20:45:20
2017-01-04
பொங்கல் வாழ்த்து
மாட்டுப்பொங்கல் நல்வாழ்த்துக்கள் கவிதை
மறத்தமிழன் அனைவருக்கும்
என் இனிய தை மற்றும்
மாட்டுப்பொங்கல் நல்வாழ்த்துகள் ...
வீரம்விளைந்த மண்ணில்பிறந்தோம் - நம்
வீரியத்தை வீணாய்இழந்தோம் ...
சாதிசமயம் எனப்பிரிந்தே - நம்
பாதிவாழ்வை பாழாய்இழந்தோம் ...
வையத்து கவியெல்லாம் - என்
வள்ளுவனுக்கு ஈடாகுமோ ?...
அகத்தியன்தந்த அன்னைத்தமிழ் -இந்த
ஆங்கிலத்துக்கு கீழாகுமோ ? ...
அன்னைத்தமிழ் பொங்கலைக்கூட - நீ
ஆங்கிலத்தில் சொல்லலாமா ? ...
அமிர்தைவிட மேலான - நம்
அழகுத்தமிழை கொல்லலாமா ? ...
ஆங்கிலத்தில் வாழ்த்துச்சொன்னால் - அவனை
அங்கேயே அறைந்துவிடு ...
இன்பத்தமிழில் வாழ்த்துச்சொல்லி - அவன்
இறுமாப்பைக் களைந்துவிடு ...
மாட்டுப்பொங்கல் நல்வாழ்த்துகள் ..