பிரிவுகள்

அழகு குறிப்புகள்

உடல் ஆரோக்கியம்

உறவுகள்

கதை

கவிதைகள்

சமையல் குறிப்புகள்

ஜோதிடம்

தத்துவம்

தாய்-குழந்தை

பொது அறிவு

வாழ்த்துக்கள்

வீடு பராமரிப்பு

Cinema

Tamil SMS

வடிகட்டி -  கவிதைகள் , நாட்டுப்புற கவிதைகள்

மனசு கொஞ்சம் வலிக்குது .....!!!

எழுதியவர்-   INIYAVAN
09:30:05 2016-03-13 நாட்டுப்புற கவிதைகள்

மனசு கொஞ்சம் வலிக்குது .....!!!
--------

பச்சை நிற உடலழகியின்...
வண்ண வண்ண பூக்கள் ....
அங்காங்கே அழகுபடுத்தும் ....
பச்சை நிற அழகியின் வதனம் ....
சுற்றும் முற்றும் பார்த்தேன் ...
தூரத்தில் யாரும் இல்லை ...
தடுப்பாரும் யாருமில்லை ....!!!

கிள்ளி எடுத்தேன் பூவை ....
தள்ளி போகமுடியாமல் ..
தன் வதனத்தை இழந்து ...
தவிர்த்த செடியின் சோகத்தை ...
இப்போ நினைத்தால் .....
மனசு கொஞ்சம் வலிக்குது .....!!!

ஆற்றங்கரைக்கு போனேன் .....
அழகான ஆற்று நீரில் கால் ....
பதித்தேன் தட்டி சென்றது மீன் ...
கூட்டம் கூட்டமாய் குடும்பத்தோடு ....
ஒற்றுமையாய் வந்தபடியிருந்தன ....!!!

என்னை மறந்தேன் -தூண்டிலில் ...
புழுவை செருகி துடிக்க துடிக்க ....
மீன் ஒன்றை பிடித்தேன் ....
இரண்டு உயிரை கொன்று ...
அன்று இன்பமடைந்தேன் .....
இப்போ நினைத்தால் .....
மனசு கொஞ்சம் வலிக்குது .....!!!

புல்வெளிக்கு விளையாட சென்றேன்.....
வண்ணமாய் பட்டாம் பூச்சிகள் ...
மனசு பட்டாம் பூச்சியாய் பறக்கவே .....
ஒரு பட்டாம் பூச்சியை பிடிக்க மனசு ....
படபடத்தது கலைத்து களைத்து ....
போராட்டத்தின் மத்தியில் பிடித்தேன்..!!!

அதன் மென்மை இறகு ...
சற்று கிழிந்தது பறக்க முடியாமல் ...
துடித்தது - பட்டாம் பூச்சியை பிடித்து ...
இன்பம் கண்ட அன்றைய இன்பத்தை ....
இப்போ நினைத்தால் .....
மனசு கொஞ்சம் வலிக்குது .....!!!

தோட்டத்துக்கு புல்பிடுங்க சென்றேன் ....
துள்ளி துள்ளி குதித்து கன்றுகுட்டியை ....
தோட்டப்பயிரை நாசமாக்குது ....
பிடித்து கட்டு மகனே என்ற கட்டளைக்கு ....
உடனே அதை பிடித்து கட்டினேன் ....!!!

கட்டியவுடன் தூரத்தில் நின்ற தன்....
தாயை " அம்மா" என்றழைத்ததை ....
என்னை விளையாட விடுகிறார்கள் ....
இல்லையென்பதுபோல் கத்திய சத்தம் ...
இப்போ நினைத்தால் .....
மனசு கொஞ்சம் வலிக்குது .....!!!

அடம்பிடித்து கிளிக்கூடு வாங்கி ....
இரவுநேரம் தென்னம் பொந்துக்குள் ....
திருட்டுத்தனமாய் தாயிடம் இருந்து ...
குஞ்சை பறித்து கூட்டில் அடைத்து ....
பழமூட்டி எண்ணைதடவி கண்ட ...
இன்பத்தை இப்போ நினைத்தால் .....
மனசு கொஞ்சம் வலிக்குது .....!!!

^
கவிப்புயல் இனியவன் 

மேலும் »

தேர் திருவிழா

எழுதியவர்-   INIYAVAN
21:22:15 2015-07-21 நாட்டுப்புற கவிதைகள்

நினைத்து பார்க்கிறேன்
கோயில் திருவிழாவை
பத்து நாள் திருவிழாவில்
படாத பாடு பட்டத்தை ...!!!

முதல் நாள் திருவிழாவிற்கு
குளித்து திருநீறணிந்து
பக்திப்பழமாய் சென்றேன்
பார்ப்பவர்கள்
கண் படுமளவிற்கு....!!!

இரண்டாம் நாள் திருவிழாவில்
நண்பர்களுடன் கோயில் வீதி
முழுவதும் ஓடித்திரிவதே வேலை
பார்ப்பவர்கள் எல்லோரும்
திட்டும் வரை ....!!!

மூன்றாம் நாள் திருவிழாவில்
மூண்டது சண்டை நண்பர்கள்
மத்தியில் - கூட்டத்துக்குள்
மறைந்து விளையாட்டு ....!!!

நாளாம் நாள் திருவிழாவில்
நாலாதிசையும் காரணமில்லாது
அலைந்து திரிவேன் ...!!!
ஐந்தாம் நாள் திருவிழாவில்
சேர்த்துவைத்த காசை
செலவளித்து விட்டு
வெறும் கையோடு இருப்பேன் ...!!!

ஆறாம் நாள் திருவிழாவை
ஆறுதலான நாளாக கருதி
வீட்டிலேயே இருந்து விடுவேன் ...!!!
காத்திருப்பேன்
தேர் திருவிழாவை -அப்பாவின்
ஆசீர் வாதத்துடன் செல்வதற்கு
அப்பாவும் படியளர்ப்பார்
அம்மாவும் படியளப்பா ....!!!

தேர் திருவிழா இறைவனின்
அழித்தல் தொழிற்பாடாம்
அழித்துவிடுவோம்
முன்னர் ஏற்பட்ட
நண்பர் பகையையும்
கொண்டு சென்ற காசையும் ...!!!

காலம் தான் மாறினாலும்
அந்த நினைவுகள் -காலம் காலமாய்
திருவிழா வரும் போது
வந்து கொண்டெ இருக்கிறது ...!!!

மேலும் »

நாட்டுப்புற கவிதை

எழுதியவர்-   Funway
12:07:18 2014-08-23 நாட்டுப்புற கவிதைகள்

வாடாதடி வண்ணக்கிளி

என் பாசம் விட்டுப்போகாதடி

பெரும் காத்து அடிச்சாலும்

மலையெல்லாம் சாயுமோடி....

மல்லிப்பூ கண்ணாலே

மனசில் இடம் புடிச்சவளே

நான் ஆசவச்சேன் உன்மேல

அய்யணாரு சாட்சியடி....

அக்கம் பக்கம் எல்லார்க்கும்

நம்ம அன்புதானே உரசலடி

அந்த கண்ணுப்பட கூடாதென்னு

வாங்கித் தந்தேன் கருகமணி....

சித்திரை போகட்டும்டி

சீக்கிரமா சேதி சொல்வேன்

சாமி துணை இருக்குதடி

நாம கலங்கி நிக்ககூடாதடி....

வெளியூரு நான் போயி

       வேலைவெட்டி பாத்து வாரேன்

மேலும் »

தேடல்

Copyrights © 2014. All rights reserved. Ablywall