பிரிவுகள்

அழகு குறிப்புகள்

உடல் ஆரோக்கியம்

உறவுகள்

கதை

கவிதைகள்

சமையல் குறிப்புகள்

ஜோதிடம்

தத்துவம்

தாய்-குழந்தை

பொது அறிவு

வாழ்த்துக்கள்

வீடு பராமரிப்பு

Cinema

Tamil SMS

வடிகட்டி -  அழகு குறிப்புகள் , முக அழகு

முகப்பொலிவிற்கு

எழுதியவர்-   Funway
20:15:14 2014-02-25 முக அழகு

* உலர்ந்த ரோஜா இதழ்களுடன் சிறிது பன்னீரும் சந்தனமும் அரைத்து முகத்தில் தடவ தோலின் நிறம் பொலிவு பெறும்.

* முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை நீக்க அடிக்கடி எலுமிச்சை சாற்றை தடவ வேண்டும். தினமும் இவ்வாறு செய்வதால் முடி வளர்ச்சி குறைந்து முகம் அழகு பெறும்.

* முகத்தில் உள்ள முடிகளை அகற்ற, முட்டையின் வெள்ளை கரு, சர்க்கரை, சோளமாவு அனைத்தையும் ஒன்றாகக் கலந்து பசைபோல் ஆனதும் முகத்தில் தடவவும். காய்ந்தவுடன் மெதுவாக பிய்த்து எடுத்தால் முட்டையுடன் முடியும் எளிதில் வரும்.

* பால், கடலை மாவு, மஞ்சள், சந்தனம், அனைத்தையும் கலந்து முகத்தில் தடவி குளித்தால் சருமம் அழகாகவும், பளபளப்பாகவும் மாறும்.

* தக்காளி பழத்தை இரண்டாக நறுக்கி முகத்தில் தடவினால் சருமத்தில் உள்ள எண்ணைப் பசை குறையும்.

* மோரை முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து முகத்தைக் கழுவினால் வறண்ட சருமம் புதுப் பொலிவடையும். பழுத்த வாழைப் பழத்தை நன்றாகப் பிசைந்து முகத்தில் தடவி, 20 நிமிடம் கழித்து கழுவினால், சருமம் மிகவும் மிருதுவாகும்.

* ஆரஞ்சு பழத்தை இரண்டாக வெட்டி முகத்தில் தேய்த்து, பத்து நிமிடம் கழித்து சோப்பு போட்டு கழுவ வேண்டும். தினம் இவ்வாறு செய்து வந்தால் முகம் பளபளப்பாகவும், இளமையுடனும் இருக்கும்.

* ஒவ்வொருவருக்கும் 2 வகையான சருமம் உள்ளது. ஒன்று உலர்ந்த சருமம். மற்றது எண்ணெய் வடியும் சருமம்.  எல்லா வகையான சருமத்தையும் இந்த கோடை வெயிலில் இருந்து பாதுகாக்க வேண்டும். உலர்ந்த சருமத்திற்கு கேரட்டை நன்றாக அரைத்து ஒரு ஸ்பூன் தேன் கலந்து 20 நிமிடம் உடலில் பூசி பின் குளிர்ந்த நீரில் கழுவி விட வேண்டும். இதே போல் எண்ணை வழியும் சருமத்திற்கு மருந்து கடைகளில் இருந்து மூலிகை கலந்த பவுடரை வாங்கி பூசிக் கொள்ளலாம். இதன் மூலம் முகம் புத்தொளிபெறும்.

மேலும் »

முக அழகிற்கு

எழுதியவர்-   Funway
20:04:46 2014-02-25 முக அழகு

*சிலருக்கு தூசிகளால் முகம் களையிழந்து கறுத்து போய்விடும். அவர்கள்  ஆரஞ்சு தோலை துண்டுகளாக்கி காய வைத்து பின் பவுடராக்கிக் கொள்ளுங்கள். இந்தப் பவுடர், முல்தானிமட்டி, சந்தனம் மூன்றும் சம அளவு எடுத்து தயிருடன் கலந்து, முகத்துக்கு பேக் போட்டு பத்து நிமிடம் கழித்து கழுவ வேண்டும்.

*இவ்வாறு வாரம் ஒரு முறை இதை முகத்துக்கு போட்டு வர முகத்திற்கு பேஷியல் செய்தது போல் முகம் பிரகாசமாக ஜொலிக்க ஆரம்பிக்கும். தயிருக்குப் பதிலாக ஆரஞ்சு ஜூஸையும் பயன்படுத்தலாம். மிருதுவான சருமத்திற்கு வெளியில் செல்லும் முன் சன் பிளாக் கிரீமை தவறாமல் பயன்படுத்த வேண்டும்.
*இவ்வாறு செய்து வந்தால் முக சருமம்  பாதுகாக்கப்படும்.
ஒவ்வொருவருக்கும் 2 வகையான சருமம் உள்ளது. ஒன்று உலர்ந்த சருமம், மற்றொன்று எண்ணெய் சருமம். உலர்ந்த சருமத்திற்கு கேரட்டை நன்றாக அரைத்து அதை ஒரு ஸ்பூன் தேன் கலந்து 20 நிமிடம் உடலில் பூசி பின் குளிர்ந்த நீரில் கழுவிவிட வேண்டும்.
*இதே போல் எண்ணெய் வழியும் சருமத்திற்கு மருந்து கடைகளில் இருந்து மூலிகை கலந்த பவுடரை வாங்கி பூசி வரலாம். இதன் மூலம் முகம் படிப்படியாக ஜொலிக்க ஆரம்பிக்கும்

மேலும் »

முகப்பருக்கள் மறைய

எழுதியவர்-   Funway
20:03:45 2014-02-25 முக அழகு

*பொதுவாக பருக்கள் எண்ணெய் பதார்த்தங்களை உண்பதால் ஏற்படுகிறது.  மேலும் உடலில் உள்ள கொழுப்புப் பொருட்களாலும், மன இறுக்கம், மலச்சிக்கல் இவற்றாலும் உண்டாகிறது.  உணவுமுறை மாறு பாட்டாலும் முகப்பரு தோன்றும்.

*முகப்பருக்கள் மாறி முகம் பொலிவு பெற, முட்டையின் வெள்ளைக் கருவினை எடுத்து அதில் அரை ஸ்பூன்  பயிற்றமாவு கலந்து முகத்தில் தடவவும்.  அது காய்ந்தபின் முகத்தைப்  பால் கொண்டு கழுவி பின் நீரால் சுத்தம் செய்யவும்.  இவ்வாறு வாரம் இருமுறை செய்துவந்தால் பருக்கள் மறையும்.

*செம்பருத்திப் பூ
*ரோஜா மொட்டு
*வெள்ளரிக்காய்  சாறு

*இவற்றை எடுத்து ஒன்றாகச் சேர்த்து நீர்விடாமல் அரைத்து அதனுடன் பச்சை பயறு மாவு கலந்து குழைத்து முகத்திலும் கழுத்துப் பகுதியிலும் பூசி காய்ந்த பின் கழுவி வந்தால் கண்களைச் சுற்றிய கருவளையம், முகக்கருமை, முகப்பரு, கழுத்துப்பகுதி கருப்பு, முகத்தில் உண்டான தழும்புகள், மூக்கில் ஏற்படும் கருப்பு  போன்றவை நீங்கும்.

மேலும் »

முக அழகிற்கு / முகம் பொலிவு பெற

எழுதியவர்-   Funway
20:03:09 2014-02-25 முக அழகு

*இயற்கை அழகே அழகு.  சிலர் முகப் பொலிவு பெற வேண்டும் என்று ரசாயனம் கலந்த அழகு சாதன பொருட்களை  பயன் படுத்துவதால் இயற்கையான அழகு மாறி பல இன்னல்களை சந்திக்க நேரிடுகிறது. இக்கால கட்டத்தில் இயற்கை மூலிகை களால் ஆன அழகு சாதனப் பொருட்களைப் பயன் படுத்தி முகப் பொலிவினைப் பெறலாம். 

*சோற்றுக்கற்றாழைச் சாறு எடுத்து அதில் கார்போக அரிசி, வெந்தயம் இரண்டையும் சேர்த்து ஊறவைத்து, ஒருமணி நேரம் கழித்து நன்கு மைபோல் அரைத்து முகத்தில் பூசி அது காய்ந்த பின் சுத்தமான நீரினைக் கொண்டு முகம் கழுவி வந்தால், முகம் பொலிவு பெறும்.

மேலும் »

முகம் பளபளப்பாக இருக்க

எழுதியவர்-   Funway
19:56:09 2014-02-25 முக அழகு

*சிலருக்கு முகத்தில் காது, கால், கைகளில் நிறைய முடிகள் இருக்கும். அவர்கள் வேப்பங்கொழுந்து, குப்பை மேனி இலை, விரலி மஞ்சள் அரைத்துப் பூசி பத்து நிமிடம் உலரவிட்டு பின் கழுவினால் முடி உதிர்ந்து விடும்.
*முகத்தில் பருக்கள் இருந்தால் வெள்ளைப் பூண்டையும், துத்தி இலையையும் சம அளவு எடுத்து அதை நறுக்கி, பின் நல்லெண்ணெயில் போட்டுக் நன்கு காய்ச்சி தினசரி பருக்கள் உள்ள இடத்தில் தடவி வந்தால், விரைவில் பருக்கள் இருந்த இடம் தெரியாமல் போய்விடும்.
*உடம்பில் தழும்புகள் இருந்தால் அந்த இடத்தில அவரை இலையின் சாற்றை பூசி வந்தால் தழும்புகள் படிப்படியாக மறைய ஆரம்பிக்கும்..    
*தோல் மிருதுவாகவும், பளபளப்பாகவும் இருக்க வேண்டும் என்றால், கொத்தமல்லி இலையில் சாறு எடுத்து அதில் சிறிதளவு கஸ்தூரி மஞ்சள்தூளைக் கலந்து தோல் மீது தடவி வந்தால் தோல் மிருதுவாகவும் பளபளப்பாகவும் மாற ஆரம்பிக்கும்.

மேலும் »

தேடல்

Copyrights © 2014. All rights reserved. Ablywall