பிரிவுகள்

அழகு குறிப்புகள்

ஆன்மீகம்

உடல் ஆரோக்கியம்

உறவுகள்

கதை

கவிதைகள்

சமையல் குறிப்புகள்

ஜோதிடம்

தத்துவம்

தாய்-குழந்தை

பொது அறிவு

வாழ்த்துக்கள்

வீடு பராமரிப்பு

Cinema

Tamil SMS

வடிகட்டி -  Cinema , திரைப்பட முன்னோட்டம்

Ai (I) - Tamil Movie Story ( ஐ படத்தின் கதை )

எழுதியவர்-   Funway
10:57:01 2014-09-17 திரைப்பட முன்னோட்டம்

 

விக்ரம் ஒரு சாதாரண விவசாயி. ஹீரோயின் எமி ஜாக்ச் ஒரு பெரிய மாடல் அழகி. எமி மீது விக்ரமிற்கு காதல் ஏற்படுகின்றது. ஆனால் விக்ரம், எமியை நெருங்க முடியவில்லை. ஒரு பெரிய தனியார் நிறுவனத்தின் விளம்பர தூதராக மாறுகின்றார். அதன் பின்னர் ஒலிம்பிக் போட்டியின் தூதராக மாறுகின்றார். எனவே விக்ரமால் எமியை நெருங்க முடியவில்லை. இதனால் தானும் ஒரு மாடலாக வேண்டும் என விக்ரம் முடிவு எடுக்கின்றார்.

தன்னுடைய கிராமத்தில் உடற்பயிற்சியை மேற்கொள்கின்றார். இந்நிலையின் வில்லன் உபேன் ஒரே நாளில் அழகிய தோற்றம் பெற வேண்டும் என்று ஒரு மருந்தை கண்டுபிடுக்கின்றார். அதை தன்னுடைய உடம்பிலேயே பரிசோதனையும் செய்து பார்க்கின்றார். ஆனால் மருந்து சரியாக வேலை செய்யாமல் அவரை விசித்திர தோற்றத்திற்கு மாற்றிவிட்டது. இருப்பினினும் மருந்தில் உள்ள குறைபாடுகளை கண்டறிந்து சரி செய்கின்றார். ஆனால் அதை பரிசோதனை செய்து பார்க்க ஆள் இல்லை. அந்த சமயத்தில் தான் விக்ரம் உபேனை சந்திக்கின்றார்.விக்ரம் உடம்பில் அந்த மருந்தை செலுத்திய உடன் அழகிய வாலிபராக மறுக்கின்றார். ஒரே நாளில் புகழின் உச்சத்திற்கு செல்கின்றார் விக்ரம்.

ஆனால் கொஞ்ச நாள் கழித்து மருந்தின் பக்க விளைவுகளால் மிகவும் மோசமான உருவத்திற்கு மாறுகின்றார். எமி ஜாக்சன் தான் தன்மேல் உள்ள பொறாமையால் தன்னை இந்த நிலைக்கு ஆளாக்கி விட்டதாக அவரை கடத்துகின்றார்.
ஆனால் இதற்கு காரணம் உபேன் தான் என கண்டுபிடிக்கின்றார். அந்த சமயம் உபேன் விக்ரமை விட கொடிய மிருகமாக மாறியுள்ளார். விக்ரமும் ஓநாய் போன்று ஒரு கொடிய விலங்காக மாறியுள்ளார்.
இருவரும் க்ளைமேக்ஸ் காட்சியில் கொடூர விலங்குகளாக மோதுகின்றனர்.

மேலும் »

ஹீரோவாக பெண்ணும், ஹீரோயினாக ஆணும் நடித்திருக்கும் படம்

எழுதியவர்-   Funway
10:21:06 2014-07-28 திரைப்பட முன்னோட்டம்

முழு சினிமாவுலேயும் ஒரு பொண்ணு ஹீரோவாகவும், ஒரு ஆண் ஹீரோயினாகவும் நடித்தால் எப்படியிருக்கும்..?

இப்படியொரு வித்தியாசமான முயற்சியை கையாண்டிருக்கிறார்கள் ‘லட்டுக்குள்ள பூந்தி பூந்தி’ படத்தில்..!

கேல்வின் சினிமாஸ் என்ற புதிய பட நிறுவனம் சார்பாக ஜீன்ஸ் மற்றும் பென்னி இருவரும் இணைந்து தயாரித்திருக்கும் படம் ‘லட்டுக்குள்ள பூந்தி பூந்தி’.

இந்த படத்தில் கதாநாயகனாக கிரண்மை என்ற பெண் நடித்திருக்கிறார். கதாநாயகியாக ஜீன்ஸ் என்ற ஆண் நடித்திருக்கிறார். மற்றும் ‘தலைவாசல்’ விஜய், ‘மகாநதி’ சங்கர், ஆர்த்தி, மதுமிதா இவர்களுடன் வில்லன் வேடத்தில் தேவதர்ஷினி நடித்திருக்கிறார்.

ஒளிப்பதிவு – பாஸ்கர்
இசை – செல்வா.ஜே.கே
நடனம் – மது.ஆர்
எடிட்டிங் – சந்திரகுமார்
தயாரிப்பு நிர்வாகம் – ராஜ்பால்
தயாரிப்பு மேற்பார்வை – பூபதி
தயாரிப்பு – ஜீன்ஸ், பென்னி
கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – ஜீன்ஸ்

படம் பற்றி இயக்குனர் ஜீன்ஸிடம் கேட்டோம்….

‘லட்டுக்குள்ள பூந்தி பூந்தி’ என்றால் லட்டுன்றது உலகம். அந்த உலகத்துல ஆணும், பெண்ணும் பூந்தி பூந்தி. நிறைய பூந்திகள் சேர்ந்ததுதான் லட்டு. அதுபோல் நிறைய ஆண்களும், பெண்களும் சேர்ந்துதான் உலகம். இந்த ஆண்கள் பெண்களாகவும், பெண்கள் ஆண்களாகவும் மாறினால் எப்படி இருக்கும் என்று ஒருவனுடைய கனவுதான் கதை!

அந்த கனவு உலகத்துல ஆண்கள் எல்லோரும் பெண்களா இருக்காங்க. பெண்கள் எல்லோரும் ஆண்களா இருக்காங்க. அதாவது எல்லா ஆண்களுக்கும் மீசை, தாடி எல்லாம் இருக்கும். ஆனா அவர்கள் பெண்கள் குணத்தோட மென்மையா, நளினமா இருப்பாங்க.

அதுபோல பெண்கள் எல்லோரும் ஆண்களோட குணத்தோட முரட்டுத்தனமா அடாவடியா இருப்பாங்க. இப்படி ஆண்களும், பெண்களும் உல்டாவா மாறி இருந்தா எப்படி இருக்கும்ங்கிறதை யாருமே எதிர்பார்க்காத ஒரு வித்தியாசமான முறையில் சொல்லிருக்கேன்.

நாம பார்த்த, ரசிச்ச, எல்லா விஷயங்களுமே அப்படியே மாறி நடந்தா எப்படி இருக்கும் என்று யோசிச்சு பாருங்க உங்களுக்கே சிரிப்பு வரும்.

இது ஒரு புதுமையான, மிகவும் வித்தியாசமான முயற்சி. உலக சினிமா வரலாற்றிலேயே மொத்தம் இரண்டரை மணி நேர படமும் ஆண்கள் எல்லோரும் பெண்களாகவும், பெண்கள் எல்லோரும் ஆண்களாகவும் நடிச்சு இதுவரைக்கும் எந்த படமும் வந்ததில்லை. ‘லட்டுக்குள்ள பூந்தி பூந்தி’தான் முதல் படம்.

இதன் படப்பிடிப்பு முழுக்க முழுக்க ராமோஜி பிலிம் சிட்டியில் படமாக்கப்பட்டுள்ளது. இது முழுக்க முழுக்க காமெடி படம். படத்தை பார்க்கிற ரசிகர்கள் எல்லோரும் வயிறு புண்ணாகும் அளவுக்கு விழுந்து விழுந்து சிரிப்பாங்க அதுக்கு நான் பொறுப்பு..” என்கிறார் இயக்குனர் ஜீன்ஸ்.

மேலும் »

தேடல்

Copyrights © 2014. All rights reserved. Ablywall