பிரிவுகள்

அழகு குறிப்புகள்

உடல் ஆரோக்கியம்

உறவுகள்

கதை

கவிதைகள்

சமையல் குறிப்புகள்

ஜோதிடம்

தத்துவம்

தாய்-குழந்தை

பொது அறிவு

வாழ்த்துக்கள்

வீடு பராமரிப்பு

Cinema

Tamil SMS

வடிகட்டி -  அழகு குறிப்புகள் , உடல் அழகு

கண் பராமரிப்பு

எழுதியவர்-   Funway
20:01:54 2014-02-25 உடல் அழகு

*கண்களின் அழகிற்கு கீழ்க்கண்ட உணவுகள் முக்கியம். பால், பால் பொருட்கள், கீரை, முட்டை, மஞ்சள் மற்றும் ஆரஞ்சு நிறப் பழங்கள் மற்றும் காய்கள். போதிய அளவு தண்ணீர் குடிக்க வேண்டியதும் மிக முக்கியம். உடலுக்கு மட்டுமின்றி கண்களுக்கு பயிற்சி அவசியம்.  
*ஏனெனில் கண் தசைகளோடு, மூளையுடன் தொடர்புடைய ஏராளமான நரம்புகள் இணைக்கப்பட்டுள்ளன. கண்களை நேரம் கிடைக்கும் போதெல்லாம் க்ளாக் வைஸ் மற்றும் ஆன்டிக்ளாக் வைஸ் டைரக்ஷன்களில் மூன்று முறைகள் சுழற்ற வேண்டும்.
*கிட்டத்தில் இருக்கும் பொருளைப் பார்த்துவிட்டு, உடனடியாக தொலைவில் உள்ள ஒரு பொருளையும் பார்க்க வேண்டும்.கட்டை விரலை நடுவில் வைத்துக்கொண்டு, அதை இடவலமாகவும், வல இடமாகவும் நகர்த்தி, தலையைத் திருப்பாமல் வெறும் பார்வையை மட்டும் திருப்பிப் பார்க்க வேண்டும்.தினசரி எட்டு மணி நேரத்தூக்கம் மிகவும் அவசியம்.

மேலும் »

நக பராமரிப்பு

எழுதியவர்-   Funway
20:01:12 2014-02-25 உடல் அழகு

கை விரல் நகங்கள் இளம் சிவப்பு நிறத்தில் இருக்க வேண்டும். இதில் வெள்ளை நிறம் ரத்த சோகையையும், மஞ்சள் காமாலையையும் குறிக்கும். விரல் நகங்களுக்கு நடுவில் சொத்தை ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகி அதற்கான காரணத்தை அறிவது நல்லது.

கைப்புண்ணிற்கு கண்ணாடித் தேவையா என்பது பழமொழி. அதே போல் நம் கை விரல் நகங்களைக் கொண்டே நமது உடல் ஆரோக்கியத்தைக் காட்டும் வகையில் மனித உடல் அமைந்துள்ளது.  

மேலும் »

பற்களை எவ்விதம் பாதுகாக்குவது

எழுதியவர்-   Funway
20:00:12 2014-02-25 உடல் அழகு

*இரவில் படுக்கைக்குப் போகும் முன்னர் பற்களை துலக்குவது அவசியம். இரவில் தான் பாக்டீரியாக்கள் பற்களின் இடுக்குகளில் எஞ்சியுள்ள உணவுப்பொருட்களைச் சுற்றி ஒரு வித அமிலத்தைச் சுரக்கின்றன. அவை பற்களில் உள்ள எனாமல்களை அரித்து விடுகின்றன.
*சுத்தமான நீரால், வாயை நன்றாக அலசி கொப்பளிக்க வேண்டும். இது பற்களுக்கு இடையே மாட்டிக்கொண்ட சிறு சிறு உணவுத்துகள்களை எளிதில் அகற்றி விடும்.
*பாக்டீரியாக்களின் வெதுவெதுப்பான படுக்கையாக நாக்கு உள்ளது. அதனால், நாக்கின் மேலும், கீழும் நன்றாக சுத்தம் செய்வது அவசியம். தற்போது நாக்கைச் சுத்தம் செய்யும் வகையில் சொரசொரப்பான பிரஷ்களும் உள்ளன.
*ஆண்டுக்கு இருமுறையாவது பல் மருத்துவரிடம் சென்று பற்களை பரிசோதித்துக் கொள்ளுங்கள். அப்போதுதான் பற்களுக்கும், உடலுக்கும் உடனடியான தீர்வு கிடைக்கும்.

மேலும் »

தேடல்

Copyrights © 2014. All rights reserved. Ablywall