராஜாவான ராணாவிடம் அடைபட்டிருக்கும் அனுஷ்காவை மீட்டுச் செல்கிறார். வழியிலேயே மதிமகிழ் நாட்டு இளவரசனால் பிடிக்கப்பட படைத்தளபதி சத்யராஜும் அங்கு வந்து சேர்கிறார்.
 
பிரபாஸின் முகத்தை பார்க்கும் சத்யராஜும் பாகுபலி என மண்டியிட்டு பாகுபலியைப் பற்றி விவரிக்கிறார். மதிமகிழ் நாட்டு ராஜா ராணா டகுபதிக்கும், பாகுபலியான பிரபாஸுக்கும் என்ன தொடர்பு? இந்த பிரபாஸ் யார்? என்பதை கொடுத்த காசுக்கு வஞ்சனையில்லாமல் ரசிகர்களுக்கு இயக்குனர் ராஜமௌலி விருந்தாக படைக்கிறார்.
 
வாட்டசாட்டமான பிரபாஸ் சிவலிங்கத்தை தூக்கிச் செல்வதெல்லாம் நம்பும்படியாகத்தான் இருக்கிறது. ஆனால் அவர் தாவித் தாவி மலையேறும் காட்சியெல்லாம் நகைச்சுவைக்கென தனியே ஒரு கதாபாத்திரம் இல்லாத வேலையை செய்கிறது. போதை தேவை என்று இரண்டாம் பாதியில் வரும் பாட்டு தேவையில்லாதது. இந்திய சினிமாவின் அடையாளம் என்றெல்லாம் எழுதவேண்டிய திரைப்படத்தில் இப்படி ஒரு பாடல் இருப்பதையும் சொல்ல வைத்துவிட்டாரே இயக்குனர்.
 
லார்ட் ஆஃப் த ரிங்க்ஸ், மேட்ரிக்ஸ் வரிசையில் பாதியில் நின்றுவிட்டு, அடுத்த பாகத்தில் துவங்கும் கதை தான் பாகுபலி. இரண்டாம் பாதியில் சொல்லப்போகும் கதைக்கு முதல் பாதியில் ரசிகர்களை தயார்ப்படுத்தும் வித்தை ஒரு விதம். ஆனால் பாகுபலி இரண்டாவது பாகம் திரைப்படத்திற்காக முதல் பாகத்தில் ரசிகர்களை தயார்படுத்தியிருக்கிறார் ராஜமௌலி. ராணாவை பழி வாங்கி பிரபாஸ் எப்படி அரியணை ஏறப்போகிறார்? கிட்டப்பா ஏன் பிரபாஸின் அப்பாவை கொன்றார்? தமன்னா யார்? அனுஷ்கா யார்? என்று பல கேள்விகளை உருவாக்கி நம்மை இரண்டாம் பாகத்திற்காக காக்க வைத்திருக்கிறார் ராஜமௌலி.
 
பிரம்மாண்டம்!!! பிரம்மாண்டம்!!! அனைத்திலும் பிரம்மாண்டம்! காவல் வீரர்கள் சிலைகளைக் கூட மலை உயரத்திற்கு அமைத்து, கிராஃபிக்ஸில் விளையாடியிருக்கிறார்கள் படம் முழுவதும். சிறு பட்டாம்பூச்சிக்கு கூட நுணுக்கமாக ஓவியம் போல் வரைந்து அழகுபடுத்தியிருக்கிறார்கள். இயக்குனருக்கு அடுத்து அதிகம் மெனக்கெட்டவர் கலை இயக்குனராகத்தான் இருப்பார்.
 
ஒளிப்பதிவில் கலக்கியிருக்கிறார் செந்தில்குமார். எது கிராஃபிக்ஸ்? எது ஒரிஜினல்? என கண்டுபிடிக்க ரசிகர்கள் கஷ்டப்படுவதே ஒளிப்பதிவாளரின் திறமைக்குச் சான்று. அனைவருடன் ஒப்பிடும் போது இசையமைப்பாளருக்குத் தான் குறைந்த வேலை. ஆனாலும் காட்சிக்கு ஏற்ப இசையில் விஸ்வரூபத்தைக் காட்டி தன்னையும் நிலைநிறுத்தியிருக்கிறார். பாடல்கள் வெகுவாக கவரவில்லை மரகதமணி சார். மதன் கார்க்கியின் வசனங்கள் வழக்கமான சரித்திரகால படங்களில் இருப்பது போல் நம்மை வேற்றுகிரகவாசிகளாக உணர வைக்காமல் புரிந்துகொள்ளக்கூடிய வகையில் இருக்கின்றன.
 
நடிகர்கள் அனைவருமே கஷ்டப்பட்டிருக்கிறார்கள். பிரபாஸ் க்ளோஸ்-அப் காட்சிகளில் சிரிக்கும் சிரிப்பைத் தவிர அவரது முயற்சிகள் அனைத்தும் பாராட்டுக்குறியது. ஒரே ஒரு பாட்டில் கிளாமர் குயினாக வலம் வந்தாலும், கத்தி சண்டை, வில் வித்தை என அசத்துகிறார் தமன்னா. லட்சியத்தை நான் நிறைவேற்றுகிறேன் என கண்ணில் நீருடன் மன்றாடுகிறாரே ஒரு காட்சி போதும். அனுஷ்காவைப் போன்ற ஒரு அழகு நடிகை இப்படி ஒரு கதாபாத்திரத்திற்கு எப்படி ஒப்புக்கொண்டார் என்ற கேள்விக்கு பதில் இரண்டாவது பாகத்தில் பிரபாஸுடன் நடிக்கும் காதல் காட்சிகளில் கிடைக்கும் என நம்புவோம்.
 
சுள்ளி பொறுக்கும் பைத்தியமா நான்?’ என ஒரு கர்ஜனை கொடுப்பாரே சத்யராஜ் உண்மையில் தான் பயந்து போனாரோ என்னவோ? அப்படி ஒரு ரௌத்தரமான நடிப்பு. சத்யராஜ், நாசர் எப்படி நடித்திருப்பார்கள் என சொல்லித்தெரிய வேண்டியதில்லை. ஆனால் படையப்பாவுக்குப் பிறகு ரம்யாகிருஷ்ணனுக்கு அடித்தது லாட்டரி. பின்னி பெடலெடுத்துவிட்டார். ‘இதுவே என் கட்டளை. என் கட்டளையே சாஸனம்’ என்ற வசனம் ரம்யா கிருஷ்ணன் குரலாலும் நடிப்பாலும் கம்பீரம் அடைகிறது.
 
இப்படி படத்தில் பாராட்ட எவ்வளவோ விஷயங்கள் இருக்க, முதல் பாதியில் ராஜமௌலி ரசிகர்களை ஏமாற்றிவிட்டதையும் சொல்லியே ஆகவேண்டும். இரண்டாம் பாதியில் அரபு குதிரையைப் போல் அசுர வேகத்தில் திரைக்கதை மீது நம்மை உட்காரவைத்து கொண்டு சென்றதற்காகவும், அடுத்த பாகத்தில் நிச்சயம் ரசிகர்களை மீண்டும் பிரம்மாண்டத்தில் ஆழ்த்துவார் என்ற நம்பிக்கை இந்த படத்திலேயே ஏற்பட்டுவிட்டதாலும் அடுத்த பாகத்திற்காக காத்திருப்போம். பாகுபலி படம் பார்க்கும் ஒவ்வொரு ரசிகரும் இந்திய சினிமா அடுத்த கட்டத்திற்கு சென்றிருப்பதை பார்த்த வரலாற்று சாட்சியங்கள்.
 
பாகுபலி - பிரம்மிப்பு

மேலும் »

Romeo Juliet Movie Review

எழுதியவர்-   Funway
17:01:06 2015-06-12 சினிமா விமர்சனங்கள்

ரோமியோ ஜூலியட் - சினிமா விமர்சனம்

ஹீரோயின் ஒரு அனாதை, மிடில்கிளாஸ். ஆரம்பத்தில் இருந்தே சிரமமான சூழலில் வளர்ந்ததால் வசதியான வாழ்வுக்கு ஆசைப்படறார்.ஹீரோவும்மிடில் கிளாஸ் தான்.அவரோட நண்பர் பைக்ல, கார்ல அவர் போகும்போது அதைப்பார்த்து ஹீரோயினோட 3 தோழிகள் ஹீரோயினை உசுப்பேத்தி விடறாங்க.

ஆனானப்பட்ட சிம்மராசிக்கே தோழியால இடைஞ்சல் வரும்போது சாதா ராசிக்கு ஆபத்து வராதா?ஹீரோ பணக்காரர்னுநம்பி லவ்வறார்.ஹீரோவும் லவ்விங். ஆனா எப்போ ஹீரோ பணக்காரர் இல்லைனு தெரியுதோ அப்பவே லவ் பிரேக்கப் பண்றார்.

கன்வின்ஸ் பண்ற ஹீரோவைக்கடுப்பேத்த ஒரே நாளில் அவருக்கு லட்சம் ரூபா செலவு வைக்கறார்.ஹீரோ செம கடுப்பாகறார்.

ஹீரோயினுக்கு வேற மாப்ளை கூட மேரேஜ் ஃபிக்ஸ் ஆகுது.ஹீரோ அங்கே வந்து எனக்கு வேற ஃபிகர் செட் பண்ணிக்கொடுத்துட்டு மேரேஜ் பண்ணிக்கோ அப்டிங்கறார். தனுஷ் -ன் தேவதையைக்கண்டேன் பட சாயலில் நிகழும்

இவங்க லவ் என்ன ஆச்சு? என்பதே மிச்ச மீதிக்கதை

ஹீரோவா ஜெயம் ரவி..கதைத்தேர்வில் கவனம் தேவை.ஜிம் கோச்சரா வரும் ஹீரோ கனகச்சிதமாக பாடி லேங்குவேஜில் நடிச்சு அப்ளாஸ் வாங்கறார். சிம்புவை கடுப்பேத்த ஹீரோயின் கூட செம நெருக்கமா நடிச்சிருக்கார்.

ஹீரோயினா மிடி ஸ்பெஷலிஸ்ட் லேடி, குட்டி கவுனு போட்ட 55 கிலோ பவுனு ,சிம்புவின் முன்னாள் காதலி ஹன்சிகா. பிரமாதமான காஸ்ட்யூம். எல்லாம் துக்ளியூண்டு.ஐ லைக் இட்.ஹீரோ இவர் நெஞ்சில் தலை சாய்த்து தலையணையா படுத்திருக்கும்போது பாப்பா கண்டுக்கவே இல்லையே? சிம்புக்கு செம எரிச்சல் ஏற்படுத்தும் சீன்

பாடல்கள் செம கலக்கல் டப்பாங்குத்து. டண்டணக்கா நக்கா நக்கா பாட்டுக்கு தியேட்டரில் செம ரெஸ்பான்ஸ்

ஆண்களை திருப்திப்படுத்த , அவர்களிடம் கை தட்டல் வாங்க காட்சி அமைப்புகள் செயற்கையா அமைச்சது சலிப்பூட்டுது

ஒளிப்பதிவு , இசை பின்னணி இசை எல்லாம் நல்லா தான் இருக்கு

மனதைக் கவர்ந்த வசனங்கள்

1 ஹன் சிகா = அவனை எப்டி கரெக்ட் பண்றது?
தோழி = சரக்கு வாங்கிக்குடு.புல் மப்புல இருக்கும்போது மேட்டரை முடிச்சுடு

2 விடிவி கணேஷ் = பணத்துக்காக லவ் பண்றவ பொண்ணு இல்லை.அயிட்டம்

3
41 minutes ago
ஹன் = என் ரூம் க்கு நைட் டைம்க்கு ஏன் வந்தே?கலாட்டா பண்ண வந்தியா?
இல்லை.உன்னை கழட்ட வந்திருக்கேன்

4 ஹன் = உனக்கு நல்ல பொண்ணு கிடைப்பா.
ரவி = ஆனா உனக்கு நல்ல பையனே கிடைக்க மாட்டான்

5 பசங்களை ஏமாத்தும் பொண்ணுங்களே! நீங்க நாசமாப்போவீங்க 

6 சின்சியரா லவ் பண்ற எவனுக்கும் காதலி கண்ணியக்குறைவா டிரஸ் பண்ணி இருந்தா பிடிக்காது # ரோ ஜூ

7 கதைக்கருவில் காதலை /பெண்களை கேவலப்படுத்துவதால் ஏமாற்றமான முன் பாதி முடிந்த இடைவேளை # ரோமியோ ஜுலியட்

8 சின்சியரா லவ் பண்ற பொண்ணுக்காக உயிரைக்கூடக்கொடுக்கலாம், ஆனா பணத்துக்காக லவ்வும் பொண்ணுக்கு -----ரைக்கூடக்குடுக்கக்கூடாது

Review By : C.P.Senthilkumar ரேட்டிங் : 2.5/5

Review By : C.P.Senthilkumar ரேட்டிங் : 2.5/5


மேலும் »

Inimey Ippadithaan (Inime Ippadithan) Movie Review

எழுதியவர்-   Funway
17:00:57 2015-06-12 சினிமா விமர்சனங்கள்

 இனிமே இப்படித்தான் - சினிமா விமர்சனம்

ஹீரோ லவ் மேரேஜ் பண்ணிக்கனும்னு ஆசைப்படறாரு. அதுக்காக பலபொண்ணுங்க கிட்டே பிரபோஸ் பண்றாரு.எதும் செட் ஆகலை.அப்புறம் ஹீ ரோயின் கிட்டே நூல் விடறாரு. எடுபடலை.

இன்னொரு டிராக்ல ஹீரோவோட அம்மா ஜோசியக்காரர் சொன்னபடி 3 மாசத்துக்குள்ளே பையனுக்கு மேரேஜ் பண்ணி வைக்கனும்னு நினைக்கறார். பொண்ணு பார்க்கறாங்க.

ஹீரோயின் லவ்க்கு ஓக்கே சொல்லலைன்னதும் ஹீரோ போனாபோகுதுனு மேரேஜ்க்கு ஓக்கே சொல்றாரு.இப்போதான் ட்விஸ்ட். ஆரம்பத்துல வேணாம்னு சொன்ன ஹீரோயின் இப்போ லவ் க்கு ஓக்கே சொல்லுது.இடைத்தேர்த்லில் டிராஃபிக் ராமசாமியை ஆதரிப்போம்னு சொன்ன கலைஞர் பின் திடீர்னு அது பத்தி யோசிப்போம்னு பல்டி அடிச்சாரே அப்படி

இப்போ ஹீரோ 2 பொண்ணுங்க கிட்டே மாட்டிக்கிட்டாரு. சொத்துக்குவிப்பு வழக்கு ,வருமான வரி ஏய்ப்பு வழக்குன்னு புரட்சித்தலைவி மாட்னாங்களே அப்டி.

அப்பவும் ஹீரோக்கு ஒரு நப்பாசை. அன்புமணி தான் அடுத்த முதல்வர்னு அவரோட அப்பா அறிவிச்ச மாதிரி ஹீரோவுக்கும் 2 பேரையும் சமாளிக்க ஆசை. எப்படி சமாளிச்சார் என்பதே மிச்ச மீதி திரைக்கதை

ஹீரோவா காமெடி சூப்பர் ஸ்டார் ( என பட்டம் போட்டுக்கிட்ட ) சந்தானம், சும்மா சொல்லக்கூடாது, ஆள் செம ஸ்மார்ட். விஜய் , சூர்யா , சிம்பு க்கு சவால் விடும் பர்சனாலிட்டி.காமெடியனாக ஆரம்பத்தில் வராமல் ஹீரோவாக மணி ரத்னம் படத்தில் இண்ட்ரோ ஆகி இருந்தால் துல்ஹர் ரேஞ்ச்க்கு போய் இருப்பார். முதல் படத்தை விட நல்ல டெவலப்மெண்ட் நடிப்பில் நடனத்தில் . ஆங்காங்கே வழக்கமான அவரது ஒன் லைனர்கள் கலக்கல் ரகம்

ஹீரோவே தயாரிப்பாளர் என்பதால் 2 ஹீரோயின் புக் பண்ணுவது தமிழ் சினிமா கலாச்சாரம்

ஒரு ஹீரோயின் பேரு ஆஷ்மா சவேரி. சவுரியே வைக்காத சாந்தமான கவுரியா இருக்கார்.பாடல் காட்சியில் லோ கட் ஜாக்கெட்டில் அவர் குதிக்கும்போது குதிங்க குதிங்க நல்லா எம்பி எம்பி குதிங்கன்னு சொல்லத்தோணுது,சின்ன வயசு, சின்னக்கண்ணு

இன்னொரு ஹீரோயின் பேரு அகிலா கிஷோர். நயன் தாரா சாயல் புருவம் விழிகளெல்லாம் அச்சு அசல் அப்படியே. வேணும்னே பார்த்து பார்த்து செலக்ட் பண்ணி இருக்காங்க

இதுல சோகம் என்னான்னா குடும்பக்குத்து விளக்கு போல் இருக்கும் அகிலாவுக்கு சீன் கம்மி. கும்தலக்கடி கும்மாவா இருக்கும் ஆஷ்மாவுக்கு சீன்ஸ் அதிகம்.

இங்கே நான் சீன்ஸ்னு சொன்னது சாதா சீன்ஸ் தான்.

தம்பி ராமய்யா மாமாவா வர்றார். சுமாரா காமெடி பண்றார். விடிவி கணேஷ் ஓப்பனிங்கில் கலக்கறார், பின் சந்தானம் ஏனோ அவரை இருட்டடிப்பு செய்து விட்டார்,

சந்தனத்தின் பாடி லேங்குவேஜில் ஒரு சராசரி ஹீரோவுக்கு உண்டான தெனாவெட்டு வந்து இருக்கு.அவரை காமெடியனாக பார்ப்பதில் தான் மக்களுக்கு ஆசை. இதை உணர்ந்து அவர் காமெடி சப்ஜெக்ட்டில் நடித்த்தால் தேவலை

சராசரி மசாலா ஹீரோவா நடிக்கத்தான் 1000 பேர் இருக்காங்களே?

இசை நல்லாருக்கு. 3 பாட்டு ஹிட்டு. பிஜிஎம் கூட ஓக்கே தான்/

இயக்கம் இருவர், விஜய் டி வி யில் லொள்ளு சபா இயக்கிய இயக்குநர்கள்
இருவர் பெயரிலும் எடுத்து முருகானந்தம்னு போட்டிருக்காங்க.

மனதைக் கவர்ந்த வசனங்கள்

1 பொண்ணோட அம்மா சரி இல்லையே?

பொண்ணு.நல்லாருக்கும்.

மரமே சரி இல்லைன்னா அதுல காய்க்கற காய் எப்டி இருக்கும்?,

2 நயன் தாரா வா இருந்தாலும் நைட்டில நார்மலாத்தான் இருக்கும் # இ இ

3 பொண்ணுங்க ஜீன்(ஸ்) போடலாம்.ஆனா சீன் போடக்கூடாது 

4 இவதான் என்னோட ஜுமாக்கா ஜூ

5 சின்ன சின்ன சண்டைகளை மறந்துட்டு வாழ்க்கைல எல்லாரும் சந்தோஷமா இருக்கனும்னுதான் கடவுள் நமக்கு ஞாபகமறதி யைத்தந்திருக்கார் 

6 ஏன் இவ்ளவ் கேவலமா சிரிக்கறே?

நீங்க ரொம்ப லேட்

இல்லையே நீ சிரிச்சதுமே சொல்லிட்டனே? 

7 என்னடா மண்டை இது? டீக்கடைல டைல்ஸ் போட்ட மாதிரி ?# இ இ

8 யாருங்க இவன்.?அடிக்கற வெய்யிலுக்கு 5 சொக்கா போட்டிருக்கான்? # இ இ

9 எம் ஜி ஆர் க்கு பிடிச்சது அண்ணா.

இதெல்லாம் ஒரு பொண்ணா ? # இ இ

10 என்ன பிரச்னை?

சொன்னா கிழிச்சிடுவியா?

ஏற்கனவே உன் டிரஸ் கிழிஞ்சா மாதிரி தானே இருக்கு?,# இ இ

11 ஸ்பீடுபிரேக்கர்ல ஏறுன ஸ்கூட்டி மாதிரி என்னமோ பண்ணிட்டிருக்கியே? என்னது?

தோப்புக்கரணம்.

ஓ.முழுசா போடு.சாமியை ஏமாத்தாத # இ இ

12 எங்க ஜோடிப்பொருத்தம் எப்டி?

பழைய சொம்பு ல பாரீன் சரக்கை ஊத்துனா மாதிரி 

13 ஹலோ.அப்பா இருக்காரா?

குளிச்ட்டு இருக்காரு.நீங்க?

காலைலயே குளிச்ட்டேன்.

அய்யோ.நீங்க யார்?னு கேட்டேன் # இ இ

14 லவ் பண்றதை நிரூபிக்க பசங்க மட்டும் எது வேணாலும் செய்றாங்க.லவ் இல்லைனு நிரூபிக்க பொண்ணுங்க எதுவுமே செய்யறதில்லையே ஏன்? # இ இ

15 சம்சா எவ்ளவ்?
200 ரூபா
என்னடா> சமோசா கேட்டா சாம்சங் ஃபோன் ரேட் சொல்றே? 

16 இந்த சீனி சிரிப்பு காட்டி தானே பார்த்திருக்கே? சீன் காட்டி பார்த்ததில்லையே? ஃபைட் பஞ்ச் பை சந்தானம் # இ இ

17 அங்க்கிள் லுங்கி டான்ஸ் ஆடறேன்னு சொல்லிட்டு மங்கி டான்ஸ் ஆடிட்டு இருக்கீங்க? # இ இ

18 இவன் நார்மலா பேசுனாலே புரியாது , ஹஸ்கி வாய்ஸ்ல பேசறான் # இ இ

19 4 சுவருக்குள் கிஸ் பண்றதை விட பீச்ல 400 பேர் முன்னால அடிக்கும் கிஸ்க்கு கிக் அதிகம் # இ இ


Review By : C.P.Senthilkumar ரேட்டிங் : 2.5/5

மேலும் »

Mass Movie Review

எழுதியவர்-   Funway
20:35:56 2015-05-29 சினிமா விமர்சனங்கள்

மாஸ் - சினிமா விமர்சனம்


தமிழ் சினிமா வுக்கு இப்போ பேய் சீசன் ,இதுவரை கோடம்பாக்கத்தில் கோலோச்சிய பேய்ப்படங்கள் லிஸ்ட் எடுத்தா ஜெகன்மோகினி, நீயா?யார்?,சந்திரமுகி,அருந்ததி,பீட்சா , யாவரும் நலம் .அரண்மனை ,முனி, காஞ்சனா1, காஞ்சனா 2 , யாமிருக்க பயமே ,டார்லிங், டிமாண்டிகாலனி அப்டினு பட்டியல் நீண்டுக்கிட்டே போகும் .அந்த வகைல சூர்யா தன்னோட பங்குக்கு ஒரு பேய்ப்படம் கொடுத்திருக்கார் .

வெங்கட் பிரபு வுக்கு ஒரு ராசி உண்டு . இதுவரை அவர் ஃபிளாப் படமே தர்லை . செம ஹிட் படங்கள் , சராசரி வெற்றிப்படங்கள் என எப்பவும் அவர் பாதுகாப்பான எல்லையில் தான் இருக்கார். சென்னை -28,சரோஜா, மங்காத்தா இவை 3ம் அவர் உச்சபட்ச ஹிட்சுன்னும், கோவா, பிரியாணி சுமார் ரக ஹிட்சும்னும் சொல்லலாம். மாஸ் எந்த ரகம்னு பார்ப்போம் .

ஹீரோவும் , ஹீரோவோட ஃபிரண்டும் 2ஜி அளவோ , டான்சி அளவோ இல்லாம சின்ன அளவில் திருடும் திருடர்கள் .( இந்தக்காலத்துல திருடனையும் , கொள்ளைகாரனையும், தான் ஜனங்களுக்குப்பிடிக்குது, உயர் பதவியில் அமர வெச்சு வேடிக்கை பார்க்கறாங்க ) 2 பேரும் ஒரு விபத்தில் சிக்கிக்கறாங்க . இதுல ஹீரோவோட ஃபிரண்ட் ஸ்பாட் அவுட். அவரு இயக்குநரோட தம்பி என்பதால் சாகாம பேயா மாறி படம் முழுக்க ஹீரோ கூடவே பேயா சுத்தறாரு .

ஹீரோக்கு தலைல அடிபட்டுடுச்சு. தமிழ் சினிமா ஹீரோக்கு தலைல அடிபட்டா என்ன ஆகும்? ரெண்டே சாய்ஸ் தான் . நான் யாரு? எங்கே இருக்கேன்?னு பேக்கு மாதிரி கேட்டு பழசை எல்லாம் மறந்துடுவாரு . அல்லது அவருக்கு அபூர்வ சக்தி ஏதாவது வந்துடும் . இதுல ஹீரோக்கு பேய்களை மனித உருவில் காணும் வாய்ப்பு கிடைக்குது.

ஹீரோ இதை வெச்சு பணம் பண்ண நினைக்கறார். உங்க வீட்ல பேய் நடமாட்டம் இருக்கு அவங்களை விரட்றேன்னு சொல்லி காசு சம்பாதிக்கறார். ஹீரோவோட அபூர்வ சக்தியை அறிஞ்சுக்கிட்ட பேய்ங்க தங்களோட நிறைவேறாத ஆசைகளை நிறைவேற்ற ஹீரோவைப்பயன்படுத்திக்குதுங்க . எப்படி காங்கிரசும் , திமுக வும் ஒருவருக்கு ஒருவர் ஊழல்ல துணையா இருந்தாங்களோ அந்த மாதிரி. ஜெ வும் , சசிகலாவும் போல .

அப்போதான் ஒரு வீட்டுக்கு பேய் ஓட்டப்போன ஹீரோ தன் அப்பா பேயை சந்திக்கறார். அப்பாவோட குடும்பத்தையே அழிச்ச கும்பலை பழி வாங்க ஹீரோ எப்படி உதவி பண்றார் என்பதுதான் கதை

சுருக்கமா சொல்லனும்னா அப்பா அம்மா, அக்காவைக்கொன்னவங்களைப்பழிவாங்கும் வழக்கமான பழி வாங்கும், கதைதான் பேய் , திகில் வகையறால சொல்லி இக்ருக்காங்க

ஹீரோவா அகரம் ஃபவுண்டேஷன் சூர்யா . அஞ்சான்ல வாய்ல குச்சியோட வந்தாரு, இதுல காதில் ஹூக்கோட வர்றாரு. பேய் சூர்யா ஹேர் ஸ்டைல் , கெட்டப் எல்லாம் ஹாலிவுட் தர மேக்கப் . கலக்கல் ரகம் . 2 கெட்டப் என்பதால் ஆக்சன் காட்சிகளுக்கே டைம் சரியா இருக்கு , பாவம் ரொமான்ஸ் ஏரியா கவர் பண்ண முடியல .

ஹீரோயினா , அப்பாவுக்கு ஜோடியா பிரனீதா. வெண்ணெயில் செஞ்ச மிதக்கும் சிலை மாதிரி ஒரு தேகம் .வெய்யில்ல போனா நிச்சயம் உருகிடுமோனு பதற வைக்கும் பளபளப்பு.பேருக்கு ஏற்ற வகையில் சில காட்சிகளில் ப்ரா நஹி தா .காஸ்ட்யூம் செலவை மிச்சம் பண்ணும் நல்ல மனசுக்காரி போல .

மகன் கேரக்டருக்கு ஜோடியா நயன் தாரா . சுருக்கமா சொல்லனும்னா பிரனீதாவுக்கு முன்னாடி நயன் எடுபடலை . பின்னாடி எடுபட்டுதா?னு கேட்கக்கூடாது .தமிழன் புற முதுகிட்டு ஓடவும் மாட்டான், புற முதுகை பார்க்கவும் மாட்டான். சோகமான வசனம் பேசும் காட்சிகளில் அந்தக்கால தேவயானி போல் தலையை ஆட்டி ஆட்டி பேசுது . இதென்ன புதுப்பழக்கம் > மேடம்?

இயக்குநரோட தம்பி அப்டிங்கற ஒரே ஒரு காரணத்துகாக படம் முழுக்க சும்மானாச்சுக்கும் வந்து மொக்கை போடும் பிரேம்ஜி முடியல ஜி . க்ளோசப்ல வேற அடிக்கடி காட்றாங்க . கருணை காட்டுங்க

சமுத்திரக்கனியை எல்லாம் கேரக்டர் ஆர்டிஸ்ட்டா பார்த்து தமிழன் பழகிட்டான் . வில்லனா காட்னா ஏத்துக்குவானா?

ஆர் பார்த்திபன் போலீஸ் ஆஃபீசரா இடைவேளைக்குப்பின் வந்து கலக்கறார்,ஒன் லைன் பஞ்ச் 8 சொல்றார் . ஓக்கே . பின் பாதி போர் அடிக்காம இருக்க இவரும் ஒரு காரணம்

மொட்டை ராஜேந்திரன் கெஸ்ட் ரோல் . ஓக்கே

யுவன் சங்கர் ராஜா பிஜிஎம்மில் வழக்கம் போல் . வீரம் , கத்தி ,துள்ளாத மனமும் துள்ளும் , மான் கராத்தே என ஆங்காங்கே டச் பண்ணிட்டு வர்றார். எதுக்கு? சொந்த மியூசிக் கடல் போல் இக்ருக்குமே?

வெங்கட் பிரபுக்கு ஒரே ஒரு அட்வைஸ் . நமக்கு எது வருமோ அதை மட்டும் பண்ணனும், அடுத்தவன் பண்ணுனது ஹிட் ஆகிடுச்சு நாமும் அதே போல் ட்ரை பண்ணலாம்னு பண்ணா இப்படித்தான் சொதப்பிடும் . காமெடி , த்ரில்லர் , நெகடிவ் ஸ்டோரி தான் உங்க ஏரியா . அதிலே யே ஸ்கோர் பண்ணவும்

வசனகர்த்தா வுக்கு சம்பள பாக்கி போல ,. கடனே -ன்னு எழுதி இருக்கார்

ஒளிப்பதிவு எடிட்டிங் , ஆர்ட் டைரக்சன் ஓக்கே ரகம்


Review By : C.P.Senthilkumar ரேட்டிங் : 2.5/5

மேலும் »

Nannbenda Movie Review

எழுதியவர்-   Funway
16:09:52 2015-04-03 சினிமா விமர்சனங்கள்

நண்பேன்டா - சினிமா விமர்சனம்

ஹீரோ வழக்கம் போல் ஹீரோயினை எதேச்சையாப்பார்த்து பார்த்ததும் லவ்வறாரு. ஃபிரண்டோட ரூம்ல தங்கறாரு. எதிர் வீட்ல தான் ஹிரோயின்.

ஹீரோயின் ஒரு பேங்க்ல ஒர்க் பண்ணுது.ஹீரோ பல ரூட் விட்டு பிராக்கெட் போடறாரு.அதுக்கு ஹீரோயின் டிமிக்கி கொடுத்துட்டே இருக்கு . இடைவேளை ட்விஸ்ட்டா என்னைப்பத்தி பயங்கரமான ஒரு ஃபிளாஸ்பேக் இருக்குனு பில்டப் தருது . என்னைப்பத்தின பழைய விஷயங்களைத்தெரிஞ்சுக்கிட்ட பின் லவ் பண்ணுனு சொல்லுது. எங்கே சிம்பு பிரபுதேவா ஆர்யா மேட்டரெல்லாம் வெளில வந்துடுமோன்னு தமிழன் பதர்றான்.

அப்போதான் ஹீரோயின் சொல்லுது . நான் ஒரு கொலை செஞ்சு ஜெயில் தண்டனை பெற்ற குற்றவாளிங்குது

இந்த பயங்கரமான ட்விஸ்ட்டோட இடைவேளை, இதுக்குப்பின் என்ன ஆகுது ? என்பதே மிச்ச மீதிக்கதை

ஹீரோவா தமிழ் நாட்டின் மக்கா நாள் முதல்வர் உதயநிதி ஸ்டாலின் . ஆள் நல்லா தேறிட்டார் . டயலாக் டெலிவரி , டான்ஸ் மூவ்மெண்ட் எல்லாம் ஓக்கே . வசனத்தில் சிம்புக்கு மறைமுகமா கவுண்ட்ட்ர் கொடுக்கறார்

ஹீரோயினா நயன் தாரா..டிரஸ்சிங் சென்ஸ் ராணி. , தென்னகத்தின் மான்செஸ்டர் கோவை மாதிரி மான் செஸ்ட் டர் இந்தப்பாவை . ஹை ஹீல்ஸ் போட்டு இவர் நடக்கும்போது போதை த:ளும்புது. பாடல் காட்சிகளில் ஆடை அலங்காரம் அசத்தல் , பல காட்சிகளீல் குஷ்பூக்கே டஃப் ஃபைட் தர்றார் , நடிப்பில் இல்லை பேக் யூ லோஓஓஓஒ நெக் ஜாக்கெட் டிசைனில். ஒரு மெடிக்கல் மிராக்கிள் ட்விட்டர்ல நயன் ஃபோட்டோ போட்ட லேடி ட்வீட்டர் இன்னைக்கு போட்ட நெயில் பாலீஸ் கலர் ல நயனும் வருது, வாட் எ கோ இன்சிடெண்ட்?

காமெடியனா நிஜமான ஹீரோவா சந்தானம் முன் பாதியில் ஹீரோவுக்கு நிகரான காட்சிகள் பின் பாதியில் ஹீரோவை விட அதிக காட்சிகள் . பெரிய அளவில் கவுண்ட்ட்டர் குடுக்கலை இருந்தாலும் மக்கள் ரசிக்கறாங்க

மனோபாலா காமெடி லைட்டா பண்றாரு

வில்லனா வரும் நான் கடவுள் மொட்டை வரும்போதெல்லாம் தியேட்டர் ஆரவாரம்

மனதைக் கவர்ந்த வசனங்கள்

1 காலைல சூப்பர் பிகரை பாத்தேண்டா

எவனாவது சுமாரான பிகரைப்பார்த்தேன்னு சொல்றீங்ளா? #,ந

2 ஸ்ரீ தேவியை சின்ன வயசில் பாத்தா எப்டி இருக்கும்?

கை விரல் சூப்பிக்கிட்டே இருக்கும் # ந

3 யார்ரா இவன் ?அவசரத்தில் செஞ்ச அண்டா மாதிரி ? # ந

4 பொண்ணுங்களுக்கு பின்னாலயே பாலோ பன்ற பையனை விட முன்னால டேரா வர்ற பையனைத்தான் பிடிக்கும் #,ந

5 இந்த சாங் போட்டதும் ஆடுன பொண்ணை அயிட்டம்னு எப்டி கண்டுபிடிச்சே?

சந் = ஏன்னா இது ஐட்டம் சாங் #,ந

6 உனக்கும் லவ் ஃபெய்லியரா?

ஏன்? எந்திரன் சிட்டிக்கே லவ் இருக்கும்போது எனக்கு இருக்கக்கூடாதா>? # ந

7 பீடிக்கட்டு மாதிரி இருக்கான் ? , இவன் தான் பி டி மாஸ்டரா?

அய்யோ , அப்பா.

இவன் தான் உங்கப்பனா? # ந

8 சந் = என்னடா? பாய் விட்டுக்கல்யாணத்துல சாம்பார் சாதம் போட்ட மாதிரி பார்க்கறே? @ ந

9என்னடி ?மான் தயிர் சாதம் சாப்பிட்ட மாதிரி ஒரு சத்தம்?

ஃபோன்ல உங்களுக்கு கிஸ் கொடுத்தேன் # ந

10 க்ளீன் சேவ் செஞ்ச கிங்க்காங் மாதிரி இருப்பீங்களே , இப்படி முகமூடி போட்ட மூஞ்சூறு மாதிரி ஆகிட்டீங்களே? ,சந்தானம் டூ மொட்டை ‪#‎ந‬

படம் பார்க்கும்போது அப்டேட்டட் ட்வீட்ஸ்

1கை தட்ட கூச்சல் போட 80,பேர் அடியாள்கள் கூட்டிட்டு.வந்திருக்காக.கும்தலக்கடி கும்மாவா?கழகம்னா சும்மாவா?# ந

2 காக்கி சட்டை ஓப்பனிங் சீன் சிங்கம் உல்டா ரீமிக்ஸ்.#,ந

3 டேய் ஜோக் சொன்னபின் கை தட்டுங்கடா.250 ரூபா வாங்கிட்டு.2000,ரூபாக்கு கை தட்டாதீங்கடா #,ந

4 காமெடி சூப்பர் ஸ்டார் சந்தானம் என்ட்ரி ,கெட்டப் சூப்பர்.ஹீரோவே இவர் தான்

5 2 லவ்வர் லாலி பாப் 2 கோடி நாயகி நயன் என்ட்ரி.ஹைஹீல்ஸ் போட்ட ஹைலிட்டா போல்டா கிளாமர் காட்டும் போர்ன்விட்டா

6 ஹீரோயின் பேரு "ரம்"யா.ஏதோ குறியீடு

7

நயன் டிசர்ட் ல LOVE PINK னு வசனம்

பிங்க்கி பிங்கி பாங்கி

8 அவள் என்னைப்பார்த்த் பாடலில் நயனின் சின்ட்ரெல்லா கவுன் கலக்கல்.ஆடை வடிவமைப்பாளர் ராக்கிங்

9 உலகப்புகழ் பெற்ற பெறப்போகும் நயன் டாஸ்மாக் ல.சரக்கு வாங்கும் சீன்

10 உதயநிதி டூ நயன்.= நான் லவ் டார்ச்சர் பண்ற.ஆளில்லை #,சூசகமா சிம்புவை தாக்கறாரா ?

11 லெமனா தேகத்தில் தகதகக்கும் தமனா என்ட்ரி

இயக்குநர் பாராட்டுப்பெறும் இடங்கள்

1 எம் ராஜேஷ் சிஷ்யர் என்னும் லேபிள் நல்ல வியாபாரம் ஆக உதவி

2 சந்தானம் ஹீரோ என உதயநிதியிடம் சொல்லாமல் சமாளிச்சது . அவர் தான் ஹீரோ என நம்ப வெச்சது

3 நயன் தாராக்கு ஆடை அலங்காரம் அசத்தல்

4 ஃபாரீன் லொக்கேஷனில் ஆடும் டூயட் சீன் இந்தியன் அக்கடான்னு நாங்க பாட்டு டான்சை நினைவுபடுத்தினாலும் அருமை ,க்ரூப் டான்சர்ஸ் கலக்கல் ஃபிகர்ஸ் ,அதுவும் ஃபாரீன் ஃபிகர்ஸ்

இயக்குநரிடம் சில கேள்விகள்

1 டாட்டா பிர்லா பட ஆர் பார்த்திபன் கவுண்டமணி காம்போ காட்சிகள் பல இடங்களில் உல்டா

2 பேங்க் ல ஒர்க் பண்ணும் ஹீரோயினுக்கு ஏன் லேடீஸ் ஹாஸ்டல்? அபார்மெண்ட் அலாட் இருக்காதா?

3 ஹீரோவின் நண்பரின் வீட்டு எதிரே தனி வீடு போல் சில காட்சிகள் , லேடீஸ் ஹாஸ்டல் போல் சில காட்சிகள் . எடிட்டிங் ஃபால்ட்டா?

4 திருடியா க வரும் அந்த வில்லி கேரக்டர் போர்சன் தேவையே இல்லாதது

5 எம் ராஜேஷ் ஃபார்முலாவை அச்சு அசல் பிசகாமல் அப்டியே டிட்டோ உல்டா அடிக்கனுமா/?


Review By : C.P.Senthilkumar ரேட்டிங் : 2.75/5

மேலும் »

Komban Movie Review

எழுதியவர்-   Funway
14:05:57 2015-04-03 சினிமா விமர்சனங்கள்

கொம்பன் – சினிமா விமர்சனம்

ஹீரோ கிட்டத்தட்ட ஒரு சண்டியர் மாதிரி. கிராமத்திலேயே பெரிய ரவுடி .கோபம் அவருக்கு மூக்குக்கு மேல வரும்.நல்ல வேளை நாக்குக்கு மேல வர்லை . கெட்ட வார்த்தையா பேசி இருப்பாரு.

இந்த ரவுடி எதேச்சையா ஜிகிடியைப்பார்க்கறாரு. அதாங்க நம்ம ஹீரோயின் . .உடனே பெண் கேட்டு கல்யாணமும் பண்ணிக்கறாரு.ஹீரோயின் மேரேஜ்க்கு ஒரு கண்டிஷன் போடுது ( பொதுவாவே பொண்ணுங்க ஏதாவது கண்டிஷன் போட்டுக்கிட்டுதான் இருப்பாங்க . வெய்யில் காலம்னா ஏர்கண்டிஷன் வேணும்பாங்க )

அதாவது பாபபாவோட அப்பா வீட்டோட மாமனாரா இருப்பாரு. அப்டியே இருக்காரு. ஒரு டைம் புருசன் பொண்டாட்டியை அடிக்கப்போக அப்பா குறுக்கால புகுந்து தடுக்க அடி மாமனாருக்கு விழுது. பிரிவு . இடைவேளை .

பொண்டாட்டியைப்பிரிஞ்சு இருக்க முடியாத ஹீரோ மாமனாரை மதிச்சு நடக்காரு . வில்லன்க கூட்டம் மாமனாரைப்போட அலையும்போது மாப்ளை எப்டி மாமனார் மெச்சிய மருமகன் ஆனார் என்பதே கதை

ஹீரோவா கார்த்தி . பருத்தி வீரன் கெட்டப்பை நினைவு படுத்தும் தெனாவெட்டான தோற்றம் . அசால்ட்டா நடிச்சிருக்காரு.ஆக்‌ஷன் காட்சிகளில் புகுந்து விளையாடி இருக்காரு . காதல் காட்சிகளில் கேட்கவே வேண்டாம் . பொதுவாவே ஹீரோக்கள் நடிப்பு வர்லைன்னாக்கூட ஹீரோயின் கூட கெமிஸ்ட்ரி மட்டும் ஒர்க் அவுட் ஆகிடற மாதிரி பார்த்துக்குவாங்க . இதிலும் டிட்டோ

ஹீரோயினா கும்கி இடை அழகி மாசற்ற தழும்பழகி ,மாநிலம் போற்றும் மாநிற அழகி லட்சுமிமேனன்’ இவர் ஹீரோ கூட நெருக்கமா டூயட் சீன்ல நடிக்கறதைப்பார்த்தா அதிர்ச்சியா இருக்கு .ஆரம்பத்துல பானுமதி , ரேவதி , சுஹாசினி மாதிரி இருந்தவர் நய ன் தாரா ரெஞ்சுக்கு இறங்கி லோ ஹிப்பில் கலக்கறார்

மாமனாரா ராஜ்கிரண். நல்ல குணச்சித்திர நடிப்பு . பெண்களைக்கவரும் வகையில் வசனம் நடிப்பு எல்லாம் கன கச்சிதம் , மஞ்சப்பைக்குப்பின் இவருக்கு ஒரு நல்ல படம் ( நமக்கல்ல)

தம்பி ராமையா வழக்கம் போல் மொக்கை . கருணாஸ் ஆங்காங்கே

வில்லனா வருபவர் ( ஸ்டண்ட் மாஸ்டர் சூப்பர் சுப்பராயன்) சாண்டோ சின்னப்ப தேவர் போல் தோற்றம் ., மிரட்டலான நடிப்பு .பின்னிட்டார்

இசை ஜி வி பிரகாஷ் குமார் . அங்கங்கே உல்டா இருந்தாலும் ஓக்கே ரகம்

மனதைக் கவர்ந்த வசனங்கள்

1 நீங்க பதுங்கி அடிச்சா அவன் பாய்ஞ்சு அடிப்பான்.பாய்ஞ்சு அடிச்சா பயங்கரமா அடிப்பான் #,கொ பஞ்ச்

2 தன்மானம் பார்க்கறவனுக்கு வருமானம் இருக்காது # கொ

3 கோயிலுக்கு சனம் மட்டும் வந்தா தேவல.ஜாதியும் இல்ல சேர்ந்து வருது #,கொ

4 கோவக்காரன்னு சொல்லறீங்ளே.பேசிட்டு இருக்கும்போதே அடிப்பானோ?

அடிச்ட்டுதான் பேசுவான் #,கொ

5 பொண்ணுங்களுக்கு அப்பா நெத்தி போல்.புருசம் நெத்தில இருக்கும் குங்குமம் போல் #,கொ

6 அப்பா முகத்தில் விழிப்பதை விட புருசன் முகத்தில் விழிச்சா பொண்ணோட.அப்பாக்கு நல்லது #,கொ

7 ஆளுக்கு ஆள் அடிக்கறதாலதான் இதுக்கு ஆல்ஹஹால்னு பேரு #,கொ

8 மருமகன் வீட்ல மாமனார் பல நாள் தங்கி இருக்கலாம்.ஆனா மாமனார் வீட்ல ஒரு நாள் கூட மாப்ளை தங்கக்கூடாது.மரியாதை இருக்காது# கொ

9 ஜெயிச்சவனை விட தோத்தவனுக்குத்தான் வெறியும் வேகமும் அதிகம்.அவன் கிட்டே தான் ஜாக்கிரதையா இருக்கனும் # கொ

10 ஒரு மனுசன் எதை வேணா.விட்டுக்கொடுப்பான்.ஆனா தான் செஞ்ச தப்பை ஒத்துக்கிட்டு மன்னிப்பு மட்டும் கேட்கவே மாட்டான் # கொ


Review By : C.P.Senthilkumar ரேட்டிங் : 2.5/5

மேலும் »

Yennai Arindhaal Movie Review

எழுதியவர்-   Funway
13:51:56 2015-02-05 சினிமா விமர்சனங்கள்

என்னை அறிந்தால் சினிமா விமர்சனம்

ஹீரோ ஒரு போலீஸ் ஆஃபீசர் . ஹீரோயின் 1 ஆல்ரெடி டைவர்ஸ் ஆன வர். ஒரு பெண் குழந்தை உள்ள அழகி .இருவருக்கும் காதல். திருமணத்துக்குத்தயார் ஆகும்போது நாயகி கொல்லப்படுகிறார். அவரது மரணத்துக்குக்காரணமானவரை ஹீரோ தேடிட்டு இருக்கார்.

வில்லன் என்ன மாதிரி டைப் ? பணக்கார ஆளுங்களுக்கு ஏதாவது ஆபரேஷன் நடக்கும்போது அவங்களுக்கு இதயம்/கல்லீரல் மாதிரி உடல் உறுப்புகள் தேவைப்பட்டா ஏழை ஜனத்தைக்கடத்தி அவங்க உறுப்பை தடாலடியா எடுத்து ஹோல்சேல் பண்ற ஆள். வில்லன் இப்போ டார்கெட் வெச்சிருப்பது ஹீரோயின் நெ 2 .

ஹீரோ கஸ்டடி ல இருக்கும் குழந்தையை வில்லன் கடத்தி ஹீரோயின் 2 வை எக்சேஞ்ச் ஆஃபர்ல கேட்கறான் . இருவருக்கும் நடக்கும் கண்ணாமூச்சி தான் பின் பாதி திரைக்கதை .

ஹீரோவா அல்டிமேட் ஸ்டார் அஜித் குமார் . ஹீரோயிசம் அதிகம் காட்டாத ஆனா அதையும் மீறித்திமிரும் ஹீரோயிசம் கொண்ட ஆண்மைத்தனம் கொப்புளிக்கும் பாடி லேங்குவேஜ் உள்ள வெகு சில சினிமா ஹீரோக்களில் ஒருவர் .3 விதமான கெட்டப்களில் வர்றார். வழக்கம் போல் சால்ட் & பெப்பர் லுக்கில் தான் அப்ளாஸ் அதிகம் . யூத்தான கெட்டப்பில் பெண்களைக்கவர்கிறார். படம் முழுக்க அடக்கி வாசித்து வில்லனை ஆர்ப்பரிக்க வைத்திருக்கிறார்.

ஹீரோயினா த்ரிஷா . கொள்ளை அழகு சேலையில் , பட்டு சேலையில் பவனி வரும் ஆரணிப்பட்டு தேவதை . இவரது சிரிப்பும் , இன்னும் இருக்கும் இளமையும் பார்த்துட்டே இருக்கலாம் .

இன்னொரு ஹீரோயினா அஸ்கா உதட்டழகி ,மல்கோவா மாம்பழ கன்ன அழகி ,ஆறடிக்கு 2 இஞ்ச் கம்மியான அரேபியன் ஹார்ஸ் அழகி அனுஷ்கா . இவருக்கு அதிக வாய்ப்பில்லை . ஹீரோவைக்கண்டதும் காதல் கொள்வதும் , உன்னைப்போல் ஒரு ஆளை இதுவரை நான் பார்த்ததில்லை எனும்போதும் சிரிப்பு தான் வருது.

வில்லனாக அருண் விஜய்க்கு நல்ல வாய்ப்பு . பல காட்சிகளில் டாமினேட் செய்யும் வாய்ப்பு . சரியாகப்பயன் படுத்தி இக்ருக்கார் ..

குழந்தையாக வரும் சுட்டி கொள்ளை அழகு . விவேக் பெரிதாக சிலாகிக்கும்படி இல்லாவிட்டாலும் ஓக்கே ரகம்

Review By : C.P.Senthilkumar ரேட்டிங் : 3/5


மேலும் »

Ampala Movie Review

எழுதியவர்-   Funway
14:55:33 2015-01-15 சினிமா விமர்சனங்கள்

 ஆம்பள சினிமா விமர்சனம்


தயாரிப்பு: விஷால் ஃபிலிம் ஃபேக்டரி
இயக்கம்: சுந்தர்.சி
நடிப்பு: விஷால், ஹன்சிகா, சந்தானம், மாதவி லதா, மதூரிமா, பிரபு, ரம்யா கிருஷ்ணன், ஐஸ்வர்யா, கிரண், மனோபாலா
இசை: ‘ஹிப் ஹாப் தமிழா’ ஆதி
ஒளிப்பதிவு: கோபி அமர்நாத்

தனது படை பட்டாளுங்களுடன் பொங்கல் ரேஸில் சுந்தர்.சியும் குதித்திருக்கிறார். அவரின் வழக்கமான மேஜிக் ‘ஆம்பள’ படத்திலும் நிகழ்ந்திருக்கிறதா?

கதைக்களம்

இதுவரை தமிழ்சினிமாவில் சொல்லப்படாத ‘பிரிந்த குடும்பம் ஹீரோவால் ஒன்று சேர்வது’ என்ற கதையைத்தான் இந்த ‘ஆம்பள’ படத்தில் கையிலெடுத்திருக்கிறார் சுந்தர்.சி.

விஷால், வைபவ், சதீஷ் ஆகிய மூவரும் பிரபுவின் பிள்ளைகள். அதேபோல் பிரபுவின் தங்கைகளான ரம்யா கிருஷ்ணன், கிரண், ஐஸ்வர்யா ஆகிய மூவருக்கும் முறையே ஹன்சிகா, மாதவி லதா, மதூரிமா ஆகியோர் மகள்கள். எதிர்பாராத சூழ்நிலை ஒன்றில் பிரபுவின் அப்பாவான விஜயகுமார் மரணமடைய, அது கொலைப்பழியாக மாறி பிரபுவை வீட்டை விட்டுத் துரத்துகிறது. ஏற்கெனவே தன் மகன்களான விஷாலையும், வைபவையும் பிரிந்த துன்பத்தோடு, இப்போது தங்கை குடும்பத்தையும் பிரிந்து வாடுகிறார் பிரபு.

பிரிந்திருக்கும் அப்பா பிரபுவுடனும், தம்பி சதீஷுடனும் ஒரு திடீர் சந்தர்ப்பத்தில் கைகோர்க்கிறார்கள் விஷாலும், வைபவும். தன் தங்கை குடும்பத்துடன் மீண்டும் தன் மகன்களைச் சேர்க்க வேண்டும் என்பதற்காக, அவர்கள் மூவரையும் மூன்று அக்கா மகள்ளை திருட்டுத்தனமாக கல்யாணம் செய்துகொள்ளச் சொல்லி ‘சூப்பர்’ ஐடியா ஒன்றைக் கொடுக்கிறார் அப்பா பிரபு. பிறகு என்ன நடந்திருக்கும் என்பது காலம் காலமாக சுந்தர்.சி. படம் பார்க்கும் ரசிகர்களுக்கு விளக்கமாக சொல்லத் தேவையில்லை!

படம் பற்றிய அலசல்

தனது வழக்கமான பாணியைத்தான் இப்படத்திலும் கையாண்டு கலகலப்பூட்டிருக்கிறார் இயக்குனர் சுந்தர்.சி. ஹியூமரோடு சேர்த்து கிளாமரையும் கொஞ்சம் தூவிவிடுவதுதான் அவரின் இன்னொரு டெக்னிக். இப்படத்தில் அதை கொஞ்சம் அதிகமாக தூவிவிட்டார்.

கூட்டத்திற்கு ஆள் அனுப்பும் கம்பெனி வைத்து நடத்தும் விஷாலுக்கும், ஹன்சிகாவுக்கும் உண்டாகும் காதலோடு படத்தை ஆரம்பிக்கிறார்கள். ஹன்சிகாவும், விஷாலும் சந்திக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பமும் சந்தானத்திற்கு ‘ஆப்பு’ வைக்க, எஸ்.ஐ.யாக இருக்கும் அவர் கொஞ்சம் கொஞ்சமாக வேலையைவிட்டே தூக்கப்படுகிறார். கிட்டத்தட்ட முதல் 40 நிமிடங்கள் நடக்கும் இந்த காட்சிகள் ரசிகர்களை இடைவிடாமல் சிரிக்க வைத்திருக்கிறது. அதன் பிறகு சந்தானம் காணாமல் போனாலும் திரும்பவும் க்ளைமேக்ஸில் வந்து கலகலப்பூட்டி படத்திற்கு சுபம் போடுகிறார்கள்.

முதல்பாதியைவிட இரண்டாம் பாதியின் ஆரம்பக் காட்சிகள் கொஞ்சம் மெதுவாக நகர்வது, இரட்டை அர்த்த வசனங்கள், நெளிய வைக்கும் காட்சிகள், தவிர்க்க வேண்டிய இரண்டு பாடல்கள் ஆகியவை ‘ஆம்பள’யின் பலவீனங்கள். இருந்தாலும், ‘ஹிப் ஹாப் தமிழா’ ஆதியின் இசையில் ‘பழகிக்கலாம்....’, ‘இன்பம் பொங்கும் வெண்நிலா ரீமிக்ஸ்’ இரண்டும் கலர்ஃபுல் கலாட்டா. ஒளிப்பதிவும் கண்களுக்கு குளிர்ச்சி தருகிறது!

நடிகர்களின் பங்களிப்பு

நடிப்பதற்கெல்லம் இப்படத்தில் யாருக்கும் பெரிய வேலையில்லை. இருந்தாலும் ஹீரோ விஷால் ரொமான்ஸ், ஃபைட் ஆகிய இரண்டு ஏரியாக்களிலும் தனக்கு கொடுக்கப்பட்ட வேலையை கச்சிதமாக முடித்திருக்கிறார். ‘அரண்மனை’யில் பேயாக அலையவிட்ட ஹன்சிகாவை ‘ஆம்பள’யில் கிளாமர் குயினாக காட்டி சமாதானப்படுத்தியிருக்கிறார். படத்தின் இன்னொரு ஹீரோ நிச்சயமாக சந்தானம்தான். படத்தின் முதல் 40 நிமிடங்களையும், கடைசி 30 நிமிடங்களையும் ஒற்றை ஆளாக நின்று நகர்த்திக் கொண்டு செல்வதில் முக்கிய பங்காற்றியிருக்கிறார். மற்றபடி வைபவ், சதீஷ், பிரபு, ரம்யா கிருஷ்ணன், கிரண், ஐஸ்வர்யா, வில்லன் பிரதீப் ராவத் ஆகியோர் அவர்கள் சம்பந்தப்பட் காட்சிகளை நகர்த்துவதற்குத் தேவையான அளவு கை கொடுத்திருக்கிறார்கள். தெலுங்கு வரவுகளான மதூரிமா, மாதவி லதாவுக்கு சொல்லிக்கொள்ளும் அளவுக்கு காட்சிகள் கொடுக்கப்படவில்லை.

பலம்

1. பொழுதுபோக்கிற்கு கியாரண்டி கொடுக்கும் திரைக்கதை
2. சந்தானம் சம்பந்தப்பட்ட காமெடிக் காட்சிகள்
3. பரபர விஷால் + கிளுகிளு ஹன்சிகா

பலவீனம்

1. அரதப்பழசான கதை
2. சுந்தர்.சியின் படமென்றாலே குடும்பத்துடன் வந்து ரசிப்பார்கள். அப்படியிருந்தும் இப்படத்தில் சில இரட்டை அர்த்த வனசங்களும், ‘டூமச்’ காட்சிகளும் இடம்பெற்றிருப்பது ‘நெருடலாக’ இருக்கிறது.
3. படத்தின் ஓட்டத்திற்கு தடைபோடும் இரண்டு பாடல்களும், இரண்டாம்பாதியின் ஆரம்பக் காட்சிகளும்

மொத்தத்தில்....
‘அவர் அப்படித்தான்’ என சுந்தர்.சியின் இயக்கத்தைப் பற்றி நன்கு தெரிந்த ரசிகர்களுக்கு இந்த ‘ஆம்பள’ படமும் எந்த ஏமாற்றத்தையும் தராது. தாராளாகச் சென்று, ஜாலியாக ரசித்துவிட்டு வரலாம்.

ஒரு வரி பஞ்ச்: நோ லாஜிக் ஒன்லி டைம் பாஸ்!

ரேட்டிங்: 4.5/10

Review By : top10cinema

மேலும் »

I (Ai) Tamil Movie Review

எழுதியவர்-   Funway
13:26:17 2015-01-14 சினிமா விமர்சனங்கள்

ஐ சினிமா விமர்சனம்

Review By : C.P.Senthilkumar ரேட்டிங் : 3.5/5
தமிழ் சினிமாவில் நடிப்புக்காகவே தன்னை அர்ப்பணித்துக்கொண்ட ஜீவ கலைஞன் , கலை வித்தகன்,உலகநாயகன் கமல் ஹாசனின் அறிவிக்கப்படாத கலை உலக வாரிசு விக்ரம் ,தன் புருவத்தைக்கூட மாற்றிக்கொள்ளாத நாயகர்களுக்கு மத்தியில் தன் உருவத்தையே மாற்றிக்கொள்வதில் கடின உழைப்பையும், ஆர்வத்தையும் காட்டி வரும் நாயகன் ,அவரது வாழ்நாள் சாதனைப்படம் ஐ என்பதில் மாற்றுக்கருத்தே இல்லை.

இந்திய சினிமாவை பிரம்மாண்டத்தின் அடையாளமாய் உலகத்துக்கு உணர்த்திய விஷூவல் ஸ்பெஷலிஸ்ட் ஷங்கர் இந்தியாவின் நெ 1 இயக்குநர் 190 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட முதல் தமிழ்த்திரைப்படம் என்னும் பெருமையைப்பெறுகிறார்.ஆஸ்கார் வென்றாலும் அடக்கமாய் இருக்கும் ஏ ஆர் ரஹ்மான் -ன் சர்வதேச இசை , ஒளிப்பதிவின் உச்சம் பிசி ஸ்ரீராம் இந்த மெகா கூட்டணியில் வந்திருக்கும் ஐ படம் எப்படி இருக்குன்னு பார்ப்போம்.

ஹீரோ ஒரு கிராமவாசி .பாடி பில்டர்.அவர் எதேச்சையா ஹீரோயினைப்பார்க்கறார்.பார்த்த்துமே லவ்வு.பாப்பா ஒரு மாடலிங் கேர்ள்.அது ஹீரோவை சாதாப்பார்வைதான் பார்க்குது. ஆனாப்பாருங்க ஆம்பளைங்க கண்ணுக்கு பொண்ணுங்க சும்மா பார்த்தாலே நம்மை லவ் பண்ற மாதிரிதான் தோணும். எல்லாம் ஒரு எதிர்பார்ப்புதான்.ஈர்ப்புதான்

மனசுக்குப்பிடிச்ச பொண்ணு எந்ததுறைல இருக்கோ அதே துறைல இருந்தா கரெக்ட் பண்றது ஈசி எனும் லவ் ஃபார்முலாப்படி ஹீரோ மாடலிங்க் துறைல கால் வைக்கறார்.அப்போதான் ஹீரோயின் மேல கை வைக்க முடியும் ?

இங்கேதான் வில்லன் எண்ட்ரி. அவரும் ஒரு மாடல் தான்.இந்தப்படத்தில் ஹீரோ , ஹீரோயின் , வில்லன் எல்லாரும் மாடல்.நடிப்புக்காக எப்படி எல்லாம் டெடிகேட்டா இருக்கனும், அர்ப்பணிப்பா இருக்கனும் என்பதற்கான ரோல் மாடல் விக்ரம் என்பதால் மாடலிங்க் கேரக்டர் கொடுத்துட்டாங்க போல .

வில்லன் ஹீரோயின் கூட மாடலிங்கா ஜோடி போட்டு நடிக்கையில் அவரை கரெக்ட் பண்ணப்பார்க்கறார் , முடியலை. வில்லனுக்குப்போட்டியா ஹீரோவை தன் ஜோடியாக்கி மாடலிங்க் ஒர்க்கை தொடர்கிறார் ஹீரோயின்.

ஹீரோவுக்கு நடிப்பு வர்லை. கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகனும்கறதுக்காக லவ் பண்றதா பொய் சொல்லி கெமிஸ்ட்ரி உருவாக்கறார் ஹீரோயின் , பின் பச்சாதாபப்பட்டு நிஜமாவே லவ்வறார்

வில்லன் பொறாமையால ஒரு வைரஸ் ஊசி போட்டு ஹீரோவை குரூபி ஆக்குறார்.

இப்போதான் ஒரு சிக்கல்.நம்ம வாழ்க்கை ஹைவேஸ் ரோடு மாதிரி போய்க்கிட்டு இருக்கும்போது தான் இயற்கையோ , கடவுளோ ஒரு ஸ்பீடு பிரேக்கரைப்போட்டு வைப்பாரு.

பக்க விளைவின் காரணமா ஹீரோ உடம்பு ஹல்க் மனிதன் போல் அகோரம ஆகிடுது. நாயகி வெறுக்கறா.

இழந்து விட்ட காதலை ஹீரோ மீண்டும் எப்படி பெறுகிறார்? வில்லன் ஹீரோயின் மேல என்ன ப்கை? இவங்க 3 பேர் வாழ்வும் என்ன ஆச்சு? என்பதே மிச்ச மீதிக்கதை

ஹீரோவா விக்ரம் . கற்பனைகூட செய்யமுடியாத நடிப்பு. ஜிம் பாடிபில்டராக , கூனனாக , மாடலிங் மாடர்ன் மேனாக மிருகமாக 4 கெட்டப்களில் அவர் நம்மை மெர்சல் ஆக்குகிறார்

இந்திய சினிமாவில் இது போல் யாரும் செய்ததில்லை எனும் அள்வு அளவில்லா உழைப்பு ,கங்க்ராட்ஸ் விக்ரம், டாக்டர்
முன் தன் உருவம்மாறியது குறித்து வருத்தப்படும் காட்சியில் கலக்கலான நடிப்பு

ஹீரோயினாக எமிஜாக்சன். சுமாரான நடிப்புத்தான். எடுப்பான கிளாமர் இருப்பதால் புக் பண்ணிட்டாங்க போல. கிளாமர் காட்சியில் கலக்கறார்

சுரேஷ் கோபி கேரளா மார்க்கெட்க்காக சும்மா ஊறுகாய்

சந்தானம் , பவர் ஸ்டார் காமெடி ஓக்கே ரகம். அதிக காட்சிகள் இல்லை.

பின் பாதியில் ஒரு ட்விஸ்ட் இருக்குமனதைக் கவர்ந்த வசனங்கள்

1 சந்தானம் டூ பவர்ஸ்டார் = உன் படம் பார்க்க வர்றவங்க எல்லாம் உன்னை ரசிக்க வர்றாங்க னு நினைச்ட்டு இருக்கியா? கலாய்க்க வர்றானுங்க

2 சந்தானம் =,உன்னால ஒரு கத்திரிக்கா கூட தூக்க முடியாது.நீ கேத்ரினா கைபை தூக்கப்போறியா?

3 தோத்துடுவோம்கற பயம் இருந்தா ஜெயிக்க முடியாது # சுபா

4 என்னைக்கொல்லப்போறியா? அதுக்கும் மேல # சுபா

5 சந்தானம் = இது என்னடா மண்டைல 2 கோடு?

பவர் ஸ்டார் = எந்திரன் பார்ட் 2

6 சந்தானம் = என்னது? இவன் பாத்திரமாவே மாறிடுவானா? இவனே பாத்திரம் மாதிரி தான் இருக்கான்

7 நான் ஆபாச காட்சில நடிக்க மாட்டேன்

சந்தானம் = உன்னை அடுப்புலயா காலை விடச்சொல்றாங்க? இடுப்புல தானே கால் போடச்சொல்றாங்க?

8 பவர் ஸ்டார் = என்னை எவ்வளவுக்கு எவ்வளவு கேவலப்படுத்தறீங்களோ அவ்வளவுக்கு அவ்வளவு வளர்ந்துட்டே போவேன்

9 பவர் = கடவுள் படைச்சதுலயே உருப்படியான ரெண்டே விசயம்.1 நான் .இன்னொண்ணும் நான் தான்

10  சண்டைக்குப்போறவன் மாதிரி டூயட் சீன்ல வர்றே?

ஐ வான்ட் ஆட்டிட்யூட் மேடம்.அவரு என்னமோ ஆட்டிவிடச்சொல்றாரு?,#,சுபா

11 சந்தானம் = கமல் ரசிகர்கள் ரத்தம் குடுக்கறாங்கோ.விஜய் ரசிகர்கள் அரிசி கொடுக்கறாங்க.நீ மேடமோட ரசிகன்.முடி கூடத்தரமாட்டியா?

12 இந்த உலகமே இப்டித்தான்.உண்மையா லவ் பண்றவனை நம்பாது # சுபா

13 நேத்து நீ நெம்பர் ஒன்னா இருந்தே. இன்னைக்கு அவன் நெம்பர் ஒன்னா இருக்கான். காலம் மாறும்போது எல்லாம் மாறும்# உள் குத்து வசனம்

 

படம் பார்க்கும்போது அப்டேட்டட் ட்வீட்ஸ்

1 எமிஜாக்சனின் ஆர்ப்பாட்டமான அழகில் ,டி ஆர் பாணியில் செட்டிங்ஸ்.போட்டு ஷங்கரின் பிரம்மாண்டமான ஐ ஓப்பனிங் சாங்

2 உருக்குலைந்த தோற்றத்தில் அர்ப்பணிப்பு நாயகன் விக்ரம் நம்ப முடியாத இளைப்பில்

3 பாடிபில்டராக அபாரமாக செஸ்ட் ,சோல்டர் ,பை செப்ஸ் ஏற்றியப்வர் தொடை ,கெண்டைக்கால்களை உருவேற்றத்தவறி விட்டார்

4 அந்நியன் பைட்டை தூக்கி சாப்பிடும் ஜிம் பைட் .50 பாடி பில்டர்சுடன் விக்ரம் மோதும் கலக்கல் பைட்

5 பாடிபில்டர்ஸ் எப்போதும் க்ளோஸ் ஹேர்கட் தான் பண்ணிக்குவாங்க.ஹிப்பித்தலை ஏனோ?

6 டூ பீஸ் இல் காமி ஜாக்சன்

7 மெர்சல் ஆகிட்டேன் லைனை மெரசழ் ஆகிட்டேன் னு உச்சரிப்பு

8 பைக்கில் போகும் ஹீரோ.பைக் அப்டியே ஹீரோயினாக உருமாறும் கிராபிக்ஸ் கலக்கல்

9 ஸ்பீசஸ் 2 வில் ஹீரோயின் குளத்தில் இருந்து எழுந்து வரும் காட்சி ரீ மிக்ஸ்டு இன் ஐ

10 ஹீரோ பேரு லிங்கேசன்.இதுல ஏதாவது குறியீடு இருக்குமோ ?

11 திருநங்கைகளை நக்கல் அடிக்கும் காட்சி.யூ டூ ஷங்கர்?

12 விக்ரம் மாடர்ன் மாடலிங்காக தோன்றும் காட்சி கலக்கல்

13 சீனா வில் எடுக்கப்பட்ட காட்சிகள் கலக்கல்.ஒளிப்பதிவு கண்ணாடி

14 திருநங்கை - ஹீரோ காதல் எபிசோடு முகம் சுளிக்க வைக்கும் காட்சிகள் .பெண்கள் ஆடியன்ஸ்.வேணுமா.? வேணாமா? ஷங்கர் சார்?

15 ஏ ஆர் ரஹ்மான் லிங்கா போலவே ஐ யிலும் ஷங்கரை ஏமாற்றி விட்டார்.பாடல்கள் பிரமாதமாக சோபிக்கவில்லை.ஒளிப்பதிவும் லொக்கேசனும் கலக்கல்

16 சைனா வீரர்களுடன் விக்ரம் போடும் பைட் கலக்கல் ரகம்.ஸ்டன்ட் மாஸ்டர் ராக்கிங்

17 அய்யய்யோ.அப்பாவி விக்ரமை துரத்தி ஹீரோயின் லிப் கிஸ் குடுக்குது

18 விக்ரமின் மிரட்டலான ஒப்பனையில் ,அபாரமான நடிப்பில் போர் அடிக்காமல் மெர்சல் ஆக்கும் முதல் 100 நிமிடங்கள் முடிந்தது # இடைவேளை

19 விக்ரமின் நடிப்பை மட்டுமே நம்பி களம் இறங்கி இருக்கும் ஷங்கருக்கு வழக்கமாகக்கிடைக்கும் பிரம்மாண்டமான வெற்றி கிடைப்பது கடினம்

இயக்குநர் பாராட்டுப்பெறும் இடங்கள்

1 விக்ரம் கூனன் கேரக்டரில் அவரது பாடி லேங்குவேஜ் , மேக்கப் எல்லாம் பிரமாதம் .இதுவரை தமிழ் சினிமா வில் இதுபோல் யாரும் செய்ததில்லை.

2 சீனாவி ல் ஷூட்டிங் ந.டக்கு ம் காட்சிகள் கண்ணூக்குக்குளுமை. அபாரமான லொக்கேசன் செலக்சன் , ஒளிப்பதிவு பிரமாதம்

3 சந்தானம் , பவர் ஸ்டார் காட்சிகள் காமெடி பட்டாசு.இன்னும் அதிக காட்சிகள் வெச்சிருக்கலாம் . ஆனால் படத்தின் நீளம் ஆல்ரெடி அதிக,ம்

4 பின் பாதியில் வரும் தேனீக்கள் ஏவி விட்டு வில்லனைப்பழி வாங்கும் காட்சி மிரட்டல் ரகம்

இயக்குநரிடம் சில கேள்விகள்

1 மாடலிங்காக வரும் ஹீரோயின் சக மாடலிங்க் ஆளை பிடிக்காமல் ஆல்ட்டர்நேட்டிவ்வாக ஒரு மாடல் கூட ந்டிக்கனும். ஓக்கே ஊர் உலகத்துல மாடலிங்க் ஆணே இல்லையா? அவர் ஏன் மெனக்கெட்டு ஒரு பாடி பிலடரை பிடிச்சு மாடலிங்கா ஆக்கி சிரமப்படனும் ஆல்ரெடி மாடலிங்கா ஃபார்ம் ஆன ஆளை ஏன் பிடிக்கலை ?

2 ஹீரோயின் வில்லனையும் லவ் பண்ணலை . ஹீரோவையும் லவ் பண்ணலை . தனிமை , இளமை , நெருங்கிப்பழகும் சந்தர்ப்பம் அமைந்தும் அவர் பயங்கரமான பதிவிரதையா இருப்பது எப்படி ? அதுவும் 4 இஞ்ச் சார்ட்ஸ் , 40 செமீ ஜாக்கெட் மட்டுமே எப்போதும் உடுத்தும் ஃபிகர்>?

3 வில்லன் கிட்டே எந்த கெட்ட பழக்கமும் இல்லை . ஆள் படு ஸ்மார்ட்டா இருக்கார், அவர் லவ் பிரப்போஸ் பண்றப்போ ஹீரோயின் ஏன் மறுக்கனும் ? அவரை அருவெறுப்பாப்பார்க்க பாயிண்ட்டே இல்லையே?

4 ஹீரோயின்ன் பொய்யா லவ் பண்றார் என்பதை ஹீரோவால் ஏன் கண்டு பிடிக்க முடியலை ? ஒரு பொண்ணு நம்மை லவ் பண்ணிட்டு ;லவ் பண்ணாத மாதிரி நடிச்சா கண்டு பிடிக்க முடியாது , ஆனா லவ்வே பண்ணாம லவ் பண்ற மாதிரி நடிச்சா ஈசியா கண்டு பிடிச்சிடலாமே?

5 ஹீரோ மிஸ்டர் தமிழ் நாடு ஆவது எப்படி ? அவரை விட பிரமாதமான பாடி ஃபிலடர்ஸ் ஏகப்பட்ட பேரை எதுக்குக்காட்டனும்?பின் ஹீரோ ஜெயிச்சதா ஏன் சப்பைக்கட்டு கட்டனும் ?

6 சன்னி லியோன் தங்கச்சி மாதிரி முன் பாதி பூரா செம கிளாமரா வரும் நாயகி பின் பாதியில் பூவேலி கவுசல்யா மாதிரி கண்ணிய சுடி க்கு மாறியது ஏனோ?

7 ஹீரோயினுக்கு சக்களத்தி மாதிரி வரும் கேரக்டரில் ஒரு பெண்ணே போதுமே? எதுக்கு திருநங்கை? அவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் உவ்வேக் ரகம்,

8 கொக்கோ கொலா மாதிரி ஒரு பிராண்ட் அயிட்டம் ஒரு மாடலிங் மாறுனா சேல்சில் டவுன் ஆகுமா?

9 பொய்யா லவ்வினதா சொன்னதால குற்ற உணர்ச்சியில் ஹீரோயின் ஹீரோவை லவ் பண்ணினது எடுபடலை. எம் எல் ஏ சீட் கேட்ட ஆளிடம் என் இதயத்தில் இடம் இருக்குன்னு கலைஞர் ஏமாற்றுவது போல்

10 தலைமுடி கொட்டி உடம்பே உருக்குலைந்த கெட்டப்பில் இருக்கும் ஆள் பல் வரிசை மட்டும் பச்சரிசி போல் வரிசையாக இருப்பது எப்படி?

11 ஷங்கர் படங்களில் அமரர் சுஜாதா வின் வசனம் கலக்கலான பிளஸ் ஆக இருக்கும், ஆனா ரைட்டர் சுபா சமாளிச்சிருக்கார்.


நன்றி : சி பி செந்தில் குமார்  

மேலும் »

Pakdam Pakdai Movie Review

எழுதியவர்-   Funway
21:38:37 2015-01-02 சினிமா விமர்சனங்கள்

பகடை பகடை

உருவ ஒற்றுமையில் ஒன்றாக இருக்கும் இருவர் ஆடும் ஆட்டம்தான் "பகடை பகடை'. ஆனால், அதை சரியாக உருட்டாமல் ஆடியதால் போங்காட்டம் ஆகிவிட்டது. நாயகன் திலீப் குமாருக்கு வெளிநாட்டில் இருக்கும் பணக்காரப் பெண்ணாகப் பார்த்து செட்டிலாகிவிடவேண்டும் என்பதுதான் முதலும் கடைசியுமான ஒரே கனவு.
இதற்காக எந்த வேலைக்கும் போகாமல் பெண் தேடுவதையே வேலையாக வைத்திருக்கிறார். இதனால் வீட்டில் மதிப்பும் மரியாதையும் போய்விடுகிறது. இந்தநிலையில் திவ்யா சிங் ரூபத்தில் அடிக்கிறது அதிர்ஷ்டம். தீலிப்பை திருமணம் செய்துகொள்ள விரும்புவதாகவும், கூடிய விரைவில் இந்தியா வந்து அவரைச் சந்திப்பதாகவும் சொல்கிறார். திவ்யா சிங் உண்மையில் திலீப்பை காதலிப்பவர் அல்ல. காதலிப்பதுபோல நடிக்கவேண்டும் என்று பணிக்கப்பட்டவர்.
இவருடைய முதலாளியாக இன்னொரு தீலிப் குமார் இருக்கிறார். அமெரிக்காவில் உள்ள ஐ.டி.நிறுவனங்களுக்கு மிகப்பெரிய நஷ்டம் ஏற்படுகிறது. அதில் இவர்களுடைய ஐ.டி.கம்பெனியும் சிக்கிக்கொள்கிறது. இவர்களுக்குக் கடன் கொடுத்த மாஃபியா கும்பல், பணம் தரவில்லை என்றால் கொன்று விடுவோம் என்று மிரட்டுகிறது. அப்போதுதான் கிராமத்தில் இருக்கும் நாயகன் திலீப்குமார், தன்னைப்போன்ற உருவத்துடன் இருக்கும் விஷயம் வில்லன் திலீப்குமாருக்கு தெரிய வருகிறது.
அவரைக் கொன்று இன்சூரன்ஸ் பணத்தை அடைய நினைக்கிறான். இறுதியில், நாயகனைக் கொன்றுவிட்டு திவ்யாவும், வில்லன் திலீப்குமாரும் இன்ஷூரன்ஸ் பணத்தைப் பெற்றுத் தப்பித்தார்களா...? இல்லையா...? என்பது மீதிக்கதை.
திலீப்குமார் அறிமுக நாயகன் போல் இருந்தாலும், நடிப்பில் அழகாக ஸ்கோர் செய்கிறார். நாயகியாக திவ்யா சிங். வெளிநாட்டில் வேலை பார்க்கும் பெண் வேடத்திற்கு கச்சிதமாகப் பொருந்தியிருக்கிறார். இளவரசு, கோவை சரளா,மயில்சாமி ஆகியோர் தங்கள் கதாபாத்திரத்திற்கு உண்டான நடிப்பை அழகாக வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.
ராம்ஜி, ஜான்பீட்டர் ஆகியோரது இசையில் பாடல்கள் கேட்கும்படி உள்ளது. முரளியின் ஒளிப்பதிவு படத்திற்குப் பிளஸ். கலகலப்பான படத்தைக் கொடுக்க நினைத்த இயக்குநர் சசிசங்கர், அதில் பாதியைத்தான் சாதித்துள்ளார். பகடை பகடை - தாயமும் இல்லை! ஆதாயமும் இல்லை!

நன்றி - சினிமா எக்ஸ்பிரஸ்

மேலும் »

Vellaikara Durai Movie Review

எழுதியவர்-   Funway
21:52:36 2014-12-25 சினிமா விமர்சனங்கள்

வெள்ளக்காரத்துரை  சினிமா விமர்சனம்

சூரி வீட்டோடு மாப்பிள்ளையாக இருப்பதால் அவருடைய மாமா வீட்டில் அவருக்கு மரியாதையே இல்லை. ஆகையால், தனது சொந்தக் காலில் நிற்க முடிவெடுத்து, வட்டிக்கு பணம் கொடுக்கும் ஜான் விஜய்யிடம் ரூ.15 லட்சம் வட்டிக்கு பணம் வாங்கி, புரோக்கர் வையாபுரி மூலமாக ஒரு நிலத்தை வாங்கி அதை பிளாட் போட்டு விற்பனை செய்ய திட்டம் தீட்டுகிறார். இவருடைய இந்த தொழிலுக்கு சூரியின் நண்பரான விக்ரம் பிரபுவும் உதவியாக இருக்கிறார்.

ஒருநாள் இவர்களுடைய நிலத்தை வாங்க பெரிய தொழிலதிபரான மதன்பாப் வருகிறார். அவரிடம், பேச்சுவார்த்தை எல்லாம் முடித்து, அக்ரிமெண்ட் போடும் சமயத்தில், அந்த நிலத்திற்குள் சிலர் பிணத்தை கொண்டுவந்து அடக்கம் செய்கின்றனர்.

அப்போதுதான் சூரிக்கும், விக்ரம் பிரபுவுக்கும் தெரிகிறது அது ஒரு சுடுகாடு என்று. இதனால், மதன்பாப் அந்த நிலத்தை வாங்காமல் திரும்பி சென்றுவிடுகிறார். புரோக்கர் வையாபுரியால் தாங்கள் ஏமாற்றப்பட்டதை அறிந்து சோகமடையும் விக்ரம் பிரபுவும் சூரியும் நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்துகிறார்கள்.

போதை உச்சிக்கு சென்று மயங்கி கிடக்கையில், இவர்களை ஜான் விஜய்யின் ஆட்கள் தூக்கிக் கொண்டு அவர்கள் இடத்துக்கு செல்கிறார்கள். ஜான் விஜய் தன்னிடம் வட்டிக்கு வாங்கிவிட்டு, பணத்தை திருப்பி செலுத்த முடியாதவர்களை அடிமையாக நடத்தி வருகிறார். அதேபோல், இவர்களையும் அடிமைபோல் நடித்த முடிவெடுக்கிறார்.

இந்நிலையில், ஜான் விஜய்யை கொல்ல ஒரு மர்மக் கும்பல் வருகிறது. அவர்களிடமிருந்து ஜான் விஜய்யை விக்ரம் பிரபு காப்பாற்றுகிறார். இதனால், விக்ரம் பிரபு மீது ஜான் விஜய்யுக்கு நல்ல மரியாதை வருகிறது. இதையடுத்து விக்ரம் பிரபுவுக்கு மட்டும் அடிமைகளை மேற்பார்வையிடும் பணியை கொடுக்கிறார் ஜான் விஜய்.

ஜான் விஜய் இடத்தில், நண்பர்களுடன் கலாட்டா செய்து சுற்றி வரும் விக்ரம் பிரபு ஒருநாள் அங்கு நாயகி ஸ்ரீதிவ்யாவை பார்க்கிறார். அவளைப் பார்த்ததும் அவள்மீது காதலில் விழுந்து விடுகிறார்.

சூரியிடம் அவள் யார் என்று விக்ரம் பிரபு கேட்க, சூரியும், அவள் ஜான் விஜய்யின் தங்கை என்று சொல்லி வைக்கிறார். ஸ்ரீதிவ்யாவும் தன்னுடன் ஜாலியாக பழகும் விக்ரம் பிரபுவை காதலிக்க தொடங்குகிறாள். இருவரும் காதலித்து வருகிறார்கள்.

இந்நிலையில், ஜான் விஜய்க்கு திருமண ஏற்பாடுகள் நடக்கிறது. சூரிக்கும் விக்ரம் பிரபுவுக்கும் திருமண ஏற்பாடுகளை கவனிக்கும் பொறுப்பு ஒப்படைக்கப்படுகிறது. இவர்களும் ரொம்ப ஜாலியாக இந்த ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

திருமணத்தன்று மணமகள் கோலத்தில் இருப்பவளை பார்த்து விக்ரம் பிரபு அதிர்ச்சியடைகிறார். அவள் யாரென்றால், இவர் காதலிக்கும் ஸ்ரீதிவ்யாதான் மணக்கோலத்தில் இருக்கிறாள்.

அவள் ஜான் விஜய்க்கு தங்கையும் இல்லை, முறைப்பெண்ணும் இல்லை. தன்னைப் போல் வட்டிக்கு பணம் வாங்கி பணத்தை திருப்பி செலுத்த முடியாத காரணத்தால் ஜான் விஜய்யிடம் அடிமையாக மாட்டிக் கொண்டவள் என்று அப்போதுதான் விக்ரம் பிரபுவுக்கு தெரிய வருகிறது.

இதையடுத்து, ஜான் விஜய்யிடம் இருந்து ஸ்ரீதிவ்யாவை விக்ரம் பிரபு காப்பாற்றினாரா? இல்லையா? என்பதே மீதிக்கதை.

விக்ரம் பிரபு முதன்முதலாக ஒரு முழுநீள காமெடி படத்தில் நடிக்கிறார். அவருக்கு காமெடி நன்றாகவே வருகிறது. நாயகியை துரத்தி துரத்தி காதலிக்கும் காட்சிகளில் ரசிக்க வைக்கிறார். நண்பர்களுடன் ஜாலியாக அரட்டையடிக்கும் காட்சிகளிலும் இவரது நடிப்பு பலே.

சூரி வழக்கம்போல் படத்தை தனது காமெடியால் தாங்கி நிற்கிறார். ஸ்ரீதிவ்யாவுக்கு கிராமத்து பெண் வேடம் என்றால் வெளுத்துக் கட்டுவார். அந்த வகையில் இந்த படத்திலும் தனது அழகான நடிப்பால் அனைவரையும் அசத்துகிறார். சிறு சிறு முகபாவணைகளால் நம்மை வெகுவாக கவர்கிறார். அதிரடி வில்லனாக வரும் ஜான் விஜய் வில்லத்தனத்தில் மிரட்டினாலும், காமெடியிலும் கலக்குகிறார்.

எழில் தன்னுடைய வழக்கமான காமெடி மசாலவையே இந்த படத்திலும் தூவியிருக்கிறார். இது அவருக்கு கச்சிதமாகவே வந்திருக்கிறது. கதைக்கு தகுந்தாற்போல் விறுவிறுப்பான திரைக்கதை அமைத்து அனைவரும் ரசிக்கும்படி செய்திருக்கிறார். குடும்பத்துடன் அனைவரும் ரசிக்கும்படியான படமாக கொடுத்த இவருக்கு நமது பாராட்டுக்கள்.

டி.இமான் இசையில் பாடல்கள் அனைத்தும் சூப்பர். ‘அம்மாடி உன் அழகு’ பாடல் அழகான மெலோடி. பின்னணி இசையிலும் கூடுதல் கவனம் செலுத்தியிருப்பது தெரிகிறது. சூரஜ் நல்லுசாமியின் ஒளிப்பதிவு, கிராமத்தின் பசுமையை அழகாக படமாக்கியிருக்கிறது. பாடல் காட்சிகளிலும் இவரது கேமரா பளிச்சிடுகிறது.

மொத்தத்தில் ‘வெள்ளக்காரத்துரை’ காமெடி துரை.

மேலும் »

'Meaghamann' (Meagamann) Movie Review

எழுதியவர்-   Funway
21:46:55 2014-12-25 சினிமா விமர்சனங்கள்

மீகாமன் சினிமா விமர்சனம்

1000 கிலோ கொக்கைன் எனும் போதை மருந்து வில்லன் கிட்டே இருக்கு.இன்னொரு வில்லன் குரூப் அதை அபேஸ் பண்ண நினைக்குது. அதைக்கைப்பற்ற போலீஸ் திட்டம் போடுது. ஹீரோ ஒரு போலீஸ் ஆஃபீசர். 2 க்ரூப் வில்லன்களையும் மோத விட்டு பிடிக்க பிளான், ஹீரோயின் வழக்கம் போல ஒரு லூஸ். எல்லா தமிழ்ப்படத்துலயும் அப்டித்தானே காட்டறாங்க?தன் வீட்டுக்கு வாடகைக்கு குடி வந்தவன் ஒரு தீவிரவாதியா? சாஃப்ட்வேர் எஞ்சினியரா?ன்னே தெரியாம பேக்கு மாதிரி இருக்கு .

வில்லன் க்ரூப் ல 2 போலீஸ் ஆஃபீசர்ங்க அவங்க ஆள் மாதிரியே சேர்ந்து வேலை செய்யறாங்க . குருதிப்புனல் ல வர்ற மாதிரி ஒருஆளை கண்டு பிடிச்சு 26 நிமிசம் சித்ரவதை பண்ணி வில்லன் இன்னொரு ஆள் யாரு?னு கேட்கறார்.இந்த 26 நிமிஷம் சித்ரவதை செஞ்சதுக்கு ஹன்சிகா கூட 4 ரொமான்ஸ் சீன் வெச்சிருக்கலாம். தமிழன் ஜாலியா கிறிஸ்மஸ் லீவைக்கொண்டாடி இருப்பான். ஸ்டண்ட் சீன் நல்லா வடிவமைச்சுட்டா போதும் , திரைக்கதை எப்படிப்போனா என்ன? -னு நினைச்சுட்டாங்க போல .

தன் குடும்பம் நல்லாருந்தா போதும் , தமிழன் எக்கேடு கெட்டா என்ன?னு சில அரசியல்வாதிக நினைக்கற மாதிரி இப்பவெல்லாம் ஆக்சன் படம் எடுக்கும் இயக்குநர்கள் ஸ்டண்ட் மாஸ்டரை வெச்சு ஆக்சன் சீக்வன்ஸ் நல்லா பண்ணிட்டா படம் தேறிடும்னு நினைக்கறாங்க .

ஹீரோவா ஆர்யா. லவ் , காமெடின்னு கலக்கிட்டு இருந்தவர் ஆக்சன் படத்தில் களம் இறங்கி இருக்கார். அவரது வாட்டசாட்டமான உடம்புக்கு ஆக்சன் பேக்கெஜ் செமயா ஃபிட் ஆகுது. இறுக்கமான முகத்துடன் படம் பூரா வர்றாரு. நல்ல நடிப்பு

ஹீரோயினா ஹன்சிகா. ஏனோதானோ நடிப்பு. சிம்பு காதல் தோல்வியால பாப்பா ரொம்ப மனசை விட்டுடுச்சு போல,

வில்லன் நடிப்பு சுமார் தான். ரகுவரன் பிரகாஷ்ராஜ் மாதிரி பல வித்தியாச ஆக்டிங்க் பார்த்த நமக்கு இது எல்லாம் ஜுஜுபி


Review By : C.P.Senthilkumar, ரேட்டிங் 3/5

மேலும் »

Kappal Movie Review

எழுதியவர்-   Funway
21:25:20 2014-12-25 சினிமா விமர்சனங்கள்

"கப்பல்" சினிமா விமர்சனம்

5 ஃபிரண்ட்ஸ். சின்ன வயசுல இருந்தே அவங்க தீர்மானம் என்னான்னா மேரேஜே பண்ணிக்கக்கூடாது. அப்டி பண்ணிக்கிட்டா அவங்க நட்பு பிரிஞ்சிடும்.அதனால பெண் வாசனையே படாம வளர்றாங்க .

பலரும் பல கேர்ள் ஃபிரண்ட்சோட இருக்கும்போது நாம மட்டும் இப்டி ஆகிட்டமேன்னு ஹீரோக்கு ஏக்கம். அதனால நம்ம ஹீரோ மீதி இருக்கும் 4 பேரை நைசா கழட்டி விட்டுட்டு எப்டியாவது ஒரு ஃபிகரை கரெக்ட் பண்ணிடலாம்னு கிளம்பறாரு.

ஹீரோயின் ஹை கிளாஸ் ஃபிகரு. தன் பாய் ஃபிரண்ட் கூட பார்ட்டிக்கு வந்த இடத்துல அவன் மட்டை ஆகிடறான்.அதனால ஆல்டர்நேட்டிவ்வா ஆக்டிங் பாய் ஃபிரண்ட்டா ஹீரோவை வெச்சுக்கறார். இதெல்லாம் ஹீரோயின் மப்பில் இருக்கும்போது. விடிஞ்சதும் ஹீரோவை யார்னே தெரியலைண்ட்டுடுது,

ஆனா ஹீரோ விடலையே? மாங்கு மாங்குன்னு துரத்தி கரெக்ட் பண்ணிடறாரு,

இவங்க 2 பேர் லவ் ஸ்டோரியும் இப்டி போய்க்கிட்டு இருக்கும்போது மீதி இருக்கும் 4 ஃபிரண்ட்ஸ் ல ஒருவருக்கு மேரேஜ் ஆகிடுது. அவங்களைப்பிரிக்க 3 பேரும் ஹீரோவைக்கூப்பிட வர்றாங்க . வந்த இடத்துல ஹீரோ ஆல்ரெடி ஒரு ஃபிகர்ட்ட மாட்டி இருக்கும் விஷயம் தெரியுது. பின் என்ன நடக்குது ? என்பதே காமெடி கலக்கல் திரைக்கதை .

ஹீரோவா வைபவ் . நிச்சயம் அவருக்கு இது ரொம்ப முக்கியமான படம், இயக்குநர் மேற்பார்வையில் அவரது பங்களிப்பு கன கச்சிதம். ஃபிகர் கிடைக்காமல் தவிக்கும்போது அக்மார்க் அப்பாவி நடிப்பு .ஹீரோயின் அவரிடம் மாட்டியதும் செய்யும் சேட்டைகள் கல கல , அங்கங்கே கிளு கிளு.

விடிவி கணேஷ் 2 ஃபிகரை அட்டர் டைமில் கரெக்ட் பண்ணும் ஆளாக ஹீரோவுக்கு கில்மா குருவாக வருகிறார் . செம காமெடி நடிப்பு, அவரது குரல் அவருக்கு பெரிய பிளஸ்

ஹீரோவை ரூமில் வெச்சுக்கிட்டே பக்கத்து ரூமில் இவர் ஃபிகருடன் லவ்வுவது செம காமெடி

கருணாகரன் இன்னொரு காமெடியன். இதில் நல்லா ஸ்கோர் பண்றார். ஹீரோ ஹீரோயினைப்பிடிக்க இவர் போடும் மொக்கை திட்டங்கள் செம .

காதலில் சொதப்புவது எப்படி? யில் பளார் வாங்குவாரே ( அர்ஜுன்) அவர் இதில் செய்யும் காமெடிகள் அதகளம்.

ஹீரோயினாக மும்பை பஞ்சு மிட்டாய் சோனம் பஜ்வா. பக்கா ஃபிகர் என சொலல முடியா விட்டாலும் ஓக்கே ரகம் . கிளாமர் காட்டுவதில் , நெருக்கம் காட்டுவதில் தாராஆஆஆஆஆள மனப்பான்மையுடன் நடக்கிறார், மடியில் உட்காருகிறார்,, படுக்கிறார். இதுக்கு மேல என்ன வேணும் ?

படத்தில் வில்லன் என யாரும் இல்லை . முழுக்க முழுக்க சிரிப்பு தான்.


Review By : C.P.Senthilkumar ரேட்டிங் : 3.5/5


மேலும் »

தேடல்

Copyrights © 2014. All rights reserved. Ablywall